என் மலர்tooltip icon

    சேலம்

    • கோவிந்தசாமி (வயது 58). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சுங்கவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
    • சொகுசு கார் எதிர்பாராத விதமாக கோவிந்தசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி அருகே உள்ள முத்தபசுவானபுரம் பகுதி சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 58). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சுங்கவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிவகாமி சேலம் பள்ளப்பட்டி உள்ள ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று சிவகாமியை வீட்டிற்கு அழைத்து வருவ தற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் கோவிந்தசாமி பள்ளப்பட்டி நோக்கி கோவை-சேலம் தேசிய நெய்க்காரப்பட்டி அடுத்த பட்டர்பிளை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த சொகுசு கார் எதிர்பாராத விதமாக கோவிந்தசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சொகுசு காரை ஓட்டி வந்த வாலிபர் காரை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த தகவல் அறிந்த கொண்ட லாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தசாமியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கார் ஓட்டுநரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • 5 பவுன் நகை கடன் தள்ளுபடிக்கு, சேலம் உள்பட 4 மாவட்டங்களுக்கு ரூ.206.66 கோடி விடுவிக் கப்பட்டுள்ளது.
    • இந்த தொகையை அரசே கூட்டுறவு நிறுவனங்களுக்கு தவணை முறையில் வழங்குகிறது.

    சேலம்:

    கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடிக்கு, சேலம் உள்பட 4 மாவட்டங்களுக்கு ரூ.206.66 கோடி விடுவிக் கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 2021-ம் ஆண்டு மார்ச் வரை வழங்கப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட தங்க நகை கடன்களை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்து, உத்தரவிட்டது.

    இதற்கான நிபந்தனைகளில் கீழ் தேர்வான ரூ.14.62 லட்சம் பேரின், ரூ.5013 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தொகையை அரசே கூட்டுறவு நிறுவனங்களுக்கு தவணை முறையில் வழங்குகிறது. அதன்படி 2021-2022ம் ஆண்டு ரூ.1215 கோடி வழங்கப்பட்டது.

    நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடி வழங்கப் பட்டது. தற்போது 2-ம் கட்டமாக ரூ.1000 விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. மாவட்ட வாரியாக கூட்டுறவு சங்கங்கள் வாரியாக இத் தொகை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

    இத்தொகையினை மத்திய கூட்டுறவு வங்கி களின் மேலாண்மை இயக்குனர்கள் அச்சங்கங் களுக்கு உடனடியாக விடுவிக்க அறிவுறுத்தப் படுகிறார்கள் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, சேலம் மாவட்டதுக்கு ரூ.112.63 கோடியும், நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ.46.99 கோடியும் விடுவிக்கப் பட்டது. இதேபோல், தர்மபுரி மாவட்டத்துக்கு ரூ.29.60 கோடியும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ.19.44 கோடியும் என மொத்தம் ரூ.208.66 கோடி நகைகடன் தள்ளுபடிக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தொகை மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங் களுக்கும் நகர கூட்டுறவு வங்கிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வாழப்பாடி பகுதி கிராமங்களில் இன்றளவிலும் நாட்டுரக காய்கறிகளை பாரம்பரிய முறையில் ஏரா ளமான விவசாயிகள் பயி ரிட்டு வருகின்றனர்.
    • இந்த தக்காளியை விற்பனை செய்யாமல், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் இன்றளவிலும் நாட்டுரக காய்கறிகளை பாரம்பரிய முறையில் ஏரா ளமான விவசாயிகள் பயி ரிட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக பல்வேறு வகையான வீரிய ஒட்டு வகை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளி மற்றும் காய்கறிகள் பயிரிப்படுவது அதிகரித்துள்ளது.

    ஆனால், இலந்தைப்பழம் அளவிற்கு சிறிய உருவிலான ருசி மற்றும் சாறு மிகுந்த அரிய வகையான சிறு தக்காளியை கைவிடாமல், வாழப்பாடி பகுதி விவசாயிகள் சிலர் பயரிட்டு வருகின்றனர். இந்த தக்காளியை விற்பனை செய்யாமல், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்ற னர்.

    • சேலம் தொங்கும் பூங்கா அருகில் மாவட்ட நூலகம் செயல்பட்டு வருகிறது.
    • அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென மாணவிகளிடம் கேலி கிண்டலில் ஈடுபட்டார்.

    சேலம்:

    சேலம் தொங்கும் பூங்கா அருகில் மாவட்ட நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கல்லூரி மாணவ-மாணவிகள் அடிக்கடி வந்து புத்தகங்களை படிப்பது வழக்கம்.

    சம்பவத்தன்று மாணவிகள் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென மாணவிகளிடம் கேலி கிண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் நூலகத்தி லிருந்து உடனடியாக வெளியேறினர்.

    மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதுகுறித்த தகவலின் பேரில் அஸ்தம்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவு களை ஆய்வு செய்தனர்.

    அப்போது மாணவிகளிடம் கேலி கிண்டல் செய்தவர் சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி. காலனி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் சரத்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. அவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • பத்மாவதி (வயது 38). இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
    • இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் திருவாக்க வுண்டனூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி பத்மாவதி (வயது 38). இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஏற்காடு வணிகர்கள் நலச்சங்கத்தின் 17-வது ஆண்டு தொடக்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • நகராட்சிக்கு இணை யான அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட சங்க வளர்ச்சி சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஏற்காடு:

    ஏற்காடு வணிகர்கள் நலச்சங்கத்தின் 17-வது ஆண்டு தொடக்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் எஸ்.கே.பெரியசாமி, செயலாளர் வர்கீஸ், இளைய பெருமாள், பொருளாளர் சந்திரதாசன் மற்றும் திருமுருகன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, வணிகர்களின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சங்க வளர்ச்சி குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.

    இதில், ஊராட்சி கடை களுக்கான அரசாணை யினை மறுபரிசீலனை செய்து நகராட்சிக்கு இணை யான அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட சங்க வளர்ச்சி சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் சங்க செயலாளர் ஜெயராமன், பொருளாளர் பாலாஜி, ஆலோசகர்கள் சரவணன், கணேசன், சீஜூ, சதானந்தம், புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள், ஏற்காடு பகுதி வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் 31-ந் தேதி நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடி முன்பு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி தலைமையில், சுங்க கட்டணம் உயர்வு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சங்ககிரி:

    இந்தியா முழுவதும் வருடந்தோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 1-ந்தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

    மேலும் தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் 31-ந் தேதி நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனையொட்டி, சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடி முன்பு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி தலைமையில், சுங்க கட்டணம் உயர்வு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணி, திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி, திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மோகன்குமார், பொருளாளர் செங்குட்டுவேலு, துணை தலைவர் சின்னத்தம்பி, இணைச் செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    அவர்கள் மத்திய அரசை கண்டித்து கையில் பதாகைகளை வைத்துக் கொண்டு கோஷங்கள் எழுப்பி சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு ஏற்படும். லாரி உரிமையாளர்கள் டிரைவர்கள் ஆகியோர்கள் கடுமையாக பாதிப்பு ஏற்படுத்தும். ஏற்கனவே டீசல் விலை உயர்வினால் லாரி தொழில் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. இந்த நிலையில் சுங்க கட்டணம் உயர்வினால் மேலும் பாதிப்பு ஏற்படுத்தும்.

    எனவே சுங்க கட்டண உயர்வினால் சேலத்தில் இருந்து குஜராத் மற்றும் டெல்லி ஆகிய இடங்களுக்கு லாரி மூலம் சரக்கு ஏற்றி செல்லும்போது ஏற்கனவே செலுத்திய கட்டணத்தை விட தற்போது கூடுதலாக ரூ.4500 வரை சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். எனவே ஒன்றிய அரசு சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பெட்ரோல் மற்றும் டீசலை திருடி வந்தது தெரியவந்தது.
    • இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    சேலம்:

    ஏற்காடு அடிவாரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் (பங்க்) நடத்தி வருபவர் ராஜேந்திரன். இவரது விற்பனை நிலையத்தில் அய்யன் திருமாளிகை பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (25) கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கில் இருந்து தனியாக பம்பு வைத்து பெட்ரோல் மற்றும் டீசலை திருடி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகார் தெரிவித்த ராஜேந்திரனுக்கு சிலம்பரசன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்தும் ராஜேந்திரன் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

    • ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
    • குருத்தோலை பவனி நடைபெற்றது.

    ஆத்தூர்:

    கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் 40 நாட்கள் சாம்பல் புதனில் தொடங்கி வரும் ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகையோடு முடிவடைகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

    ஜெருசலேம் நகரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து ஒலிவ மரக்கிளைகளைக் கையில் ஏந்தி தாவிது மகனுக்கு ஓசன்னா, ஆண்டவர் பேரால் வருபவர் ஆசி பெற்றவர் என ஆர்ப்பரித்துக் கூறி பவனி வந்தனர்.

    அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை பவனி ஆனது கொண்டாடப்படுகிறது. இந்த குருத்தோலை ஞாயிறு திருப்பலியின் மூலம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட புனித வாரம் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. இதையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

    • மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 102.81 அடியாக இருந்தது. இன்று காலை நீர்மட்டம் சரிந்து 102. 79 அடியானது.
    • நேற்று அணைக்கு 1410 கன அடி தண்ணீர் வந்தது. இன்று அணைக்கு வினாடிக்கு 1562 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.

    இந்த நிலையில் சில பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால் ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்தது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 102.81 அடியாக இருந்தது. இன்று காலை நீர்மட்டம் சரிந்து 102. 79 அடியானது.

    நேற்று அணைக்கு 1410 கன அடி தண்ணீர் வந்தது. இன்று அணைக்கு வினாடிக்கு 1562 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    • மேட்டூர் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அல்லது பழைய ஒப்பந்ததாரருக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியில் 99 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்ற பணியாளர்களு டன் சேர்ந்து தூய்மைப் பணியினை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த ஒப்பந்த பணியா ளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு இன்று பணி வழங்கப்படவில்லை என தெரிய வருகிறது.

    இதனை கண்டித்து மேட்டூர் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதற்கு மாற்றாக புதிய ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

    அல்லது பழைய ஒப்பந்ததாரருக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும். ஆனால் இது எதுவுமே நடந்ததாக தெரியவில்லை என்றனர்.

    இதற்கிடையே, ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பணியினையும் நிரந்தர பணியாளர்களே மேற்கொண்டு வருவதால், மேட்டூரில் துப்புரவு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    • அசோக்குமார் (வயது 46). இவர் காந்தி ஸ்டேடியத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
    • வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர், இன்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெரு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 46). இவர் காந்தி ஸ்டேடியத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர், இன்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இது குறித்து அசோக்குமார் கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×