search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

    • கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 16.60 மில்லி மீட்டர் மழை பதிவானது.
    • இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் நீர்மட்டம் 86.35 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவ லாக மழை பெய்தது. மாநகர பகுதிகளான பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதி களிலும், புறநகர் பகுதி களில் அம்பை, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

    மேலும் கன்னடியன் அணைக்கட்டு, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, மணிமுத்தாறு பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 16.60 மில்லி மீட்டர் மழை பதிவானது. அம்பையில் 11, கொடுமுடியாறு அணை பகுதியில் 9, நாங்குநேரி, மாஞ்சோலையில் தலா 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    ராதாபுரத்தில் 6, மணிமுத்தாறில் 5.60, நெல்லையில் 2, களக்காடு பகுதியில் 3.20, காக்காச்சியில் 5, நாலுமுக்கு பகுதியில் 4 மில்லி மீட்டர் என நேற்று மாவட்டம் முழுவதும் 80.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    அணைகளின் நீர்மட்டம்

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் நீர்மட்டம் 86.35 அடி, சேர்வலாறு அணை 91.33 அடி, மணிமுத்தாறு 55.30 அடி, கொடுமுடியாறு 46.25 அடி, நம்பியாறு 12.49 அடியாக உள்ளது.

    Next Story
    ×