மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மேட்டூர் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அல்லது பழைய ஒப்பந்ததாரருக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும்.
மேட்டூர் பஸ் நிலையத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
மேட்டூர் பஸ் நிலையத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
Published on

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியில் 99 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்ற பணியாளர்களு டன் சேர்ந்து தூய்மைப் பணியினை மேற்கொண்டு வந்தனர்.

இந்த ஒப்பந்த பணியா ளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு இன்று பணி வழங்கப்படவில்லை என தெரிய வருகிறது.

இதனை கண்டித்து மேட்டூர் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதற்கு மாற்றாக புதிய ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

அல்லது பழைய ஒப்பந்ததாரருக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும். ஆனால் இது எதுவுமே நடந்ததாக தெரியவில்லை என்றனர்.

இதற்கிடையே, ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பணியினையும் நிரந்தர பணியாளர்களே மேற்கொண்டு வருவதால், மேட்டூரில் துப்புரவு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com