என் மலர்
சேலம்
- இருவழி புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்தது.
- 4 வழிச்சாலையில் போக்கு வரத்து தொடங்கு வதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது.
வாழப்பாடி:
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சேலம்–-உளுந்துார்பேட்டை இடையிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலையில், சேலம் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய 8 இடங்களில் அமைக்கப் பட்டுள்ள புறவழிச்சாலைகள், இரு வழிச்சாலையாகவே உள்ளன.
இச்சாலைகள் அகலம் குறைவாக அபாயகரமான வளைவுகளுடன் அமைந்து ள்ளதால் இச்சாலையில் பயணிப்போரிடம் 'விபத்து அச்சம்' தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, வாழப்பாடி பகுதியில் முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான 4 கி.மீ துார புறவழிச்சாலையில், போதிய எச்சரிக்கை பதாகைகள், சாலையோர மின் விளக்குகள் மற்றும் இரவில் ஒளிரும் சாலை யொட்டிகள் அமைக்கப்படா ததால் அடிக்கடி விபத்தும், உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, இருவழி புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், சேலம்-–உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள புறவழிச்சாலைகளை, 4 வழிச்சாலையாக தரம் உயர்த்திட மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தேசிய நெடுஞ் சாலைத்துறை, சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற்றுள்ள தனியார் நிறுவனத்திற்கு வலியுறுத்தியது.
இதனையடுத்து, இருவழிச் சாலைகளை 4 வழிச்சாலை யாக தரம் உயர்த்தும் பணி 3 மாதங்களாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
வாழப்பாடி பகுதியில் புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதால், வருகிற மே மாதத்திற்குள் 4 வழிச்சாலையில் போக்கு வரத்து தொடங்கு வதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் வாழப்பாடி பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இணைப்புச்சாலை
வாழப்பாடி பகுதியில் 4 வழிச்சாலை அமைப்பதால், வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் பகுதியில் இருந்து நீதிமன்றம் வழியாக கிழக்குகாடு குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பிரதான சாலை துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வழியின்றி அவதிக்குள் ளாகியுள்ளனர்.
எனவே, தேசிய நெடுஞ்சாலையின் தெற்கு புறம் கிழக்குக்காடு புகையி லைக்காரர் தோட்டத்தில் இருந்து தெற்கத்தியார் தோட்டம் வரையும், வடக்குபுறம் ராதாகிருஷ்ணன் தோட்டத்தில் இருந்து பால் கூட்டுறவு சங்கம் வரையும் இணைப்புச்சாலை அமைத்து, பால் கூட்டுறவு சங்கம் அருகில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை சுரங்க பாலத்தோடு கிழக்குக்காடு சாலையை குடியிருப்பு பகுதியுடன் இணைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை.
- தற்போது உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை பஞ்சாப் மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது.
- தமிழ்நாடு முதலமைச்சரும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கருப்பூர்:
தமிழகத்தில் 26-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் சார்பிலும், லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் குமார், பொருளாளர் செந்தில், துணை தலைவர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஓமலூர், மேட்டூர் தாலுகா அளவிலான லாரி உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது என பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தொடர்ந்து சுங்க கட்டணம் வருடத்திற்கு இரண்டு முறை உயர்த்தி வருகின்றனர். தற்போது சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல ரூ.43 ஆயிரம் சுங்க கட்டணம் செலுத்தி வந்தோம். தற்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்க கட்டணத்தால் ரூ.47 ஆயிரத்து 300 சுங்க கட்டணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அசாம் செல்ல சுங்க கட்டணம் பழைய கட்டணம் ரூ.40 ஆயிரம் கட்டி வந்தோம். தற்போது உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தால் மேலும் 4 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சேலத்தில் இருந்து குஜராத்திற்கு செல்லும்போது சுங்க கட்டணமாக ரூ.42 ஆயிரம் கட்டி வந்தோம். தற்போது மேலும் ரூ.4 ஆயிரம் கூடுதலாக கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை பஞ்சாப் மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதுபோல தமிழ்நாடு முதலமைச்சரும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் 60 கிலோ மீட்டருக்கு இடையில் உள்ள 33 சுங்கச்சாவடிகள் அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து தமிழக அமைச்சர்கள் மத்திய மந்திரியை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். ஆனால் இதுவரை அந்த சுங்கச்சாவடிகளும் அகற்றப்படவில்லை.
எனவே உடனே 33 சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும். இது போல ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் சுங்க கட்டணம் வசூலிப்போம் என மத்திய மந்திரி தெரிவித்திருக்கிறார். தற்போது ஒரு வருடத்திற்கு சுங்க கட்டணம் மூலம் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது என மத்திய மந்திரி தெரிவித்திருக்கிறார்.
ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்திவிட்டால் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வருவாய் வரும். இதனால் லாரி உரிமையாளர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்பு அடைவார்கள். இதனால் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 102.81 அடியாக உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1,410 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர்வரத்தை காட்டிலும், அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 102.81 அடியாக உள்ளது.
- சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனர் ஆக பணியாற்றி வந்த மாடசாமி இன்று பணி ஓய்வு பெறுகிறார்.
- கௌதம் கோயல் சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
சேலம்:
சென்னை தலைமை கூடுதல் செயலாளர் நேற்று ஏ எஸ் பி களுக்கு பதவி உயர்வு மற்றும் துணை கமிஷனர்களை மாறுதல் செய்து உத்தரவிட்டார்.சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனர் ஆக பணியாற்றி வந்த மாடசாமி இன்று பணி ஓய்வு பெறுகிறார்.அதனைத் தொடர்ந்து மதுரை மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக பணியாற்றிய கௌதம் கோயல் சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இதேபோல் வேலூர் மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் துணை சூப்பிரண்டு குணசேகரன் சேலம் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள். சேலம் மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் பணியாற்றிய மாடசாமி இன்று பணி ஓய்வு பெறுவதால் இன்று காலை முதல் சேலம் மாநகரத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- இன்று அதிகாலை 1.45 மணி அளவில், சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் தனது நண்பர் பிரகாஷ் என்பவருடன் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
- 2 வாலிபர்கள், ரஞ்சித்குமார் பாக்கெட்டில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடினர்.
சேலம்:
சேலம் மெய்யனூர் வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 28). இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.
இன்று அதிகாலை 1.45 மணி அளவில், சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் தனது நண்பர் பிரகாஷ் என்பவருடன் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இவர்களுக்கு அருகில் வந்து அமர்ந்த 2 வாலிபர்கள், ரஞ்சித்குமார் பாக்கெட்டில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடினர்.
திடீரென கண் விழித்த ரஞ்சித்குமார், இதை பார்த்து கூச்சலிட்டார். அதை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, அந்த 2 வாலிபர்களையும் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் சேலம் பொன்னம்மா பேட்டை திப்பு நகர் பகு தியை சேர்ந்த சாகுல் ஹமீது (32), சேலம் டவுன் பகு தியைச் சேர்ந்த வினோத்கு மார் (27) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் பட்ட றையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற இவர், நேற்று காலை வந்து பார்த்தார்.
- வெல்டிங் வயர் உட்பட ரூ.1.67 லட்சம் மதிப்புள்ள வயர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் செவ்வாய் பேட்டை கந்தசாமி பிள்ளைக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் கிச்சிப்பாளையம் சிவன் கரடு பகுதியில் லாரிக்கு பாடி கட்டும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் பட்ட றையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற இவர், நேற்று காலை வந்து பார்த்தார். அப்போது பட்ட றையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ், உள்ளே சென்று பார்த்தபோது வெல்டிங் வயர் உட்பட ரூ.1.67 லட்சம் மதிப்புள்ள வயர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து ரமேஷ், கிச்சிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.
- எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதைக் கண்ட அந்த பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இறந்தவர் ரெயி லில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும், அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் பட்டியல் எடுத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் நடந்தது.
- துணை ஆணையாளர் அசோக்குமார், துணை மேயர் சாரதா தேவி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
ேசலம்:
சேலம் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் நடந்தது. துணை ஆணையாளர் அசோக்குமார், துணை மேயர் சாரதா தேவி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். கவுன்சிலர்கள் சொல்வதை யாரும் கேட்பதில்லை என்று சரமாரரியாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். மேலும் மண்டல தலைவர் கலையமுதன் பேசுகையில், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள இடம் பஸ் நிலைய பயன்பாட்டிற்கு தான், அதில் பொருட்காட்சி நடத்த கூடாது, அதிகாரிகள் மாநகராட்சி பணிகளில் பல தவறுகள் செய்கிறார்கள் என்று கூறினார்.
அதற்கு மேயர் பதில் அளித்து பேசுகையில் அதிகாரிகள் யார் தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மண்டல தலைவர் கலையமுதன் நீண்ட நேரம் பேசியதால் அதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.
மேலும் தனி குடிநீர் திட்டம் முழுவதும் தி.மு.க. கொண்டு வந்ததாக கலையமுதன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுனசிலர்கள் எதிர்கட்சி தலைவர் யாதவமூர்த்தி தலைமையில் வெளி நடப்பு செய்தனர்.
பின்னர் யாதவமூர்த்தி கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.140 கோடியில் தனி குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் தி.மு.க. ஆட்சியில் ரூ.185 கோடியிலும், தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.235 கோடியிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்கும் போது மேலும் ரூ. 60 லட்சம் ஓதுக்கீடு செய்து மேட்டூர் அணையில் 20 அடி தண்ணீர் இருந்தாலும் சேலத்தில் மேடான பகுதி உள்பட அனைத்து பகுதிக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
தனி குடிநீர்திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் முழுமையாக கொண்டு வந்தததாக கூறுகிறார்கள். இதனை எதிர்த்து வெளி நடப்பு செய்கிறோம் என்றார்.
- நேற்று முன்தினம் வழிபறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மண் எண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி மூணாம் கரடு அடுத்த பொம்மனசெட்டிக்காடு அருகே போலீஸ்காரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கோழி பாஸ்கர். இவரை நேற்று முன்தினம் வழிபறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கோழி பாஸ்கர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக கூறி அவரது தாயார் மகாலட்சுமி (வயது 64), மனைவி உஷா (42), மகள் கவுசல்யா (22) மற்றும் உறவினர்கள் லதா (40), கீதா (40), தாரணேஸ்வரி (21) ஆகியோர், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மண் எண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனைக் கண்ட போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்தி டவுன் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சேலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில், சேலம் டவுன் போலீசார் பாஸ்கரின் மனைவி உள்பட 6 பெண்கள் மீதும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
- கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தற்போது சந்தியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு வாந்தியுடன், தலை சுற்றல் ஏற்பட்டது. கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.
இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
சாக்கடை கால்வாயில் கர்ப்பிணி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தியாவின் உடலை பார்த்து அவரது கணவர், உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.
- தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
- கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தற்போது சந்தியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு வாந்தியுடன், தலை சுற்றல் ஏற்பட்டது. கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.
இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
சாக்கடை கால்வாயில் கர்ப்பிணி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தியாவின் உடலை பார்த்து அவரது கணவர், உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.
- கிருஷ்ணன் (வயது 57). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.
- இந்த நிலையில் சம்பவத்தன்று தமிழரசியின் உறவினர் ஒரு வருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவருக்கு ஜெபம் செய்யும் படி கிருஷ்ணனிடம் கேட்டுக் கொண்டார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் ஜாகீர்அம்மாபாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 57). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த தமி ழரசி என்கிற தமிழ்ச்செல்வி என்ப வர், கடனுக்கு அரிசி வாங்கி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தமிழரசியின் உறவினர் ஒரு வருக்கு உடல்நிலை சரி யில்லை என்றும், அவருக்கு ஜெபம் செய்யும் படி கிருஷ்ண னிடம் கேட்டுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து கிருஷ்ணன் ஜெபம் செய்து முடித்த பின், அந்த நபரை, அவரது வீட்டில் விட்டு விட்டு வருவதாக கூறிச் சென்றார்.
கிருஷ்ணன் வீட்டை விட்டு சென்றதும், அவரது வீட்டு பீரோவில் இருந்த செயின், வளையல், மோதிரங்கள் உட்பட 13 3/4 பவுன் தங்க நகைகளை தமிழரசி திருடிச் சென்று விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து கிருஷ்ணனின் மனைவி மலர்விழி, கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






