search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EB Employees"

    • ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வாரியம் மூலம் நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும்.
    • போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பீர் முகமது ஷா தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    மின்வாரியத்தின் ஒப்பந்தத்திற்கு மாறாக இ-டெண்டர் முறையில் பணியாளர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டு களுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு வாரியம் மூலம் நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் வாக்கு றுதிகளை நிறைவேற்றும் விதமாக ஒப்பந்த ஊழிய ர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் இன்று பாளை தியாகராஜ நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பீர் முகமது ஷா தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செய லாளர் முருகன் தொடக்க உரையாற்றினர். கோட்ட செயலாளர்கள் மந்திர மூர்த்தி, இளைய ராஜா, சிவராஜ், வேல்முருகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். திட்ட செய லாளர் கந்தசாமி, பொரு ளாளர் நாகையன் தென்காசி மாவட்ட செய லாளர் அயூப் கான் உள்ளிட்டோர் விளக்க வுரை ஆற்றினர். மாநிலச் செயலாளர் வண்ணமுத்து நன்றி கூறினார்.

    • மாநிலம் முழுவதும் இன்று நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு நெல்லை மாநகர பகுதி முழுவதிலும் உப மின் கோட்ட நிலையங்கள் முன்பு மின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பிலும் இன்று தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழக அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து இன்று மின்வாரிய ஊழியர் கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    மாநிலம் முழுவதும் இன்று நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு நெல்லை மாநகர பகுதி முழுவதிலும் உப மின் கோட்ட நிலையங்கள் முன்பு மின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பிலும் இன்று தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    பாளை தியாகராஜ நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு பொறியாளர் கழகத்தைச் சேர்ந்த முருகன் தலைமை தாங்கினார். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் சி.ஐ.டி.யு கந்தசாமி, பொறியாளர் இசக்கி பாண்டி, பெருமாள்சாமி, அர்ஜுனன், முருகன், கார்த்திக் குமார், பீர் முகமது ஷா, கண்ணன், முத்துக்குமார், கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் அலுவலகம் முன்பு அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

    • நகராட்சி தூய்மை பணியாளர்களும் அப்புற படுத்துவதில்லை.
    • மரக்கிளைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.

    உடுமலை :

    உடுமலையில் மின் நிலையம் மற்றும் உயரழுத்த தாழ்வழுத்த பாதைகளில் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெறும் .அந்த நேரத்தில் அந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் .மின் பணியாளர்களால் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். மேலும் அந்த நேரத்தில் அந்த பகுதிகளில் மின் கம்பிகள் மீது உரசும் அளவிற்கு உயரமாக வளர்ந்துள்ள மரக்கிளைகள் மின் பணியாளர்களால் வெட்ட படுகிறது. ஆனால் அந்த மரக்கிளைகளை அதே இடத்தில் போட்டுவிட்டு செல்கின்றனர்.

    அவற்றை நகராட்சி தூய்மை பணியாளர்களும் அப்புற படுத்துவதில்லை. அதனால் மரக் கிளைகளில் உள்ள இலைகள் காய்ந்து மரக்கிளையின் குச்சிகள் நீட்டிக்கொண்டு உள்ளது. இது போன்று வஉசி.வீதி, சர்தார் வீதி ,அன்சாரி வீதி உட்பட பல இடங்களில் உள்ளது. வெட்டிப் போடப்பட்ட மரக்கிளைகள் அதே இடங்களில் கிடைக்கின்றன.

    இதனால் அந்தந்த வீதியில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் அந்த பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வரும்போது இருசக்கர வாகனத்தை ஓரமாக ஓட்டிச் செல்லும்போதும் மரக்கிளைகள் இருசக்கர வாகனத்தில் வருவோர் மீது உரசுகிறது. இதனால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

    மின் பணியாளர்களால் வெட்டப்படும் மரக்கிளைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டியது மின் பணியாளர்களின் பணியா அல்லது நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணியா என்பதில் வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் குழப்பமடைந்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் வெட்டி போடப்படும் மரக்கிளைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிரை துச்சமென நினைத்து பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சப்பாத்தி தயாரித்து கொடுத்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். #GajaCyclone #Vijayabaskar
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் 4 ஆயிரத்து 62 குக்கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான மின் கம்பங்களும், 8 ஆயிரத்து 300 மின் மாற்றிகளும் முழுமையாக சேதம் அடைந்தன.

    அவற்றை சீரமைக்கும் பணியில் தமிழகம், கேரளா, கர்நாடாக மாநில மின் வாரிய ஊழியர்கள் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் உயிரை துச்சமென மதித்து மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக மின் விநியோகம் செய்யும் வகையில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    இதில் கடந்த வாரம் கீரனூர் பகுதியில் ஆபத்தான முறையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் பரிதாபமாக இறந்தார். இதுபோன்று உயிரை பணயம் வைத்து மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருவோரை அமைச்சர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளுக்காக வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில்  இருந்து வந்துள்ள ஊழியர்கள் மாத்தூர் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கேயே உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.

    புதுக்கோட்டை அருகே மாத்தூர் பள்ளியில் தங்கியுள்ள மின் வாரிய ஊழியர்களுக்கு சப்பாத்தி தயாரித்து கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர், அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட காட்சி.

    இந்தநிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சென்ற அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மாத்தூரில் மின்வாரிய ஊழியர்கள் தங்கியுள்ள பள்ளிக்கு சென்றார். அவர்களது பணியை பாராட்டிய பின்னர் இரவு உணவாக அவர்களுக்கு சப்பாத்தி தயாரித்து, தானே சுட்டு பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து தானும் சாப்பிட்டார்.

    இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்னும் 3 நாட்களுக்குள் 100 சதவீதம் மின்சார விநியோகம் செய்யப்படும். இதுவரை 4062 குக்கிராமங்களில் 2000 கிராமங்களில் மின்சார விநியோகம் சீரடைந்துள்ளது. இதற்கான பணிகள் கடந்த 10 நாட்களில் இரவு, பகல் பாராது நடந்துள்ளது. இதில் பல்வேறு சவால்களை மின் வாரிய ஊழியர்கள் சந்தித்துள்ளனர்.

    அதேபோல் பழுதான, சேதமடைந்த 8300 மின் மாற்றிகளில் 5100 சரி செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ளவைக்கு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் நிவாரண மற்றும் மீட்பு பணிகளை பாராட்டியுள்ளது எங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கிறது.

    இதன் மூலம் நாங்கள் உறங்கும் நேரத்தை குறைத்துக்கொண்டு உழைக்கும் நேரத்தை அதிகரித்துக் கொள்வோம். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #Vijayabaskar
    அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஊர்பொதுமக்கள் சார்பில் இரவு, பகலாக உழைத்த மின்சார வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தினர். #GajaCyclone
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள அரசு கட்டிடங்கள், பொது வழிப்பாட்டு தலங்கள் மற்றும் சாலைகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. புயலுக்கு தப்பிக்க முடியாமல் வீடுகளில் உள்ள மேல்கூரைகள், சேதம் அடைந்தன.

    கிராம பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதிகளில் மின்சார பணிகள் முடிந்து படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அன்னவாசல் பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து மின்சார வாரிய பணியாளர்கள் மின்கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


    இந்த நிலையில் நேற்று அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஊர்பொதுமக்கள் சார்பில் இரவு, பகலாக உழைத்த மின்சார வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தினர்.

    இதுகுறித்து மின்வாரிய பணியாளர் ஒருவர் கூறியதாவது:-

    நாங்கள் 40 பேரும் சேலம் பகுதியை சேர்ந்தவர்கள். இரண்டு பிரிவுகளாக பிரிந்து அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில் தங்கி சுற்றுப்புற பகுதிகளில் வேலை பார்த்து வருகிறோம். இப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் நாங்கள் வேலை முடிந்து வந்ததும் எங்களை உற்சாகப்படுத்தி எங்களிடம் நன்கு பழகி வருகின்றனர்.

    நாங்கள் தினமும் காலையில் வேலைக்கு சென்று அந்த பகுதிகளில் உணவுகளை சாப்பிட்டுவிட்டு இரவு தான் மண்டபத்திற்கு வருவோம். நேற்று இரவு வரும்பொழுது பொதுமக்கள் சிலர் மண்டபத்தின் வாசலில் நின்று வரவேற்றனர். பின்னர் சாப்பிட வாருங்கள் என அழைத்தனர். அங்கு சென்று பார்த்தால் தடபுடலான பிரியாணி விருந்து அளித்தனர். இதை பார்த்த எங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது என்றார்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்களது ஊரில் கஜா புயல் பாதித்த போது பல மின்கம்பங்கள் சாய்ந்தது. அதனால் 5 நாட்களுக்கு மேலாக மின்சாரம் இல்லை. இதனையடுத்து வெளி மாவட்டத்தில் இருந்து வந்த பணியாளர்கள் இரவு, பகலாக வேலை செய்து படிப்படியாக மின்சாரம் வழங்கினர்.

    இதனையடுத்து அவர்களுக்கு ஒரு வேளையாவது நல்ல உணவு அளிக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி அவர்களிடம் சொல்லாமலேயே எல்லாம் தயார் செய்து இரவு அவர்கள் வந்தவுடன் மகிழ்ச்சி பொங்க பரிமாறினோம் என்றனர். #GajaCyclone
    ×