என் மலர்
நீங்கள் தேடியது "Face shields are mandatory. முக கவசம் கட்டாயம்"
- கொரோனோவின் தாக்கம் தற்போது தீவிரமடைந்து வருகிறது.
- தமிழகத்தில் நேற்று 140 பேர் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சேலம்:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று இறந்தும் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக கொரோனா பெருந்தொற்று நோய் கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் கொரோனோவின் தாக்கம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழகத்தில் நேற்று 140 பேர் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சேலத்தில் 13 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் பொது சுகாதாரத்துறை சார்பில் இன்று முதல் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட புற நோயாளிகள், உள் நோயாளிகள் என அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் சேலம் அரசு மருத்துவமனையில் இன்று உள் நோயாளிகள், புற நோயாளிகள் மட்டுமல்லாது மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பணிபுரிகின்றனர். அரசு மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், இல்லை என்றால் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
4 சக்கர வாகனத்தில் வரும் நபர்கள் மற்றும் மருத்துவர்களை மருத்துவமனை பணியாளர்கள் கட்டாயப்படுத்துவதில்லை. பொது சுகாதாரத் துறையினர் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் ஒரு சிலர் முக கவசம் அணியாமல் வருவதையும் பார்க்க முடிகிறது.
எனவே கொரோனா பெருந்தொற்று நோயை கட்டுக்குள் கொண்டு வர நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






