என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A young girl who came to set fire"

    • சிவதாபுரம் பகுதியை சேர்ந்த எழிலரசி. இவர் தனது தங்கையுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
    • தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த எழிலரசி. இவர் தனது தங்கையுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில மண் எண்ணெய் பாட்டில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அதனை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது எழிலரசி கூறுகையில், நானும், எனது கணவர் பூபதியும் கடந்த 29-ந் தேதி நெய்க்காரப்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது, உறவினர் ஒருவடன் சேர்ந்து நான்கு பேர் வந்து, இரும்பு கம்பியால் கணவரை தாக்கி வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

    தற்போது எனது கணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    எனவே, மண் எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய வந்தோம். மேலும் தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×