என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் வழியாக சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரெயில்
- சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.35 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக மறுநாள் காலை 5.15 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.
சேலம்:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது,
அதன்படி சென்னை சென்ட்ரல்- கண்ணூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06047) வருகிற 13-ந் தேதி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 8.25 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.35 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக மறுநாள் காலை 5.15 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் கண்ணூர்- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06048) வருகிற 14-ந் தேதி கண்ணூரில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மாலை 4.20 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக இரவு 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.






