என் மலர்tooltip icon

    சேலம்

    • நேற்று மாலை மருத்துவ குழுவினருடன், சேலம் சீலநாயக்கன்பட்டி ராஜீவ் நகரில் செயல்பட்டு வந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
    • டாக்டர் என கூறிக்கொண்டு பொதுமக்களூக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. அவர் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து விட்டு, மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஹெலன் குமார் நேற்று மாலை மருத்துவ குழுவினருடன், சேலம் சீலநாயக்கன்பட்டி ராஜீவ் நகரில் செயல்பட்டு வந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    அப்போது அங்கு தபாரங் ஆலம் (வயது 52) என்பவர் தன்னை டாக்டர் என கூறிக்கொண்டு பொதுமக்களூக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. அவர் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து விட்டு, மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

    கைது

    இதையடுத்து உடனடி யாக அன்ன தானப்பட்டி போலீசாருக்கு மருத்துவ குழுவினர் தகவல் தெரி வித்தனர். அதன்பேரில், அங்கு வந்த போலீசார் போலி டாக்டர் தபாரங் ஆலனை கைது செய்தனர். மேலும் மருத்துவமனையில் இருந்த மாத்திரைகள் மற்றும் ஊசிகளையும் பறிமுதல் செய்தனர்.

    மற்றொரு போலி டாக்டர்

    இதேபோல், அன்ன தானப்பட்டி திருச்சி மெயின் ரோட்டில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த ஜெயராமன் (வயது 74) என்பவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரது ஆஸ்பத்திரியில் இருந்தும் மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நேற்று ஒரே நாளில் போலி மருத்துவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • சேலம் மத்திய சிறையில் ஜெயிலர் மதிவாணன் மற்றும் சிறை காவலர்கள் நேற்று கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • ராஜதுரை(வயது 32) என்ற கைதியின் அறையில் கஞ்சா, செல்போன் மற்றும் பேட்டரி ஆகியவகளை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் ஜெயிலர் மதிவாணன் மற்றும் சிறை காவலர்கள் நேற்று கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சேலம் கிச்சிப்பா ளையம் காளி கவுண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை(வயது 32) என்ற கைதியின் அறையில் கஞ்சா, செல்போன் மற்றும் பேட்டரி ஆகியவகளை பறிமுதல் செய்தனர்.இது குறித்து ஜெயிலர் மதிவா ணன் கொடுத்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கீர்த்தனா (7). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • கீர்த்தனாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை வேறு ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் டவுன் தாதுபாய் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு (வயது 32). இவரது மகள் கீர்த்தனா (7). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி, சேலத்தில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் கீர்த்தனாவுக்கு சொத்தை பல்லை அகற்றி உள்ளனர். அப்போது கீர்த்தனாவிற்கு அதிகப்படியான ரத்தம் வெளியேறியதாக கூறப்படுகிறது.

    உடல்நிலை மோசமடைந்தது

    அதன் பின்னர் கீர்த்தனாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை வேறு ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று கீர்த்தனாவின் உடல்நிலை மோசமடைந்தது.

    இதையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவ மனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு கீர்த்தனா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சேலம் டவுன் போசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல் பிடுங்கியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

    • கர்நாடக எல்லை நுழைவாயிலில் கர்நாடக வனத்துறை சார்பில் சோதனைசாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    • சாலை அருகே வனத்துறை கட்டிடம் அமைந்துள்ளதால் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த கடமான் அழகை ரசித்து செல்கிறார்கள்.

    மேட்டூர்:

    தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதி பாலாறு ஆகும். இங்குள்ள கர்நாடக எல்லை நுழைவாயிலில் கர்நாடக வனத்துறை சார்பில் சோதனைசாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடி அருகே வனத்துறைக்கு சொந்தமான அலுவலகம் கட்டிடம் அமைந்துள்ளது.

    இதனை சுற்றியும் வனப் பகுதி என்பதால் இந்த பகுதிகளில் யானை, மான், முயல், நரி போன்ற வன விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். குறிப்பாக மாலை நேரத்தில் பாலாற்றில் தண்ணீர் அருந்துவதற்காக யானைகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறது.

    இதை அந்த சாலையை வாகனங்களில் கடந்து செல்லும் ஏராளமான சுற்றுலா பகுதிகளில் நின்று ரசித்துச் செல்வார்கள். இது மட்டுமின்றி கர்நாடக வனத்துறை அலுவலகம் மற்றும் சோதனை சாவடி ஆகிய பகுதிகளில் கடமான் ஒன்று தினசரி வந்து செல்கிறது. சாலை அருகே வனத்துறை கட்டிடம் அமைந்துள்ளதால் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த கடமான் அழகை ரசித்து செல்கிறார்கள்.

    மக்களைக் கண்டு அச்சப்படாமல் தைரியமாக இந்த பகுதியில் உலாவரும் கடமான் நாள்தோறும் வந்துசெல்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சூர்யா (வயது 21). இவர் மீன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
    • பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணை சூர்யா காதலித்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஜாகீர் சின்னம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 21). இவர் மீன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில், பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணை சூர்யா காதலித்ததாக கூறப்படு கிறது. மேலும் அந்த பெண், அவருக்கு தங்கை உறவு முறை ஆகும். இதனால் சூர்யாவை பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் மனமுடைந்த சூர்யா, எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள், அவரை மீட்டு அந்த பகுதி யில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூர மங்கலம் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள். 

    • ராஜா கண்ணு (வயது 52), விவசாயி. இவர் நேற்று முன்தினம் அவருடைய வீட்டின் அருகி லுள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
    • குடிநீர் குழாய் பைப் லைனுக்கு குழி தோண்டி கொண்டிருந்த பொக்லைன் எந்திர டிரைவரின் கவனக் குறைவால் விவசாயி ராஜாகண்ணு எந்திரத்தில் சிக்கினார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி ஊராட்சி, பழக்காரனுர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ராஜா கண்ணு (வயது 52), விவசாயி. இவர் நேற்று முன்தினம் அவருடைய வீட்டின் அருகி லுள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக குடிநீர் குழாய் பைப் லைனுக்கு குழி தோண்டி கொண்டிருந்த பொக்லைன் எந்திர டிரைவரின் கவனக் குறைவால் விவசாயி ராஜாகண்ணு எந்திரத்தில் சிக்கினார். இதனால் அவர் 5 அடி தூரம் தூக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி ராஜா கண்ணுவின் மகன் ராசுக்குட்டி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணேசன் (வயது 40). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திற்கு குடிபெயர்ந்தார்.
    • பின்னர் எலக்ட்ரீசியன் வேலை உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    சேலம்:

    தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 40). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் எலக்ட்ரீசியன் வேலை உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அரிசிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் வாயில் நுரை தள்ளியபடி கணேசன் இறந்து கிடந்தார்.

    இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விசாரணையில், கணேசனுக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும். இதனால் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு வங்கியின் ஏ.டி.எம் மையத்தில், கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி மர்மநபர்கள் பணம் கொள்ளை அடிக்க முயன்றபோது காவலாளி பெருமாள் என்பவரை தாக்கி கொலை செய்தனர்.
    • இந்த வழக்கு ஆத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் வழக்கில் ஆஜராகாமல் செந்தில்குமார் தலைமறைவானார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் பஸ் நிலையம் எதிரில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம் மையத்தில், கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி மர்மநபர்கள் பணம் கொள்ளை அடிக்க முயன்றபோது காவலாளி பெருமாள் என்பவரை தாக்கி கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் வீரகனூர் போலீசார் 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வீரகனூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த தமிழ் துரை மகன் செந்தில்குமார் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு ஆத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் வழக்கில் ஆஜராகாமல் செந்தில்குமார் தலைமறைவானார்.

    செந்தில்குமாரை பிடிப்பதற்கு ஆத்தூர் நீதிமன்ற நீதிபதி வாரன்ட் பிறப்பித்தார். இதை அடுத்து தலைமறைவாக இருந்த செந்தில் குமாரை பிடிப்பதற்கு வீரகனூர் போலீசார் தலைமையில் தனிப்படை அமைக் கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலை யில் செந்தில்குமார், கள்ளக்கு றிச்சியில் உள்ள தாயார் சாந்தி வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், கள்ளக்குறிச்சி யில் பதுங்கி இருந்த செந்தில்குமாரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தி ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர். 

    • நேற்று இரவு கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 50) தச்சு தொழிலாளி. இவர் நேற்று இரவு கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் பரிதாபமாக இறந்து விட்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், கொண்டலாம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • தொழிலாளர்கள் நல வாரியங்களில் ஓய்வூதியம் பெற்றும் வரும் தொழி லாளர்கள் கடந்த 1-ந் தேதி முதல் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • ஓய்வூதியதாரர்களின் பதிவு எண் மற்றும் செல்போன் எண்ணை கொண்டு ஆயுள்சான்று விண்ணப் பத்தினைசமர்ப்பிக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்ப தாவது:-

    தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் ஓய்வூதியம் பெற்றும் வரும் தொழி லாளர்கள் கடந்த 1-ந் தேதி முதல் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஓய்வூதியதாரர்களின் பதிவு எண் மற்றும் செல்போன் எண்ணை கொண்டு ஆயுள்சான்று விண்ணப் பத்தினைசமர்ப்பிக்க வேண்டும். ஆதார் எண் மற்றும் அசல் ஆதார் அட்டை ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும் (ஆதார் எண் தவறுதலாக உள்ளீடு செய்யப்பட்டு இருந்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்).

    வாரியம் மற்றும் தொழிலின் தன்மை சரியாக குறிப்பிடப்பட வேண்டும். தனிநபர் வங்கி கணக்கு புத்தகத்தினை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஓய்வூதியம் பெற்று வந்த வங்கி கணக்கு புத்தகத்தினை மட்டுமே இணைக்க வேண்டும். வேறு வங்கி கணக்கு புத்தகத்தினை பதி வேற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த அலுவலகத்தை நேரில் அணுகி எழுத்து பூர்வமாக விண்ணப்பம் அளிக்க வேண்டும். அசல் வங்கி கணக்கு புத்தகத்தினை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    மேலும் வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி., எம்.ஐ.சி.ஆர். கோடு ஆகியவற்றை சரியாக பதிய வேண்டும். அமைப்புச்சாரா தொழிலா ளர் நல வாரிய ஓய்வூதியதா ரர்கள் அவர்களது சாதியை சரியாக குற்ப்பிடப்பட வேண்டும். குடும்ப அட்டை எண் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். ஆயுள்சான்றுக்கு ஆதாரமாக நல வாரிய அட்டை, ஓய்வூதிய ஆணை, கோரிய ஒப்புகை சீட்டு அல்லது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தை ஆகியவற்றில்ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    பாஸ்போர்ட் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். தொழிலாளியின் ஆதார் அட்டையை கையில் பிடித்து கொண்டிருப்பது போல் நேரடி போட்டோ எடுக்கப்பட வேண்டும். ஆயுள்சான்றினை அருகே உள்ள கணினி மையம், இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்ப தற்காக ரெயில்வே நிர்வா கம் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, சேலம் வழியாக சென்னை எழும்பூ ருக்கு சிறப்பு ரெயிலை இயக்குகிறது.
    • திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 12,45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

    சேலம்:

    மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, விஷு பண்டிகைகள் மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, சேலம் வழியாக சென்னை எழும்பூ ருக்கு சிறப்பு ரெயிலை இயக்குகிறது.

    அதன்படி திருவனந்த புரம்- சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06044) நாளை (புதன்கிழமை) மற்றும் 12-ந் தேதி ஆகிய நாட்களில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 6.52 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக மதியம் 12,45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (06043) வருகிற 6-ந் தேதி மற்றும் 13-ந் தேதி ஆகிய நாட்களில் சென்னை எழும்பூரில் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடையும் பின்னர் இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவ னந்தபுரம் சென்றடையும்.

    இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவ லகம் தெரிவித்துள்ளது.

    • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவை தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
    • இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 1572 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 1561 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 1500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவை தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 102.77 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 102.75 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    ×