என் மலர்
நீங்கள் தேடியது "Killed by a car"
- கோவிந்தசாமி (வயது 58). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சுங்கவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
- சொகுசு கார் எதிர்பாராத விதமாக கோவிந்தசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சேலம்:
சேலம் கொண்ட லாம்பட்டி அருகே உள்ள முத்தபசுவானபுரம் பகுதி சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 58). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சுங்கவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிவகாமி சேலம் பள்ளப்பட்டி உள்ள ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று சிவகாமியை வீட்டிற்கு அழைத்து வருவ தற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் கோவிந்தசாமி பள்ளப்பட்டி நோக்கி கோவை-சேலம் தேசிய நெய்க்காரப்பட்டி அடுத்த பட்டர்பிளை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த சொகுசு கார் எதிர்பாராத விதமாக கோவிந்தசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சொகுசு காரை ஓட்டி வந்த வாலிபர் காரை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த தகவல் அறிந்த கொண்ட லாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தசாமியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கார் ஓட்டுநரை வலை வீசி தேடி வருகிறார்கள்.






