என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் அரசு மருத்துவமனையில் ஒலிபெருக்கியின் மூலம் முக கவசம் அணிய அறிவுறுத்தும் மருத்துவமனை ஊழியர்
ஒரே மாதத்தில் 52 பேருக்கு பாதிப்பு சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா
- சேலம் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.
- ஒரு மாதத்தில் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகி உள்ளது. அதன்படி ஒரே மாதத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சேலம்:
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. சேலம் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால் சுகாதார துறையினர், மருத்துவ துறையினர் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
சேலம் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் இறுதிவரை கொரோனா பாதிப்பு இல்லை. பின்னர் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது.
பின்பு பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியது. மாவட்டம் முழுவதும் கடந்த மாத இறுதியில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 26 ஆகவும், குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 257 ஆகவும் இருந்தது. 1764 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
ஆனால் ஒரு மாதத்தில் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகி உள்ளது. அதன்படி ஒரே மாதத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கபப்ட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே சிகிச்சை பெற்ற 5 பே ர்குணம் அடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவைட்க்கையை தீவிரப்படுத்தி உள்ளது.






