என் மலர்tooltip icon

    சேலம்

    • எடப்பாடி கோழிப் பண்ணை பகுதியை சேர்ந்த வர் பச்சமுத்து (வயது 58). கூலி தொழிலாளி.
    • கடந்த 20-ந் தேதி சேலம் அரசு மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி கோழிப் பண்ணை பகுதியை சேர்ந்த வர் பச்சமுத்து (வயது 58). கூலி தொழிலாளி. இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 20-ந் தேதி சேலம் அரசு மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் திடீரென இவர் உயிரிழந்தார். இதை அறிந்த பச்சமுத்துவின் உறவினர்கள் இன்று மருத்துவமனை டீன் அலுவலகத்தை முற்றுகை யிட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து இறந்த பச்சமுத்துவின் மகன் கூறும்போது, எனது தந்தைக்கு சி.டி. ஸ்கேன் எடுத்தனர். அதேபோல விபத்தில் அனுமதிக்கப் பட்ட, எனது தந்தை பெயர் கொண்ட மற்றொரு பச்சமுத்து என்பவருக்கும் சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. இருவரின் மருத்துவ அறிக்கை மாறிய தால் எனது தந்தைக்கு தர வேண்டிய சிகிச்சை வேறு ஒரு நபருக்கும், தலையில் அடிபட்டு விபத்தில் அனு மதிக்கப்பட்ட பச்சமுத்து என்பவருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையை எனது தந்தைக்கும் அளித்த தால், அவர் உயிரிழந்து விட்டார்.

    தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து, எனது இறப்புக்கு தந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்று மருத்துவர்கள் கவனக்கு றைவாக செயல்பட்டால், எவ்வாறு ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நம்பி வந்து சிகிச்சை பெற முடியும்? எனவே மருத்து வர்கள் கவனமுடன் செயல்பட்டு சிகிச்சை செய்ய வேண்டும். மேலும் எனது தந்தை உடலை பிரேத பரிசோ தனை செய்யாமல் தர வேண்டும் என தெரி வித்தார். மருத்துவர் தவறான சிகிச்சை அளித்த தன் காரணமாக, தந்தை இறந்ததாக கூறி மருத்துவ மனை டீன் அலுவலகத்தை மகன் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட முயன்ற சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

    • முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மேட்டூர் கிளை கூட்டம், மேட்டூர் பெரிய பூங்காவில் நடைபெற்றது.
    • ரூ.3000 உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்குவது.

    மேட்டூர்:

    தமிழ்நாடு மருத்துவர் நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மேட்டூர் கிளை கூட்டம், மேட்டூர் பெரிய பூங்காவில் நடைபெற்றது.

    இதில், மேட்டூர் நகர தலைவர் எஸ்.பி.ராஜா தலைமை வகித்தார். சங்க செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், வீட்டுமனை இல்லாத சங்க உறுப்பினர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வீட்டுமனை வழங்க வேண்டும். சங்க உறுப்பினர்கள் இறந்தால் அவருடைய குடும்பத்தாருக்கு சங்கம் சார்பில் வழங்கப்பட்டு வந்த ரூ.3000 உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்குவது. சங்க உறுப்பினர்களின் குடும்ப பெண்கள் பிரசவ செலவிற்கு ரூ.3000, திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ரூ.1500 சங்கத்தின் சார்பாக வழங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

    • 22 மற்றும் 23- வது வார்டு சுமங்கலி சில்க்ஸ் பிரிவு சாலையிலிருந்து, பாப்பாபட்டி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையினை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
    • சாலை குறுகிய அளவில் இருந்து வருவதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தன.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட 22 மற்றும் 23- வது வார்டு சுமங்கலி சில்க்ஸ் பிரிவு சாலையிலிருந்து, பாப்பாபட்டி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையினை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலை குறுகிய அளவில் இருந்து வருவதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தன.

    இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனை நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்து அப்பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது . இதனை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    • காகாபாளையம் அருகே உள்ள கனககிரி கிராமம் உள்ளது.
    • அரசு புறம்போக்கு மந்தைவெளி நிலத்தில் வேலப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த சிலர் பிள்ளையார், கன்னிமார், காளியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம், காகாபாளையம் அருகே உள்ள கனககிரி கிராமம் உள்ளது. இங்குள்ள வேலப்பன் கோவில் அருகே உள்ள அரசு புறம்போக்கு மந்தைவெளி நிலத்தில் வேலப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த சிலர் பிள்ளையார், கன்னிமார், காளியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

    மேலும் 15 தென்னை மரங்களை நட்டும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சங்ககிரி வட்டாட்சியர், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ் பிரபு சப்-இன்ஸ்பெக்டர் ரகு உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு வழிபாடு நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்பு அங்கிருந்த சாமி சிலைகளை அகற்றி டெம்போவில் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 50-வது கோட்டத்துக்கு உட்பட்ட ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய 30 அடி சாலையை ஒரு சிலர் ஆக்கிரமித்து உள்ளதால் சாலை வசதியும் இல்லாமல் இருந்து வருகின்றார். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடமும், மண்டலக் அலுவலகத்திலும் ஏற்கனவே பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியு றுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்த நிலையில், இதுவரை நட வடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது சாக்கடை நீர் வீட்டிற்குள் புகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், வேதனை அடைந்த மக்கள், இன்று கொண்டலாம்பட்டி 50-வது வார்டு முருகன் தலைமையில் திடீரென மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மேயரின் காரின் முன்பு திடீரென அமர்ந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காரின் டிரைவர், காரை எடுத்தார். இதனை அடுத்து அடிப்படை வசதி செய்து தரக்கோரி கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மேயர் ராமசந்திரனை சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். உங்கள் கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்ததை அடுத்து, தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதி ஏதும் இல்லாமல் அவதிப்பட்டு வருகி றோம். கடந்த சில நாட்களாக சாக்கடை நீர் வெளியே வரு வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நிர்வாகம் உடனடியாக சரி செய்து தர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அடுத்த கட்டமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். 

    • கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
    • பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும்.

    சேலம்:

    ெரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ெரயில்வே நிர்வாகம் சிறப்பு ெரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி ஹூப்ளி- தஞ்சாவூர் சிறப்பு ெரயில் (வண்டி எண் 07325) வருகிற 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமைதோறும் ஹூப்ளி ெரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு கரூர், திருச்சி வழியாக மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் தஞ்சாவூர்- ஹூப்ளி சிறப்பு ெரயில் (வண்டி எண் 07326) வருகிற 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் செவ்வாய்க்கிழமைதோறும் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி ஜங்ஷன், திருச்சி கோட்டை, கரூர் வழியாக இரவு 11.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் வழியாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

    இந்த தகவலை சேலம்

    ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள சுங்கச்சா வடியில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் சார்பிலும், லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது என பலமுறை வலியுறுத்தி வருகிறோம்.

    கருப்பூர்:

    தமிழகத்தில் 26-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி களில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள சுங்கச்சா வடியில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் சார்பிலும், லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் குமார், பொருளாளர் செந்தில், துணை தலைவர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் ஓமலூர், மேட்டூர் தாலுகா அளவிலான லாரி உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷ ங்கள் எழுப்பப்பட்டன.

    பின்னர் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது என பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தொடர்ந்து சுங்க கட்டணம் வருடத்திற்கு இரண்டு முறை உயர்த்தி வருகின்ற னர். தற்போது சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல ரூ.43 ஆயிரம் சுங்க கட்ட ணம் செலுத்தி வந்தோம். தற்போது உயர்த்தப் பட்டுள்ள சுங்க கட்ட ணத்தால் ரூ.47 ஆயிரத்து 300 சுங்க கட்டணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து அசாம் செல்ல சுங்க கட்டணம் பழைய கட்டணம் ரூ.40 ஆயிரம் கட்டி வந்தோம். தற்போது உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தால் மேலும் 4 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டி ருக்கிறது. சேலத்தில் இருந்து குஜராத்திற்கு செல்லும்போது சுங்க கட்டணமாக ரூ.42 ஆயிரம் கட்டி வந்தோம். தற்போது மேலும் ரூ.4 ஆயிரம் கூடுதலாக கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை பஞ்சாப் மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதுபோல தமிழ்நாடு முதல்-அமைச்ச ரும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழகத்தில் 60 கிலோ மீட்டருக்கு இடையில் உள்ள 33 சுங்கச்சாவடிகள் அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து தமிழக அமைச்சர்கள் மத்திய மந்திரியை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். ஆனால் இதுவரை அந்த சுங்கச்சாவடிகளும் அகற்றப்படவில்லை.

    எனவே உடனே 33 சுங்க சாவடிகள் அகற்றப்பட வேண்டும். இது போல ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் சுங்க கட்டணம் வசூலிப்போம் என மத்திய மந்திரி தெரிவித்திருக்கிறார். தற்போது ஒரு வருடத்திற்கு சுங்க கட்டணம் மூலம் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது என மத்திய மந்திரி தெரிவித்திருக்கிறார்.

    ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்திவிட்டால் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வருவாய் வரும். இதனால் லாரி உரிமையாளர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்பு அடைவார்கள். இதனால் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான, சுயம்புவாக எழுந்தருளிய சுகவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
    • சொர்ணாம்பிகை தாயாருக்கும் பல்வேறு விதமான சிறப்பு விழாக்கள் நடைபெறும்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான, சுயம்புவாக எழுந்தருளிய சுகவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விதமான சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெறும்.

    சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் சொர்ணாம்பிகை தாயாருக்கும் பல்வேறு விதமான சிறப்பு விழாக்கள் நடைபெறும். சொர்ணாம்பிகை தாயாருக்கு ஆண்டுதோறும் 5 நவராத்திரிகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியும், பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரியும் மிகவும் பிரசித்தி பெற்ற விழாக்காலமாகும்.

    அதன்படி, பங்குனி மாதத்தின் வசந்த நவராத்திரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.

    வசந்த நவராத்திரி முதல் நாள் லட்சார்ச்சனை தொடங்கி, நாள்தோறும் 10 ஆயிரம் அர்ச்சனை செய்யப்பட்டது. இறுதி நாளான லட்சார்ச்சனை நிறைவு நாளை முன்னிட்டு, அதிகாலை முதல் சுகவனேஸ்வரருக்கும், சொர்ணாம்பிகை தாயாருக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து மாலையில் கோ பூஜை செய்யப்பட்டு, பின்னர் 500 கிலோ பூக்கள் மற்றும் செம்பு டாலர்களுடன் மேள தாளம் முழங்க திருக்கோவிலை பக்தர்கள் வலம் வந்தனர். பின்னர், சொர்ணாம்பிகை தாயாருக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் என பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்த பின் தங்க கவச சாத்துப்படி செய்து அரளி, சாமந்தி, தாமரை, ரோஜா உள்ளிட்ட 500 கிலோ வாசனை மலர்களால் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க லட்சார்ச்சனை முடிவுற்றது.

    தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட, சொர்ணாம்பிகை தாயாரின் உருவம் பதித்த செம்பு டாலரை அம்மனின் பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வசந்த நவராத்திரி வைபவத்தை காண பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் சொர்ணாம்பிகை தாயாரின் உருவம் பதித்த டாலர் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • கொரோனோவின் தாக்கம் தற்போது தீவிரமடைந்து வருகிறது.
    • தமிழகத்தில் நேற்று 140 பேர் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று இறந்தும் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக கொரோனா பெருந்தொற்று நோய் கட்டுக்குள் வந்தது.

    இந்த நிலையில் கொரோனோவின் தாக்கம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழகத்தில் நேற்று 140 பேர் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சேலத்தில் 13 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் பொது சுகாதாரத்துறை சார்பில் இன்று முதல் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட புற நோயாளிகள், உள் நோயாளிகள் என அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    அதன் அடிப்படையில் சேலம் அரசு மருத்துவமனையில் இன்று உள் நோயாளிகள், புற நோயாளிகள் மட்டுமல்லாது மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பணிபுரிகின்றனர். அரசு மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், இல்லை என்றால் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    4 சக்கர வாகனத்தில் வரும் நபர்கள் மற்றும் மருத்துவர்களை மருத்துவமனை பணியாளர்கள் கட்டாயப்படுத்துவதில்லை. பொது சுகாதாரத் துறையினர் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் ஒரு சிலர் முக கவசம் அணியாமல் வருவதையும் பார்க்க முடிகிறது.

    எனவே கொரோனா பெருந்தொற்று நோயை கட்டுக்குள் கொண்டு வர நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.
    • ஒரு மாதத்தில் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகி உள்ளது. அதன்படி ஒரே மாதத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    சேலம்:

    கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. சேலம் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால் சுகாதார துறையினர், மருத்துவ துறையினர் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

    சேலம் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் இறுதிவரை கொரோனா பாதிப்பு இல்லை. பின்னர் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது.

    பின்பு பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியது. மாவட்டம் முழுவதும் கடந்த மாத இறுதியில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 26 ஆகவும், குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 257 ஆகவும் இருந்தது. 1764 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    ஆனால் ஒரு மாதத்தில் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகி உள்ளது. அதன்படி ஒரே மாதத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கபப்ட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே சிகிச்சை பெற்ற 5 பே ர்குணம் அடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவைட்க்கையை தீவிரப்படுத்தி உள்ளது.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கலந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
    • இதனால் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும், இரவில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஏற்காடு:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிரறது. சில பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்தாலும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கலந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும், இரவில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில், நேற்று திடீரென மழை பெய்ய தொடங்கியது. சூறைக்கற்றுடன் சுமார் அரை மணி நேரம் பெய்த இந்த மழையின் காரணமாக, ஏற்காடு - நாகலூர் சாலையில் ராட்சச சவுக்கு மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

    இதன் காரணமாக ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பள்ளி மட்டும் வேலை முடிந்து பொதுமக்கள் வீட்டுக்கு செல்லும் நேரம் என்பதால், சாலையின் இருபுறமும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    மின்கம்பி மீது மரம் விழுந்ததால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்துறை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வீட்டிற்கு செல்ல முடியாமல், அங்கே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    • டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (52), என்பவரிடம் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற சென்றுள்ளார்.
    • பழனியப்பனுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஏமாற்றி, மருத்துவம் பார்த்தாக கூறப்படுகிறது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த டேனிஷ்பேட்டை பாலமேடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் பழனியப்பன் (வயது 36). இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (52), என்பவரிடம் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற சென்றுள்ளார்.

    போலி டாக்டர்

    அப்போது அவர், பழனியப்பனுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஏமாற்றி, மருத்துவம் பார்த்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசில் பழனியப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி போலி டாக்டர் முருகேசனை கைது செய்தனர்.

    4 ஆண்டு ஜெயில்

    இந்த வழக்கு விசாரணை, ஓமலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் நடுவர் நீதிமன்ற நீதிபதி முருகேசனுக்கு 4 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூ.6 ஆயிரம் விதித்து தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து முருகேசன் சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். சேலம் நீதிமன்றமும் தண்டனையை உறுதிப்படுத்தியது.

    தலைமறைவு

    இதனைத் தொடர்ந்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜராக கடந்த மார்ச் 13-ம் தேதி உத்தரவு போடப்பட்ட நிலையில், முருகேசன் ஆஜராகாமல் தலை முறைவாக இருந்தார்.

    இதனை யடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பழனிசாமி மற்றும் போலீசார், தலைம றைவாக இருந்த போலி மருத்துவர் முருகேசனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டார்.

    ×