என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
    • பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சூபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பண்டாரவாடை ஊராட்சி மன்றம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு பொது மருத்துவம் மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் நடைப்பெற்றது.

    முகாமை, பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா துவக்கி வைத்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆலோ சனைகள், அறிவுரைகள் வழங்கினார்.

    முகாமில் பொதும ருத்துவம், கர்ப்பிணிகளுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, பிசியோதெரபி, மன நல மருத்துவம், சித்த மருத்துவம் என பல்வேறு மருத்துவத்திற்கு ஆலோசனைகளும், மருத்துவமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி. அய்யாராசு, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, கழக நிர்வாகி அறிவழகன், பாபநாசம் ஒன்றிய தலைவர் சுவாமிமலை பேரூர் தலைவர் புர்கான் அலி , வட்டார மருத்துவ அலுவலர் தீபக் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

    • முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
    • வீட்டில் உள்ள தொட்டிகளில் சிறிய தொட்டிகளில் பிளீசிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி 36-வது வார்டில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தெரு பகுதியில் டெங்கு தடுப்பு பணி மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டாக்டர் முத்துக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து, தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    முகாமில் மாநகராட்சி கவுன்சிலர் கண்ணுக்கினியாள், துப்புரவு ஆய்வாளர் ஜோசப் சேவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளாஸ்டிக் கப், தேங்காய் சிரட்டை, டயர், உடைந்த பாத்திரங்கள் ஆகியவற்றில் கொசுப்புழு உற்பத்தியாகாத வண்ணம் அகற்றப்பட்டது.

    மேலும் வீட்டில் உள்ள தொட்டிகளில் சிறிய தொட்டிகளில் பிளீசிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டதுடன், கொசுப்புழு உற்பத்தி ஆகாத வண்ணம் தொட்டியை மூடி வைக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • எதிர்பாராத விதமாக பாரதிதாசன் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • செம்மொழி விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வெள்ளாம்பெரம்பூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் மகன் பாரதிதாசன் (வயது 38 ). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். பின்னர் திருப்பூர் செல்வதற்காக வீட்டில் இருந்து தஞ்சாவூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து செம்மொழி விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினார். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. ரெயிலானது தஞ்சை அருகே ஆலக்குடி - பூதலூர் ரெயில் நிலையத்துக்கு இடையே சென்றபோது எதிர்பாராத விதமாக பாரதிதாசன் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த பாரதிதாசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பாரதிதாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிரேத பரிசோதனை முடிந்து பாரதிதாசன் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இது குறித்து பாரதிதாசன் மனைவி அபிராமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வியாழக்கிழமை நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.
    • மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தஞ்சாவூர் செயற்பொறியாளர் கலைவேந்தன் வெளியிட்டு ள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நாளை ( வியாழக்கிழமை ) நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சாவூர் செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1 வல்லம் ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, சுள்ளப்பெரம்பூர், திருக்கானூர்பட்டி வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், புறநகர் திருவையாறு, நகர் திருவையாறு, புறநகர் திருக்காட்டுப்பள்ளி, நகர் திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி பகுதி அலுவலக ங்களைச் சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டதா என ஆய்வு நடை பெற்றது.
    • 131 நிறுவனங்களில் தொழிலாளா் துணை ஆய்வா்கள், உதவி ஆய்வா்கள் ஆய்வு செய்தனா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கமலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, தொழிலாளா்களின் சம்மதத்துடன் இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என கடைகள், நிறுவன ங்கள், உணவு நிறுவ னங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 131 நிறுவ னங்களில் தொழிலாளா் துணை ஆய்வா்கள், உதவி ஆய்வா்கள் ஆய்வு செய்தனா்.

    இதில், சட்ட விதிகளி ன்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 68 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 44 முரண்பாடுகளும், மோட்டாா் நிறுவன ங்களில் 6 முரண்பாடுகளும் என மொத்தம் 118 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மே ற்கொள்ள ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புனித அந்தோணியார் தொடக்க பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது .
    • மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஒன்றியம் மொன்னையம்பட்டி பஞ்சாயத்து புனித அந்தோணியார் தொடக்க பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது .

    இதனை முன்னிட்டு புனித அந்தோணியார் மேல்நிலைப் தஞ்சாவூர் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் லயன்ஸ் கிளப் ஆப் தஞ்சாவூர் ஆதவன் சங்கம் மற்றும் ஏகம் பவுண்டேஷன் இணைந்து ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் முன்னிலையில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன .

    மேலும் இயற்கை காய்கறிகள், வீட்டு தோட்டம் அமைத்தல் மற்றும் பள்ளிக்கு தேவையான மூன்று மருத்துவ முதல் உதவி பெட்டி வழங்கப்பட்டது.

    மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இவைகள் அனைத்தையும் பாரத சிற்பி டாக்டர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இதில் தஞ்சாவூர் டிராகன் சிட்டோ ரியு கராத்தே பள்ளியின் வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை பெற்றனர்.
    • ஆண்கள் குமித்தே பிரிவில் தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவன் அபி பாலன் தங்கம் பதக்கம் வென்றார்.

    தஞ்சாவூர்:

    உலக சிட்டோ ரியு கராத்தே கூட்டமைப்பு ஜகார்த்தா இந்தோனேசியாவில் 10-வது சர்வதேச அளவிலான சிட்டோ ரியு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

    இதில் தஞ்சாவூர் டிராகன் சிட்டோ ரியு கராத்தே பள்ளியின் வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை பெற்றனர்.

    ஆண்கள் குமித்தே பிரிவில் தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவன் அபி பாலன் தங்கம் பதக்கம் வென்றார். பெண்கள் குமித்தே பிரிவில் பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரி தேவதர்ஷினி வெண்கலம் வென்றார்.

    சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரி சந்திப் குமார், கோச் கரண், பொன்னியின் செல்வன் ஆகியோர் இறுதிச்சுற்று வரை சென்றனர்.

    மேலும் போட்டியில் வடுவூர் நிவேதா, தஞ்சாவூர் பவதாரிணி, அரியலூர் நடராஜன், தாமரை இன்டர்நேஷனல் பள்ளி ஜெய்தேவ், வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி ஜெய் ஜோஷிகா ஆகியோர் போட்டியில் பங்கு பெற்றனர்.

    வெற்றி பெற்ற வீரர் ,வீராங்கனைகளை தலைவர் அருண் மச்சையா, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் பாராட்டினர்.

    • தஞ்சையில் மட்டும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் 5-ந்தேதி நடக்கிறது.
    • காலை 10 மணிக்கு அமைப்பு செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    தஞ்சாவூர், அக்.4-

    தஞ்சாவூர் மத்திய, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்டங்களின் அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடக அரசிடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீரை பெறமுயற்சி மேற்கொள்ளாத தி.மு.க.அரசை கண்டித்தும், குறுவை சாகுபடியை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காமல் துரோகம் செய்ததை கண்டித்தும், கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்தும், அ.திமு.க. சார்பில் டெல்டா மாவட்டங்களில் 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் தஞ்சையில் மட்டும் அ.தி.மு.க.ஆர்ப்பாட்டம் 6-ந்தேதிக்கு பதில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. தஞ்சை பனகல் கட்டிடம் எதிரே நாளை (வியாழக்கி ழமை) காலை 10 மணிக்கு அமைப்பு செயலா ளர்களும், முன்னாள் அமைச்சர்க ளுமான ஆர்.காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. எனவே மாவட்ட, ஒன்றிய, பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாய பெருங்குடி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • திருநாகேஸவரம் சன்னாபுரம் கிராமத்தில் பொது மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பட்டாவிற்காக பலபோராட்டங்களை நடத்தி வந்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸவரம் சன்னாபுரம் கிராமத்தில் உள்ள மணல் மேட்டு தெரு, சிவன் திருமஞ்சன வீதி, பனந்தோப்பு தெற்கு தெரு,மேல தெரு, சிவன் சன்னதி மேல மட விளாகம், கீழ மட விளாகம், தெற்கு மட விளாகம்,வடக்கு மட விளாகம், தோப்பு தெரு, நேதாஜி தெரு,எடத்தெரு, செட்டி தெரு, உப்பிலியப்பன் கோவில் திருமஞ்சன வீதி, சந்தன மாரியம்மன்கோவில் தெரு, பழைய செட்டி தெரு, புளியந்தோப்பு, பழைய சேச தெரு, பழைய குடியான தெரு, உப்பிலியப்பன்கோவில் நான்கு வீதிகள் ஆகிய பகுதிகளில் சுமார் 2,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு இது வரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர்கள் பட்டாவிற்காக பலபோராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் மேலவீதியில் அரசு பட்டா வழங்க வேண்டும் என கூறி, நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தாசில்தார் வெங்கடேசன், திருவிடைமருதுார் போலீஸ் துணை சூப்பிரண்டு, ஜாபர் சித்திக் ஆகியோர் திருநாகேஸ்வரம் சன்னாபுரம் குடியிருப்போர் சங்கத் தலைவர் ஆறுமுகம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, வரும் 20ம் தேதி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள வியாபாரிகளின் உதவியுடன் 8 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் செயல்படும் போலீசார் உதவி மையத்தில் பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழைய பஸ் நிலையத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இந்த உதவி மையத்தில் இருந்து நேரடியாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    இருந்தாலும் சிலர் போக்கு வரத்து விதிமுறைகளை மதிக்காமல் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவது டன் இதை தட்டிக் கேட்கும் வியாபாரிகளிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை வீடியோவில் பார்க்கும் போலீசார் ஒவ்வொரு முறையும் நேரில் சென்று சரி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஒலிபெருக்கி அமைக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

    அதன்படி பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள வியாபாரிகளின் உதவியுடன் 8 ஒலிபெருக்கிகள் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

    இதன் செயல்பாட்டை தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தொடங்கி வைத்தார்.

    இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிள்ளையார்பட்டியில் மாமன்னன் இராஜராஜன் சோழன் கட்டிய ஸ்ரீ ஹரித்ரா விநாயகர் கோவில் உள்ளது
    • விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகில் உள்ள பிள்ளையார்பட்டியில் மாமன்னன் இராஜராஜன் சோழன் கட்டிய ஸ்ரீ ஹரித்ரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தொடர்ந்து ஒன்பது சங்கடஹர சதுர்த்தி அன்று ஹரித்ரா விநாய கருக்கு நவதானியங்கள் முடிச்சு சமர்ப்பித்து வழிபட்டால் கடன் தொல்லை களை நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஹரித்ரா விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது .

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தார்கள் .

    • தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு புரிந்துணர்வு நடந்தது.
    • தமிழக அரசின் மானிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

    தஞ்சாவூர்:

    உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் , முதலீட்டார்கள் முன்னிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    முதலீட்டாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்த இலக்கீடு தஞ்சை மாவட்ட த்திற்கு 667 நபர்களுக்கு ரூ.1000 கோடி நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது.

    இதையடுத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை தொடங்கு விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கிட மாபெரும் கடன் வழங்கு விழா நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன் வரவேற்று பேசினார்.

    அப்போது அவர் மாவட்ட தொழில் மையத் திட்டங்களை விளக்கியதோடு தமிழக அரசு மானிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் முதலீட்டு மானியமாக தொழில் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி மானியம் வழங்கப்படுகிறது.

    சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை கடனுதவி பெற்ற தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் 5 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை வளர்க்க வும் முதலீட்டாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்த வாயிலாக தஞ்சை மாவட்டத்தில் 23 பேரிடம் இருந்து ரூ.697 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கடன் வழங்கு முகாம் மூலமாக 512 பேருக்கு ரூ.121.93 கோடி கடன் வங்கியில் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ஆல்வின் ஜோசப், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் நாயர், இந்தியன் வங்கி மேலாளர் ஆகியோர் வங்கி திட்டங்களை விளக்கினர்.

    இதில் மகளிர் திட்ட உதவி இயக்குனர், தாட்கோ மேலாளர், தொழில் முனைவோர்கள், பயனாளிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×