என் மலர்
நீங்கள் தேடியது "The former minister who came in procession"
- அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு நேற்று சொந்த ஊரான சேலத்துக்கு வந்தார்.
- தமிழகம் முழுதும் பல்வேறு பகுதியில் இருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சேலம்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு நேற்று சொந்த ஊரான சேலத்துக்கு வந்தார். அப்போது அ.தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் வீட்டில் அவரை இன்று தமிழகம் முழுதும் பல்வேறு பகுதியில் இருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சீர்வரிசை பொருட்களுடன் சேலத்திற்கு வந்தனர். இந்த சீர் வரிசையில் கன்று குட்டி ,ஆடு, கோழி, தென்னங்கன்றுகள், கரும்பு உட்பட ஏராளமான பொருட்கள் இடம் பெற்றிருந்தன .
விஜயபாஸ்கர் தலைமையில் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தங்கி உள்ள சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதி முழுவதும் மக்கள் கூட்டமாய் காணப்பட்டது.






