search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்திமேயர் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்திமேயர் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

    • ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 50-வது கோட்டத்துக்கு உட்பட்ட ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய 30 அடி சாலையை ஒரு சிலர் ஆக்கிரமித்து உள்ளதால் சாலை வசதியும் இல்லாமல் இருந்து வருகின்றார். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடமும், மண்டலக் அலுவலகத்திலும் ஏற்கனவே பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியு றுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்த நிலையில், இதுவரை நட வடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது சாக்கடை நீர் வீட்டிற்குள் புகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், வேதனை அடைந்த மக்கள், இன்று கொண்டலாம்பட்டி 50-வது வார்டு முருகன் தலைமையில் திடீரென மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மேயரின் காரின் முன்பு திடீரென அமர்ந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காரின் டிரைவர், காரை எடுத்தார். இதனை அடுத்து அடிப்படை வசதி செய்து தரக்கோரி கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மேயர் ராமசந்திரனை சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். உங்கள் கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்ததை அடுத்து, தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதி ஏதும் இல்லாமல் அவதிப்பட்டு வருகி றோம். கடந்த சில நாட்களாக சாக்கடை நீர் வெளியே வரு வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நிர்வாகம் உடனடியாக சரி செய்து தர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அடுத்த கட்டமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    Next Story
    ×