என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrest of the accused குற்றவாளி கைது"

    • ஒரு வங்கியின் ஏ.டி.எம் மையத்தில், கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி மர்மநபர்கள் பணம் கொள்ளை அடிக்க முயன்றபோது காவலாளி பெருமாள் என்பவரை தாக்கி கொலை செய்தனர்.
    • இந்த வழக்கு ஆத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் வழக்கில் ஆஜராகாமல் செந்தில்குமார் தலைமறைவானார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் பஸ் நிலையம் எதிரில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம் மையத்தில், கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி மர்மநபர்கள் பணம் கொள்ளை அடிக்க முயன்றபோது காவலாளி பெருமாள் என்பவரை தாக்கி கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் வீரகனூர் போலீசார் 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வீரகனூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த தமிழ் துரை மகன் செந்தில்குமார் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு ஆத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் வழக்கில் ஆஜராகாமல் செந்தில்குமார் தலைமறைவானார்.

    செந்தில்குமாரை பிடிப்பதற்கு ஆத்தூர் நீதிமன்ற நீதிபதி வாரன்ட் பிறப்பித்தார். இதை அடுத்து தலைமறைவாக இருந்த செந்தில் குமாரை பிடிப்பதற்கு வீரகனூர் போலீசார் தலைமையில் தனிப்படை அமைக் கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலை யில் செந்தில்குமார், கள்ளக்கு றிச்சியில் உள்ள தாயார் சாந்தி வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், கள்ளக்குறிச்சி யில் பதுங்கி இருந்த செந்தில்குமாரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தி ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர். 

    ×