என் மலர்
உள்ளூர் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது
- கடையில் மறைத்து வைத்து, சட்ட விரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திடீர் சோதனை மேற்கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையம் அருகே உள்ள வள்ளியப்பம் பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் (வயது 47). இவர் வீட்டிற்கு முன்பு காலியாக உள்ள கடையில் மறைத்து வைத்து, சட்ட விரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டி ருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 50 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த ராஜேஷ்கண்ணனை பரமத்தி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல், பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அடுத்த உரம்பூர் பஸ் நிறுத்தம் அருகே சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்த திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த கணேசன் (32) என்பவரை பரமத்திவேலூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






