என் மலர்
நீங்கள் தேடியது "அலுவலகத்தில் புகார்"
- 2 குழந்தைகளுடன் இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.
- அவர் கூறும்போது, எனக்கு சொந்தமான 35 சென்ட் நிலம் உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே நல்ராயன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் தனது 2 குழந்தைகளுடன் இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறும்போது, எனக்கு சொந்தமான 35 சென்ட் நிலம் உள்ளது. அதனை எனது உறவினர் ஒருவர் வேலி போட்டு ஆக்கிரமித்துக் கொண்டு, நிலத்தை தர மறுக்கிறார்.
இது குறித்து கேட்டதற்கு தகாத வார்த்தையில் பேசியும், அடித்தும், கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நானும், என் குழந்தைகளும் அங்கு வாழ்வதற்கு அச்சமாக உள்ளது. எனவே நிலத்தை ஆக்கிரமித்துவர் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தர வேண்டும் என்றார்.






