என் மலர்
உள்ளூர் செய்திகள்

வணிகர் சங்க கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
ஏற்காடு வணிகர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
- ஏற்காடு வணிகர்கள் நலச்சங்கத்தின் 17-வது ஆண்டு தொடக்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
- நகராட்சிக்கு இணை யான அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட சங்க வளர்ச்சி சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஏற்காடு:
ஏற்காடு வணிகர்கள் நலச்சங்கத்தின் 17-வது ஆண்டு தொடக்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் எஸ்.கே.பெரியசாமி, செயலாளர் வர்கீஸ், இளைய பெருமாள், பொருளாளர் சந்திரதாசன் மற்றும் திருமுருகன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, வணிகர்களின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சங்க வளர்ச்சி குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.
இதில், ஊராட்சி கடை களுக்கான அரசாணை யினை மறுபரிசீலனை செய்து நகராட்சிக்கு இணை யான அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட சங்க வளர்ச்சி சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சங்க செயலாளர் ஜெயராமன், பொருளாளர் பாலாஜி, ஆலோசகர்கள் சரவணன், கணேசன், சீஜூ, சதானந்தம், புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள், ஏற்காடு பகுதி வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






