என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகுந்தம் சுங்கச்சாவடி முன்பு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடி முன்பு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    வைகுந்தம் சுங்கச்சாவடி முன்பு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் 31-ந் தேதி நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடி முன்பு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி தலைமையில், சுங்க கட்டணம் உயர்வு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சங்ககிரி:

    இந்தியா முழுவதும் வருடந்தோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 1-ந்தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

    மேலும் தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் 31-ந் தேதி நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனையொட்டி, சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடி முன்பு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி தலைமையில், சுங்க கட்டணம் உயர்வு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணி, திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி, திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மோகன்குமார், பொருளாளர் செங்குட்டுவேலு, துணை தலைவர் சின்னத்தம்பி, இணைச் செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    அவர்கள் மத்திய அரசை கண்டித்து கையில் பதாகைகளை வைத்துக் கொண்டு கோஷங்கள் எழுப்பி சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு ஏற்படும். லாரி உரிமையாளர்கள் டிரைவர்கள் ஆகியோர்கள் கடுமையாக பாதிப்பு ஏற்படுத்தும். ஏற்கனவே டீசல் விலை உயர்வினால் லாரி தொழில் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. இந்த நிலையில் சுங்க கட்டணம் உயர்வினால் மேலும் பாதிப்பு ஏற்படுத்தும்.

    எனவே சுங்க கட்டண உயர்வினால் சேலத்தில் இருந்து குஜராத் மற்றும் டெல்லி ஆகிய இடங்களுக்கு லாரி மூலம் சரக்கு ஏற்றி செல்லும்போது ஏற்கனவே செலுத்திய கட்டணத்தை விட தற்போது கூடுதலாக ரூ.4500 வரை சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். எனவே ஒன்றிய அரசு சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×