என் மலர்tooltip icon

    சேலம்

    • 10- வகுப்பு பொதுத்தேர்வு, நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது.
    • இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி முடிவடைகிறது.

    சேலம்:

    தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு, மார்ச் 13-ந்தேதி தொடங்கி கடந்த 3-ந்தேதி தேதி நிறைவடைந்தது. அதேபோல், பிளஸ்-1 பொதுத்தேர்வு, மார்ச் 14-ந்தேதி தொடங்கி, . இன்று முடிவடைந்தது.

    இதை தொடர்ந்து 10- வகுப்பு பொதுத்தேர்வு, நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி முடிவடைகிறது. சேலம் மாவட்டத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 44 ஆயிரத்து 564 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

    இதற்காக மாவட்டம் முழுவதும், 368 பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், 200 முதன்மை கண்காணிப்பாளர்கள், 200 துறை அலுவலர்கள், 3211 அறை கண்காணிப்பாளர்கள், 250 பறக்கும் படை உறுப்பி னர்கள், 20 கட்டுக்காப்பு மைய அலுவலர்கள், என மொத்தம் 4000 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படு கின்றனர். மேலும், பொதுத் தேர்வு எழுதும் மையங்க ளுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வினாத்தாள் எடுத்துச் செல்லவும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்

    பட்டுள்ளது.

    தேர்வில் எவ்வித விதிமீறலும் நடக்காமல் இருக்க, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    • சேலம் பேர்லாண்ட்ஸ் பகுதியில் இயங்கி வந்த அமுத சுரபி சிக்கனம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனமும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மோசடியில் ஈடுபட்டது.
    • சேமிப்பு திட்டத்தில் ரூ.3,27,200 முதலீடு செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் இயங்கி வந்த வைஸ்ணவி பில்ட்ர்ஸ் அண்ட் புரோமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பார்த்தசாரதி, தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கவர்ச்சி கரமான திட்டங்களை வெளியிட்டது. அதன்படி முதலீட்டு தொகைக்கு 100 நாட்கள் முடிந்த பின் பணம் இரட்டிப்பாக கிடைக்கும், இல்லையென்றால் வீட்டுமனையாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இதை உண்மை என நம்பிய சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 39) பார்த்தசாரதியின் நிறுவனத்தில் ரூ.8.80 லட்சம் முதலீடு செய்தார். முதிர்வு தொகையை பெற கடந்த 2018-ல் நிறுவனத்திற்கு சென்றபோது, அலுவலகம் பூட்டி கிடந்தது. மேலும் பலரிடம் இந்நிறுவனம் பணம் பெற்றுக் கொண்டு திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதும் தெரியவந்தது.

    இதுகுறித்து விஜயகுமார் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், சேலம் பேர்லாண்ட்ஸ் பகுதியில் இயங்கி வந்த அமுத சுரபி சிக்கனம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனமும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மோசடியில் ஈடுபட்டது. பாஸ்கரன் என்பவர் தனது மனைவி மற்றும் மகள் பெயரில் சேமிப்பு திட்டத்தில் ரூ.3,27,200 முதலீடு செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் அமுத சுரபி, வைஸ்ணவி பில்டர்ஸ் அண்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள், அசல் ஆவணங்களுடன் சேலம் அழகாபுரம் பஞ்சவர்ணம் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மாலை 2 சிறுவர்கள் கோவிலில் உள்ள உண்டிகளில் பணம் திருடி கொண்டு இருந்துள்ளனர்.
    • இதை பார்த்த அந்தப் பகுதி பொது மக்கள் 2 சிறுவர்களையும் பிடித்து வீரகனூர் காவல்துறை யிடம் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே காமராஜ் நகர் மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை 2 சிறுவர்கள் கோவிலில் உள்ள உண்டிகளில் பணம் திருடி கொண்டு இருந்துள்ளனர். இதை பார்த்த அந்தப் பகுதி பொது மக்கள் 2 சிறுவர்களையும் பிடித்து வீரகனூர் காவல்துறை யிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் இரண்டு சிறுவர்களும் வீரகனூர் பகுதியைச் சார்ந்தவர்கள் என்பதும் இவர்கள் கோவில் உண்டிகளை உடைக்காமல் குச்சிகளை பயன்படுத்தி உண்டியலில் இருந்து பணத்தை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து இரண்டு சிறுவர்களிடம் வீரக னூர் காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஏப்ரல் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான வருகிற 8-ந்தேதி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஏப்ரல் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான வருகிற 8-ந்தேதி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

    முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கைபேசி எண் பதிவு மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்ற உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-இன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை அளித்து பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • முருகப்பெருமானுக்கு எத்தனையோ விழாக்கள் வைபவங்கள் நடை பெற்றாலும் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பங்குனி உத்திர தினம் உகந்த தினமாக கருதப் படுகிறது.
    • பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சேலம் அம்மா பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    சேலம்:

    தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரத்திருவிழா உலகமெங்கும் வாழும் தமிழக மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானுக்கு எத்தனையோ விழாக்கள் வைபவங்கள் நடை பெற்றாலும் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பங்குனி உத்திர தினம் உகந்த தினமாக கருதப் படுகிறது.இந்தப் பங்குனி உத்திர தினத்தில் முருகனுக்கு சிறப்பு வைபவங்கள் சிறப்பு ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெறும்.

    அனைத்து முருகன் ஆலயங்களிலும், சிவ ஆலயங்களிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்ப டுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள கோயில்களில் எல்லாம் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் என்ற பேரில் பத்து நாட்கள் திருவிழா, தேரோட்டம், தீர்த்தவாரி, சுவாமி- அம்பாள் திருக்கல்யாண உற்சவம் என சகலமும் நடைபெறும்.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சேலம் அம்மா பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை முதல் முருகப்பெருமானுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

    திருமணத்தடை நீங்கவும், தொழில் வளர்ச்சி அடையவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் என பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றிய முருகப்பெரு மானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே விரதம் இருந்த பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குட ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள் உடல் முழுவதும் எலுமிச்சம் பழத்தை குத்திக்கொண்டு முருக பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடியது பக்தர்க ளிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து கோவிலில் முருகனுக்கு சிவாச்சாரி யார்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனை செய்து மகா தீபாராதனை காண்பித்தனர். பின்னர் பக்தர்கள் அனைவ ருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில், முருகன், வள்ளி, தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம் உள்பட பல திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் முருகன் பக்தர்க ளுக்கு காட்சி யளித்தார். சீலநாயக்கன்பட்டி ஊத்துமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திரதை யொட்டி காலையில் மூலவருக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேலம் ஜாகீர் அம்மா பாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சாமிக்கு பால், பன்னீர், தயிர், இளநீர் உள்பட 64 வகை மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவில், சேலம் பெரமனூரில் உள்ள கந்தசாமி ஆறுமுகன் கோவில், சேலம் வின்சென்ட் முத்துக்கு மாரசாமி கோவில், குமாரசாமிப்பட்டி சுப்பிரமணிய சாமி கோவில், சூரமங்கலம் முருகன் கோவில், ஏற்காடு அடிவாரம் ஆறுபடையப்பன் கோவில் என அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

    • கடையில் மறைத்து வைத்து, சட்ட விரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையம் அருகே உள்ள வள்ளியப்பம் பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் (வயது 47). இவர் வீட்டிற்கு முன்பு காலியாக உள்ள கடையில் மறைத்து வைத்து, சட்ட விரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டி ருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 50 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த ராஜேஷ்கண்ணனை பரமத்தி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல், பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அடுத்த உரம்பூர் பஸ் நிறுத்தம் அருகே சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்த திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த கணேசன் (32) என்பவரை பரமத்திவேலூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.35 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக மறுநாள் காலை 5.15 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.

    சேலம்:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது,

    அதன்படி சென்னை சென்ட்ரல்- கண்ணூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06047) வருகிற 13-ந் தேதி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 8.25 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.35 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக மறுநாள் காலை 5.15 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் கண்ணூர்- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06048) வருகிற 14-ந் தேதி கண்ணூரில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மாலை 4.20 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக இரவு 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • ஆத்தூர் பஸ் நிலையத்தில் நாள்தோறும், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.
    • பஸ்சில் திருநங்கை ஒருவர் பயணித்துள்ளார். அவர் பயண சீட்டு எடுக்காமல் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் பஸ் நிலையத்தில் நாள்தோறும், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் திருநங்கை ஒருவர் பயணித்துள்ளார். அவர் பயண சீட்டு எடுக்காமல் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பஸ் கண்டக்டர் கமலக்கண்ணன் திருநங்கையிடம் கேட்டபோது, இருவருக்கும் பஸ்சில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பஸ் நிலையம் வந்தவுடன், தகவல் அறிந்து வந்த 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், கண்டக்டர் கமலக்கண்ணனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    இதை தடுக்க முயன்ற டிரைவர் ரமேஷ் என்பவரையும் திருநங்கைகள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள், திருநங்கைகளை சமதானபடுத்தி அங்கிருந்து வெளியேற்றினர்.

    இந்த நிலையில், அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், கமலக்கண்ணன் மற்றும் ரமேஷை தாக்கிய திரு நங்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் விழுப்புரம், சென்னை, சேலம், சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    தகவல் அறிந்து ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். திருநங்கைகள் மீது உடன டியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • கோவையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், ஏலகங்கா, பெரம்பூர், விஜயவாடா வழியாக செல்கிறது.
    • இந்த சிறப்பு சுற்றுலாவுக்கு 3 டயர் ஏ.சி. 41 ஆயிரத்து 950-ம், 2 ஏ.சி. டயர் 54 ஆயிரத்து 780-க்கும், 1 டயர் ஏ.சி. ரூ.64 ஆயிரத்து 990-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    இந்தியன் ரெயில்வேயின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் இயங்கும் சவுத் ஸ்டார் ரெயில் வருகிற மே மாதம் 11-ந் தேதி கோடைக்கால சிறப்பு சுற்றுலாவாக ஸ்ரீநகர், சோன்மார்க், குல்மார்க், ஆக்ரா, அமிர்தசரஸ் போன்ற இடங்களுக்கு 12 நாட்கள் செல்கிறது.

    கோவையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், ஏலகங்கா, பெரம்பூர், விஜயவாடா வழியாக செல்கிறது.

    இந்த சிறப்பு சுற்றுலாவுக்கு 3 டயர் ஏ.சி. 41 ஆயிரத்து 950-ம், 2 ஏ.சி. டயர் 54 ஆயிரத்து 780-க்கும், 1 டயர் ஏ.சி. ரூ.64 ஆயிரத்து 990-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தங்கும் அறை வசதி, தென்னிந்திய சைவ உணவு, சுற்றிப்பார்த்தல், மேலாளர், பாதுகாவலர் வசதி, ஒலிப்பெருக்கி வசதி, கண்காணிப்பு கேமரா வசதி, சுற்றுலா தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு செல்லும் போது அன்றைக்கு தேவையான உைடமைகளை மட்டும் எடுத்து சென்றால் போதும். மீதி உைடமைகள் ரெயிலேயே பாது காக்கப்படும். இந்த சுற்றுலா ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது என்று சேலம் ரெயில்வே கோட்ட வணிக ஆய்வாளர் சுகுமார் தெரிவித்தார்.

    • ராசிபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆசிரியைகளுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
    • மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பாரதி தலைமை தாங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆசிரியைகளுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பாரதி தலைமை தாங்கினார்.

    கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ராசிபுரம் நகராட்சி தலைவி கவிதா சங்கர், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி, மன்றத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில், நாடாளுமன்ற, சட்டமன்றத்தின் அரசியல் அதிகார பொறுப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத உரிமை தரப்பட வேண்டும். தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    பெண் குழந்தைகளுக்கு மழலையர் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய் மொழியில், விலையில்லா கல்வி தரவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

    • காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
    • மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று விநாடிக்கு 1,561 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 1,572 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    நேற்று 102.75 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 102.73 அடியானது.

    • நேற்று மாலை மருத்துவ குழுவினருடன், சேலம் சீலநாயக்கன்பட்டி ராஜீவ் நகரில் செயல்பட்டு வந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
    • டாக்டர் என கூறிக்கொண்டு பொதுமக்களூக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. அவர் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து விட்டு, மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஹெலன் குமார் நேற்று மாலை மருத்துவ குழுவினருடன், சேலம் சீலநாயக்கன்பட்டி ராஜீவ் நகரில் செயல்பட்டு வந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    அப்போது அங்கு தபாரங் ஆலம் (வயது 52) என்பவர் தன்னை டாக்டர் என கூறிக்கொண்டு பொதுமக்களூக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. அவர் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து விட்டு, மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

    கைது

    இதையடுத்து உடனடி யாக அன்ன தானப்பட்டி போலீசாருக்கு மருத்துவ குழுவினர் தகவல் தெரி வித்தனர். அதன்பேரில், அங்கு வந்த போலீசார் போலி டாக்டர் தபாரங் ஆலனை கைது செய்தனர். மேலும் மருத்துவமனையில் இருந்த மாத்திரைகள் மற்றும் ஊசிகளையும் பறிமுதல் செய்தனர்.

    மற்றொரு போலி டாக்டர்

    இதேபோல், அன்ன தானப்பட்டி திருச்சி மெயின் ரோட்டில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த ஜெயராமன் (வயது 74) என்பவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரது ஆஸ்பத்திரியில் இருந்தும் மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நேற்று ஒரே நாளில் போலி மருத்துவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    ×