என் மலர்
நீங்கள் தேடியது "Disabled children"
- மன வளர்ச்சி குன்றிய 34 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர், இரண்டு பஸ்ஸில் சுற்றுலா புறப்பட்டனர்.
- கலெக்டர் வினீத் கொடி அசைத்து பயணத்தை துவக்கிவைத்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நேற்று கல்விச்சு ற்றுலா அழைத்துச்செ ல்லப்பட்டனர். பாரதி வித்யாஸ்ரமத்தை சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய 34 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்,இரண்டு பஸ்ஸில் சுற்றுலா புறப்பட்டனர்.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் வினீத் கொடி அசைத்து பயணத்தை துவக்கிவைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
குழந்தைகள், கோவை வ.உ.சி., பூங்கா உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு, மாலையில் மீண்டும் திருப்பூர் திரும்பினர்.
- சென்னிமலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
- குழந்தைகள் இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.
சென்னிமலை:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் சென்னிமலை அடுத்துள்ள அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இம்மருத்துவ முகாமில் கை, கால் இயக்க குறைபாடு, மன நல குறைபாடு, காது, மூக்கு, தொண்டை மற்றும் பார்வை குறைபாடு உடைய பிறந்த குழந்தை 18 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இம்முகாமில் தேசிய அடையாள அட்டை, இலவச உதவி உபகரணங்கள், இலவச அறுவை சிகிச்சை போன்ற வற்றுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
மேலும் இம்மருத்துவ முகாமில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு சென்னிமலை வட்டார வள மையம் மேற்பார்வையாளர் கோபிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- ராதாபுரம் நித்திய கல்யாணி வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
- முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
வள்ளியூர்:
ராதாபுரம் நித்திய கல்யாணி வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு ஜெயக்கொடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பாமா வரவேற்று பேசினார். முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை நிபுணர், மனநல மருத்துவர், முட நீக்கியல் நிபுணர் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்தனர். முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்குதல், முதல்-அமைச்சர் காப்பீடு திட்டம், இலவச பஸ் பயண சலுகை, இலவச ரயில் பயண சலுகை, உதவி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் மாத உதவி தொகை ஆகியவை வழங்கப்பட்டன.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் செய்து இருந்தனர்.






