என் மலர்
நீங்கள் தேடியது "Life Certificate through Online"
- தொழிலாளர்கள் நல வாரியங்களில் ஓய்வூதியம் பெற்றும் வரும் தொழி லாளர்கள் கடந்த 1-ந் தேதி முதல் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- ஓய்வூதியதாரர்களின் பதிவு எண் மற்றும் செல்போன் எண்ணை கொண்டு ஆயுள்சான்று விண்ணப் பத்தினைசமர்ப்பிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்ப தாவது:-
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் ஓய்வூதியம் பெற்றும் வரும் தொழி லாளர்கள் கடந்த 1-ந் தேதி முதல் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஓய்வூதியதாரர்களின் பதிவு எண் மற்றும் செல்போன் எண்ணை கொண்டு ஆயுள்சான்று விண்ணப் பத்தினைசமர்ப்பிக்க வேண்டும். ஆதார் எண் மற்றும் அசல் ஆதார் அட்டை ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும் (ஆதார் எண் தவறுதலாக உள்ளீடு செய்யப்பட்டு இருந்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்).
வாரியம் மற்றும் தொழிலின் தன்மை சரியாக குறிப்பிடப்பட வேண்டும். தனிநபர் வங்கி கணக்கு புத்தகத்தினை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஓய்வூதியம் பெற்று வந்த வங்கி கணக்கு புத்தகத்தினை மட்டுமே இணைக்க வேண்டும். வேறு வங்கி கணக்கு புத்தகத்தினை பதி வேற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த அலுவலகத்தை நேரில் அணுகி எழுத்து பூர்வமாக விண்ணப்பம் அளிக்க வேண்டும். அசல் வங்கி கணக்கு புத்தகத்தினை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மேலும் வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி., எம்.ஐ.சி.ஆர். கோடு ஆகியவற்றை சரியாக பதிய வேண்டும். அமைப்புச்சாரா தொழிலா ளர் நல வாரிய ஓய்வூதியதா ரர்கள் அவர்களது சாதியை சரியாக குற்ப்பிடப்பட வேண்டும். குடும்ப அட்டை எண் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். ஆயுள்சான்றுக்கு ஆதாரமாக நல வாரிய அட்டை, ஓய்வூதிய ஆணை, கோரிய ஒப்புகை சீட்டு அல்லது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தை ஆகியவற்றில்ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பாஸ்போர்ட் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். தொழிலாளியின் ஆதார் அட்டையை கையில் பிடித்து கொண்டிருப்பது போல் நேரடி போட்டோ எடுக்கப்பட வேண்டும். ஆயுள்சான்றினை அருகே உள்ள கணினி மையம், இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






