திருக்குறுங்குடி அருகே தொழிலாளியின் மோட்டார் சைக்கிள் திருட்டு

காந்திபுரத்தில் நடந்த காளிபூஜையில் கலந்து கொள்ள ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருக்குறுங்குடி அருகே தொழிலாளியின் மோட்டார் சைக்கிள் திருட்டு
Published on

களக்காடு:

மாவடி, உடையடிதட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 39). தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் டோனாவூர் அருகே உள்ள காந்திபுரத்தில் நடந்த காளிபூஜையில் கலந்து கொள்ள தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை தசரா குழு பிறை அருகே நிறுத்தி விட்டு, காளி பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்ம நபர் திருடி சென்றதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தொழிலாளியின் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com