என் மலர்tooltip icon

    சேலம்

    • ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்ப தற்காக ரெயில்வே நிர்வா கம் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, சேலம் வழியாக சென்னை எழும்பூ ருக்கு சிறப்பு ரெயிலை இயக்குகிறது.
    • திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 12,45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

    சேலம்:

    மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, விஷு பண்டிகைகள் மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, சேலம் வழியாக சென்னை எழும்பூ ருக்கு சிறப்பு ரெயிலை இயக்குகிறது.

    அதன்படி திருவனந்த புரம்- சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06044) நாளை (புதன்கிழமை) மற்றும் 12-ந் தேதி ஆகிய நாட்களில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 6.52 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக மதியம் 12,45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (06043) வருகிற 6-ந் தேதி மற்றும் 13-ந் தேதி ஆகிய நாட்களில் சென்னை எழும்பூரில் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடையும் பின்னர் இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவ னந்தபுரம் சென்றடையும்.

    இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவ லகம் தெரிவித்துள்ளது.

    • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவை தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
    • இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 1572 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 1561 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 1500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவை தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 102.77 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 102.75 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    • சிவதாபுரம் பகுதியை சேர்ந்த எழிலரசி. இவர் தனது தங்கையுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
    • தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த எழிலரசி. இவர் தனது தங்கையுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில மண் எண்ணெய் பாட்டில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அதனை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது எழிலரசி கூறுகையில், நானும், எனது கணவர் பூபதியும் கடந்த 29-ந் தேதி நெய்க்காரப்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது, உறவினர் ஒருவடன் சேர்ந்து நான்கு பேர் வந்து, இரும்பு கம்பியால் கணவரை தாக்கி வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

    தற்போது எனது கணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    எனவே, மண் எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய வந்தோம். மேலும் தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு நேற்று சொந்த ஊரான சேலத்துக்கு வந்தார்.
    • தமிழகம் முழுதும் பல்வேறு பகுதியில் இருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு நேற்று சொந்த ஊரான சேலத்துக்கு வந்தார். அப்போது அ.தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    சேலம் நெடுஞ்சாலை நகரில் வீட்டில் அவரை இன்று தமிழகம் முழுதும் பல்வேறு பகுதியில் இருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சீர்வரிசை பொருட்களுடன் சேலத்திற்கு வந்தனர். இந்த சீர் வரிசையில் கன்று குட்டி ,ஆடு, கோழி, தென்னங்கன்றுகள், கரும்பு உட்பட ஏராளமான பொருட்கள் இடம் பெற்றிருந்தன .

    விஜயபாஸ்கர் தலைமையில் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தங்கி உள்ள சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதி முழுவதும் மக்கள் கூட்டமாய் காணப்பட்டது.

    • 17-ம் ஆண்டு விழா மற்றும் உலக நுகர்வோர் தினவிழா நேற்று சேலம் அஸ்தம்பட்டி சண்முகா மருத்துவமனை கலையரங்கத்தில் நடந்தது.
    • நுகர்வோர் குரல் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.

    சேலம்:

    சேலம் நுகர்வோர் குரல் அமைப்பின் 17-ம் ஆண்டு விழா மற்றும் உலக நுகர்வோர் தினவிழா நேற்று சேலம் அஸ்தம்பட்டி சண்முகா மருத்துவமனை கலையரங்கத்தில் நடந்தது. நுகர்வோர் குரல் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.

    ஜெய்ராம் கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத், சேலம் வக்கீல்கள் சங்க செயலாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், சண்முகா மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் பன்னீர்செல்வம், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும். சேலம் முள்ளுவாடி கேட் மேம்பால பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக உணவு பாதுகாப்பு மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியி டப்பட்டது. நுகர்வோர் குரல் துணைச்செயலாளர் துரைராஜ், விழா வரவேற்பு குழு துணைத்தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் அழகிரி நன்றி கூறினார்.

    • மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற செம்மறி ஆடுகளை, வழக்கம் போல் இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து வைத்துள்ளார்.
    • மர்ம விலங்கு கடித்து பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் அருகே உள்ள தர்ம கிணறு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    நேற்று மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற செம்மறி ஆடுகளை, வழக்கம் போல் இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து வைத்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலையில் செல்வராஜின் மனைவி சந்திரா, எழுந்து பார்த்தபோது, பட்டியில் இருந்த 6 ஆடுகள், மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. மேலும் சில ஆடுகளுக்கு உடலில் காயம் ஏற்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்தவுடன், செல்வராஜ், கால்நடை மருத்துவரை அழைத்து வந்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார்.

    மேலும் மர்ம விலங்கு கடித்து பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஆடுகளை கடித்த மர்ம விலங்கு எது? என்று விசாரணை நடந்து வருகிறது. வனத்துறையினர் விரைந்து வந்து மர்ம விலங்கின் கால் தடம் பதிவாகி உள்ளதாக என்று ஆய்வு செய்து வருகிறார்கள். 

    • கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
    • இதனால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 1562 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 1572 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணை நீர்மட்டம் 102.77 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் பட்சத்தில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது மாம்பழம் தான்.
    • அந்த வகையில் சேலத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் மாம்பழம் சீசன் களைக்கட்டி இருக்கும்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது மாம்பழம் தான். அத்தகைய மாம்பழங்கள் சேலத்தில் இருந்து வெளி ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சேலத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் மாம்பழம் சீசன் களைக்கட்டி இருக்கும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் வ.உ.சி. பழ மார்க்கெட், மண்டிகளுக்கு மாம்பழம் வரத்து அதிக அளவில் இருக்கும்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே மாம்பழ சீசன் தொடங்கி ஜூன் மாதம் வரையில் இருந்தது. ஆனால் மாம்பழ சீசன் தற்போது ஏப்ரல் மாதத்தில் தான் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக மாம்பழம் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    டவுனில் உள்ள பல்வேறு பல மண்டிகளுக்கு மல்கோவா, சேலம் பெங்களூரா, நடு சாளை, இமாம் பசந்த் ஆகிய மாம்பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கி இருக்கிறது.

    சேலத்தை சுற்றியுள்ள குப்பனூர், வேப்பிலைப்பட்டி, சங்ககிரி, மகுடஞ்சாவடி, நங்கவள்ளி உள்பட பல இடங்களில் உள்ள மாந்தோப்புகளில் இருந்து தினமும் 10 டன் அளவிற்கு பல்வகை மாம்பழங்கள் வருகிறது. இதனை மண்டியிலிருந்து மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர். மல்கோவா, சேலம் பெங்களூரா, இமாம் பசந்த் மாம்பழங்கள் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையிலும், குண்டு வகை மாம்பழம் ரூ.100 முதல் ரூ.150 வரையிலும், நடு சாலை கிலோ ரூ.140 முதல் ரூ.170 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, சேந்தமங்கலம் பகுதிகளில் இருந்து இன்னும் சேலத்திற்கு மாம்பழம் வரத்து தொடங்கவில்லை. இன்னும் 15 நாட்களுக்குள் அங்கிருந்தும் மாம்பழங்கள் வரும் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். வருகிற 15-ந் தேதிக்குள் மாம்பழம் வரத்து உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கிறோம்.

    60 நாட்களுக்கு மேலாக சீசன் களைகட்டும். வெளியூர் வியாபாரிகள் பல்வேறு மாம்பழங்களை புக்கிங் செய்து வருகிறார்கள். ஆனால் வியாபாரம் இந்த ஆண்டு நல்ல நிலையில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • 2 குழந்தைகளுடன் இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.
    • அவர் கூறும்போது, எனக்கு சொந்தமான 35 சென்ட் நிலம் உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே நல்ராயன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் தனது 2 குழந்தைகளுடன் இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறும்போது, எனக்கு சொந்தமான 35 சென்ட் நிலம் உள்ளது. அதனை எனது உறவினர் ஒருவர் வேலி போட்டு ஆக்கிரமித்துக் கொண்டு, நிலத்தை தர மறுக்கிறார்.

    இது குறித்து கேட்டதற்கு தகாத வார்த்தையில் பேசியும், அடித்தும், கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நானும், என் குழந்தைகளும் அங்கு வாழ்வதற்கு அச்சமாக உள்ளது. எனவே நிலத்தை ஆக்கிரமித்துவர் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தர வேண்டும் என்றார்.

    • கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான குருத்தோலை ஞாயிறு நேற்று கொண்டாடப்பட்டது.
    • சங்ககிரி ஐக்கிய சபைகளின் போதகர்கள் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரியில் கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான குருத்தோலை ஞாயிறு நேற்று கொண்டாடப்பட்டது.

    சங்ககிரி ஐக்கிய சபைகளின் போதகர்கள் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. இதில், புனித அந்தோணியார் பேராலயத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் ஏரா ளமானோர் குருத்தோலைகளை கையில் ஏந்தி, புதிய எடப்பாடி சாலை, பவானி மெயின் ரோடு வழியாக பழைய எடப்பாடி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம் வரை ஊர்வலமாகச் சென்றனர். தொடர்ந்து அனைவரும் பிராத்தனை செய்தனர்.   

    • பாரதிய ஜனதா என்பது ஒரு தேசிய கட்சி. அந்தக் கட்சியுடன் கூட்டணி குறித்து தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள்.
    • எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கும்போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக தனது சொந்த ஊரான சேலத்துக்கு நேற்று வந்தார். வரும் வழியில் சென்னையில் இருந்து சேலம் வரை வழி நெடுக அவருக்கு அ.தி.மு.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சேலம் மாவட்டம் தலைவசலில் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் திருவாகவுண்டனூரிலும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு சேலம் நெடுஞ்சலை நகரில் உள்ள தனது இல்லத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அங்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கியும், மலர் மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    இதையடுத்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி சேலம் அண்னா பூங்கா வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணா பூங்கா வளாகத்தில் ஏராளமனா தொண்டர்கள் திரண்டு எடப்பாடி பழனிசாமியை மேள தாளம் முழங்க மலர்தூவி வரவேற்றனர்.

    இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா என்பது தேசிய கட்சி. அந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதை அந்த கட்சியின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. அந்த வகையில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தொடர்வதாக டெல்லியில் உள்ள தலைவர்களே கூறிவிட்டனர்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிய ஒரு சிலரை தவிர மற்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணையவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதன் அடிப்படையில் அழைப்பு விடுத்துள்ளோம்.

    அ.தி.மு.க.வில் பல்வேறு கட்சியினர் இணைந்து வருகிறார்கள். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணைவது என்பது அவரவர் ஜனநாயக உரிமை. எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கும்போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் பல சோதனைகளை சந்தித்தார். பொதுவாக தலைவர்களாக இருப்பவர்கள் சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் நிச்சயம் வெற்றிபெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சின்னவர் (வயது 25). பிரபல ரவுடியான இவரை நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டியது.
    • படுகாயம் அடைந்த சின்னவரை அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி. காலனி பகு தியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் சின்னவர் (வயது 25). பிரபல ரவுடி யான இவரை நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டியது. இதில் படு காயம் அடைந்த சின்னவரை அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் கிச்சிப்பாளையம் கஸ்தூரி பாய் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்ரம் என்கிற குஜாலி (20) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×