search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Camp for"

    • சென்னிமலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
    • குழந்தைகள் இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    சென்னிமலை:

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் சென்னிமலை அடுத்துள்ள அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    இம்மருத்துவ முகாமில் கை, கால் இயக்க குறைபாடு, மன நல குறைபாடு, காது, மூக்கு, தொண்டை மற்றும் பார்வை குறைபாடு உடைய பிறந்த குழந்தை 18 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் தேசிய அடையாள அட்டை, இலவச உதவி உபகரணங்கள், இலவச அறுவை சிகிச்சை போன்ற வற்றுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

    மேலும் இம்மருத்துவ முகாமில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு சென்னிமலை வட்டார வள மையம் மேற்பார்வையாளர் கோபிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • அனைத்து துறைகளின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில், பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைத்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் 2 ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 104 கிராமங்களை ஒருங்கிணைத்து 57 இடங்களில் அனைத்து துறைகளின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில், பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைத்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.

    இதில் வருகின்ற 20-ந் தேதி மொடக்குறிச்சி தாலுக்காவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி, லக்காபுரம், அந்தியூர் தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சென்னம்பட்டி ஆகிய இடங்களிலும்,

    21-ந் தேதி மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி, கணபதிபாளையம், அந்தியூர் தாலுக்காவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பட்லூர் ஆகிய இடங்களிலும், 22-ந் தேதி மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி, பொன்னம் பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, குருவரெட்டியூர் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அகில இந்திய அளவில் மாற்றுத்திறனா ளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கட்டாயம் என்பதினால் அதற்கான பதிவு, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை அனைத்து துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதால், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் 2 ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

    ×