நெல்லை மாநகராட்சி புதிய கமிஷனர் பொறுப்பேற்பு-சந்திப்பு பஸ் நிலைய கட்டிட பணிகள் விரைந்து முடிக்கப்படும் என உறுதி

சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியிட மாறுதலில் சென்றார். பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகர பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
புதிய கமிஷனராக நியமிக்கப்பட்ட தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ்
புதிய கமிஷனராக நியமிக்கப்பட்ட தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ்
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியிட மாறுதலில் சென்றார். இதையடுத்து நெல்லை மாநகராட்சி புதிய கமிஷனராக நியமிக்கப்பட்ட தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ் இன்று பொறுப் பேற்றுக் கொண்டார். இவர் நெல்லை மாநகராட்சியின் 30-வது கமிஷனர் ஆவார். அவர் இன்று காலை பொறுப்பேற்ற பின்னர் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்து கையெழுத்திட்டார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகர பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகள் துரிதப் படுத்தப்படும். மாநகர பகுதியில் மழைநீரானது சாலைகளில் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொ ள்ளப்படும். பஸ் நிலை யங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். புதிதாக கட்டப்பட்டு வரும் சந்திப்பு பஸ் நிலைய கட்டிட பணியை விரைந்து நிறைவு செய்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து புதிய கமிஷ னர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவை துணை கமிஷ னர் தானுமூர்த்தி, உதவி கமிஷனர்கள், பொறி யாளர்கள், சுகாதார அலுவ லர்கள், சுகாதார ஆய்வா ளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com