மின்பணியாளர்களால் வெட்டப்படும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

நகராட்சி தூய்மை பணியாளர்களும் அப்புற படுத்துவதில்லை.மரக்கிளைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை :

உடுமலையில் மின் நிலையம் மற்றும் உயரழுத்த தாழ்வழுத்த பாதைகளில் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெறும் .அந்த நேரத்தில் அந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் .மின் பணியாளர்களால் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். மேலும் அந்த நேரத்தில் அந்த பகுதிகளில் மின் கம்பிகள் மீது உரசும் அளவிற்கு உயரமாக வளர்ந்துள்ள மரக்கிளைகள் மின் பணியாளர்களால் வெட்ட படுகிறது. ஆனால் அந்த மரக்கிளைகளை அதே இடத்தில் போட்டுவிட்டு செல்கின்றனர்.

அவற்றை நகராட்சி தூய்மை பணியாளர்களும் அப்புற படுத்துவதில்லை. அதனால் மரக் கிளைகளில் உள்ள இலைகள் காய்ந்து மரக்கிளையின் குச்சிகள் நீட்டிக்கொண்டு உள்ளது. இது போன்று வஉசி.வீதி, சர்தார் வீதி ,அன்சாரி வீதி உட்பட பல இடங்களில் உள்ளது. வெட்டிப் போடப்பட்ட மரக்கிளைகள் அதே இடங்களில் கிடைக்கின்றன.

இதனால் அந்தந்த வீதியில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் அந்த பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வரும்போது இருசக்கர வாகனத்தை ஓரமாக ஓட்டிச் செல்லும்போதும் மரக்கிளைகள் இருசக்கர வாகனத்தில் வருவோர் மீது உரசுகிறது. இதனால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

மின் பணியாளர்களால் வெட்டப்படும் மரக்கிளைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டியது மின் பணியாளர்களின் பணியா அல்லது நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணியா என்பதில் வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் குழப்பமடைந்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் வெட்டி போடப்படும் மரக்கிளைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com