என் மலர்
நீங்கள் தேடியது "Seizure of cell phone ganja battery"
- சேலம் மத்திய சிறையில் ஜெயிலர் மதிவாணன் மற்றும் சிறை காவலர்கள் நேற்று கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- ராஜதுரை(வயது 32) என்ற கைதியின் அறையில் கஞ்சா, செல்போன் மற்றும் பேட்டரி ஆகியவகளை பறிமுதல் செய்தனர்.
சேலம்:
சேலம் மத்திய சிறையில் ஜெயிலர் மதிவாணன் மற்றும் சிறை காவலர்கள் நேற்று கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சேலம் கிச்சிப்பா ளையம் காளி கவுண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை(வயது 32) என்ற கைதியின் அறையில் கஞ்சா, செல்போன் மற்றும் பேட்டரி ஆகியவகளை பறிமுதல் செய்தனர்.இது குறித்து ஜெயிலர் மதிவா ணன் கொடுத்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






