என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus workers on strike பஸ் ஊழியர்கள் மறியல்"

    • ஆத்தூர் பஸ் நிலையத்தில் நாள்தோறும், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.
    • பஸ்சில் திருநங்கை ஒருவர் பயணித்துள்ளார். அவர் பயண சீட்டு எடுக்காமல் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் பஸ் நிலையத்தில் நாள்தோறும், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் திருநங்கை ஒருவர் பயணித்துள்ளார். அவர் பயண சீட்டு எடுக்காமல் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பஸ் கண்டக்டர் கமலக்கண்ணன் திருநங்கையிடம் கேட்டபோது, இருவருக்கும் பஸ்சில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பஸ் நிலையம் வந்தவுடன், தகவல் அறிந்து வந்த 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், கண்டக்டர் கமலக்கண்ணனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    இதை தடுக்க முயன்ற டிரைவர் ரமேஷ் என்பவரையும் திருநங்கைகள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள், திருநங்கைகளை சமதானபடுத்தி அங்கிருந்து வெளியேற்றினர்.

    இந்த நிலையில், அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், கமலக்கண்ணன் மற்றும் ரமேஷை தாக்கிய திரு நங்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் விழுப்புரம், சென்னை, சேலம், சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    தகவல் அறிந்து ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். திருநங்கைகள் மீது உடன டியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×