என் மலர்
நீங்கள் தேடியது "Tourist Special Train"
- கோவையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், ஏலகங்கா, பெரம்பூர், விஜயவாடா வழியாக செல்கிறது.
- இந்த சிறப்பு சுற்றுலாவுக்கு 3 டயர் ஏ.சி. 41 ஆயிரத்து 950-ம், 2 ஏ.சி. டயர் 54 ஆயிரத்து 780-க்கும், 1 டயர் ஏ.சி. ரூ.64 ஆயிரத்து 990-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
இந்தியன் ரெயில்வேயின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் இயங்கும் சவுத் ஸ்டார் ரெயில் வருகிற மே மாதம் 11-ந் தேதி கோடைக்கால சிறப்பு சுற்றுலாவாக ஸ்ரீநகர், சோன்மார்க், குல்மார்க், ஆக்ரா, அமிர்தசரஸ் போன்ற இடங்களுக்கு 12 நாட்கள் செல்கிறது.
கோவையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், ஏலகங்கா, பெரம்பூர், விஜயவாடா வழியாக செல்கிறது.
இந்த சிறப்பு சுற்றுலாவுக்கு 3 டயர் ஏ.சி. 41 ஆயிரத்து 950-ம், 2 ஏ.சி. டயர் 54 ஆயிரத்து 780-க்கும், 1 டயர் ஏ.சி. ரூ.64 ஆயிரத்து 990-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கும் அறை வசதி, தென்னிந்திய சைவ உணவு, சுற்றிப்பார்த்தல், மேலாளர், பாதுகாவலர் வசதி, ஒலிப்பெருக்கி வசதி, கண்காணிப்பு கேமரா வசதி, சுற்றுலா தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு செல்லும் போது அன்றைக்கு தேவையான உைடமைகளை மட்டும் எடுத்து சென்றால் போதும். மீதி உைடமைகள் ரெயிலேயே பாது காக்கப்படும். இந்த சுற்றுலா ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது என்று சேலம் ரெயில்வே கோட்ட வணிக ஆய்வாளர் சுகுமார் தெரிவித்தார்.






