என் மலர்tooltip icon

    சேலம்

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படை எடுத்து உள்ளனர்.
    • குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படை எடுத்து உள்ளனர்.

    இந்தநிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காடு மலைபாதையில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் வழக்கமாக செல்லும் மலைப் பாதையில் வாகனங்கள் செல்லாமல், அயோத்தியாபட்டணம் அருளே உள்ள குப்பனூர் வழியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இன்று ஞாயிற்று கிழமை என்பதாலும், கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன் போன்ற வாகனங்களில் ஏற்காடு வந்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மலை பாதையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. இதுபோல ஏற்காடு ரவுண்டானா மற்றும் படகு இல்லம், பஸ் நிலைய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். 

    • கோடை விடுமுறை மற்றும், சனி, ஞாயிறு, மே தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
    • சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், ஏற்காடு களை கட்டியுள்ளது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும், சனி, ஞாயிறு, மே தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

    தொடர் விடுமுறையின் கடைசி நாள் என்பதால், இன்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஏற்காட்டிற்கு வர தொடங்கினர். ஏற்காட்டின் ரம்மியமான சூழலையும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையும், சிலு சிலு காற்றையும் அவர்கள் அனுபவித்து மகிழந்தனர். மேலும் இங்குள்ள பூங்காக்களை கண்டுகளித்தும், ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து குதூகலித்தனர்.

    வெயிலின் தாக்கமில்லாமல் நிலவும் அருமையான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ரோஜா தோட்டத்தில் பூத்துள்ள வண்ண மலர்களையும், அண்ணா பூங்காவில் உள்ள வண்ணமயமான மலர்களையும், லேடிசீட், பக்கோடா பாயின்ட் போன்ற காட்சி முனைகளுக்கும் சென்று இயற்கையின் அழகை ரசித்தனர். சேர்வராயன் கோவில், ஐந்திணை பூங்கா, பீக்கு பார்க் போன்ற இடங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    அதிகமான சுற்றுலா பயணிகளிள் வருகையால், ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தது. சிலர் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல், இரவு முழுவதும் காரில் தங்கும் நிலையும் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், ஏற்காடு களை கட்டியுள்ளது.

    • தமிழ்நாடு கிராம வங்கி நகை மதிப்பீட்டாளர் சங்க கூட்டம் சேலத்தில் நடந்தது.
    • கூட்டத்தில் போலி நகை களை அடகு வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு கிராம வங்கி நகை மதிப்பீட்டாளர் சங்க கூட்டம் சேலத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலை வர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். சட்ட ஆலோ சகர் மாலைக்கண்ணு முன்னிலை வகித்தார். இதில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் போலி நகை களை அடகு வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நகை மதிப்பீட்டா ளர்களை நிரந்தர பணியா ளர்களாக மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை களை வலி யுறுத்தி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    • ஜாகிர் அம்மாபாளையத்தில் மளிகை கடை யில் வேலை செய்து வந்தார்.
    • கடைக்கு வந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழகினார். திருமணமானதை மறைத்து மாணவியை காதலித்தார்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அடுத்த தேக்கம்பட்டி வட்டக்காட்டை சேர்ந்தவர் வினித் (வயது 23). திருமண மாகி மனைவி மற்றும் ஒன்றரை வயதில் மகன் உள்ளார்.

    இவர் ஜாகிர் அம்மாபா ளையத்தில் மளிகை கடை யில் வேலை செய்து வந்தார். அப்போது கடைக்கு வந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழகினார். திருமணமானதை மறைத்து மாணவியை காதலித்தார்.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அவர் மாண வியை மறைவான இடத் திற்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே காத்திருந்த வினித்தின் தம்பி விக்னேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகாஷ் (19), அருள்குமார் (23), சீனிவாசன் (23) ஆகியோர் சிறுமிக்கு அடுத்த டுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

    அதேபோல மறுநாளும் அந்த மாணவிக்கு 5 பேரும் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தந்தையிடம் கூறி கதறி அழுதார். மாணவியின் தந்தை புகாரின்படி, சூரமங்க லம் மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவு களில் வழக்கு பதிவு செய்து, அண்ணன், தம்பி உட்பட 5 பேரை நேற்று கைது செய்த னர். 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட னர்.

    • மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே மழைநீர் வடிகால் ஓடை உள்ளது.
    • ஓடையில் சுமார் 35 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் மிதந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே மழைநீர் வடிகால் ஓடை உள்ளது. இந்த ஓடையில் சுமார் 35 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் மிதந்தது.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர், கரு மலைகூடல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில், உயிரிழந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்த வர் என்று விவரம் தெரியவில்லை. அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீர் நிலைகளில் குழந்தைகள் நீச்சல் தெரியா மல் இறங்குவதும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் மிகுந்த வருத்தமளிக்கிறது.
    • குழந்தை களுக்கு தக்க அறிவு ரைகள் வழங்கி உடனடியாக குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பள்ளி மற்றும் கல்லூரி கள் விடுமுறை காலம் என்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் குழந்தைகள் நீச்சல் தெரியா மல் இறங்குவதும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் மிகுந்த வருத்தமளிக்கிறது.

    சேலம் மாவட்டத்தில் உள்ளநீர் நிலைகளில் குழந்தைகள் நீச்சல் தெரியா மல் இறங்குவதும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில், குழந்தைகள் இறங்காமல் கவனமுடனும், எச்சரிக்கை யுடனும், பாதுகாப்புடனும் இருப்பதை பெற்றோர் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர் தக்க அறிவுரை கள் வழங்க வேண்டும்.

    குழந்தைகள் நீர் நிலைக ளில் இறங்குவதையோ, குளிப்பதையோ கண்டால் பெரியோர், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் குழந்தை களுக்கு தக்க அறிவு ரைகள் வழங்கி உடனடியாக குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர் வினை சேலம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு கள் மற்றும் வருவாய்த்துறை யினர் ஆட்டோ மூலம் வீதி வீதியாக விழிப்புணர்வு களை ஏற்படுத்த உத்தர விடப்பட்டுள்ளது.

    குறிப்பாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமுடன் கண்கா ணித்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    கலெக்டர் அறிவுரையை தொடர்ந்து தாரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஒலி பெருக்கி மூலம் வரு வாய் துறையினர் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். அப்போது பெற்றோர்க ளுக்கு தங்களது குழந்தைகள் நீர் நிலைகளில் இரங்கமல் இருக்க கவனமுடன் இருக்க வலியுறுத்தவேண்டும்.

    மேலும் நீர் நிலைகளில் குழந்தைகள் குளிப்பதை பார்த்தால் பொதுமக்கள். பெரியவர்கள். அரசு அலுவ லர்கள் ஆகியோர் குழந்தை களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இதேபோல் மேட்டூர் காவிரி ஆற்றங்கரையில், மேட்டூர் வருவாய் ஆய்வா ளர் லீலா, கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் சிறுவர், சிறுமிகள் நீர் நிலைகளில் நீராட தன்னிச்சையாக செல்லவேண்டாம் எனவும், தங்கள் குழந்தைகளை கண்காணிப்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • ரத்தம் சிந்தி உழைப்பவர்களை நினைவு கூரும் வகையில் மே தினம் கொண்டாடப்படுகிறது.
    • தமிழகத்தில் 1 லட்சத்து 37 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 247 கோடி பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி புதிய நிர்வாகிகளுக்கான நேர்காணல் மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி மண்டலம் 4-ல் உள்ள சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான நேர்காணல் சேலத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர், பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் சேலம் ரேடிசன் ஓட்டலில் நடைபெற்று வருகிறது.

    இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அவர்களுடன் நேர்காணலை நடத்தி வருகிறார். அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி நேர்காணல் முதலில் தொடங்கியது. அப்போது நேர்காணலுக்கு வந்த இளைஞர்களிடம் அரசியல் அனுபவம், பொது சேவைகள், கழக அமைப்புகளின் பணியாற்றியது தொடர்பான புகைப்படங்கள், கழக உறுப்பினர் அட்டைகள், வயதை நிரூபிப்பதற்கான சான்றிதழ்களையும் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் குறித்த பல்வேறு கேள்விகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மேற்கு, தருமபுரி மேற்கு, கிழக்கு, சேலம் மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்டத்திற்கான நேர்காணல் நடக்கிறது. இதையொட்டி ரேடிசன் ஓட்டல் முன்பு தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

    முன்னதாக சேலம் மெய்யனூர் அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு மே தினத்தையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரத்தம் சிந்தி உழைப்பவர்களை நினைவு கூரும் வகையில் மே தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உங்கள் அனைவருக்கும் இந்த நன்நாளில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவிலேயே 1923-ம் ஆண்டு முதல் மே தினம் தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. தொழிலாளர் உயிரை மதிக்கும் இயக்கம் தி.மு.க. இந்தியாவில் முதன் முறையாக விடுப்புடன் சம்பளம், 20 சதவீதம் போனஸ் கொடுத்ததும், கூலி தொழிலாளர்களுக்கு வீடு, கை ரிக்சா ஒழிப்பு, பணிக்கொடை வழங்கல், விபத்து காப்பீட்டு திட்டம் என அனைத்தையும் தந்தது கலைஞர் அரசு. 1990-ம் ஆண்டு நேப்பியர் பூங்காவுக்கு மே தின பூங்கா என கலைஞர் பெயர் சூட்டினார். நான் மே தினத்தில் அங்கு செல்வேன், இன்று உங்களுடன் மே தினம் கொண்டாடுவது சிறப்பு. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு சென்று மே தின வாழ்த்து சொல்லியுள்ளார்.

    தமிழகத்தில் 1 லட்சத்து 37 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 247 கோடி பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளது. 12 மணி நேர வேலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்திருந்தார். மே தின விழாவான இன்று அந்த சட்டத்தை திரும்ப பெறுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தி.மு.க. அரசு எப்போதும் தொழிலாளர் நலனுக்கு பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மேயர் ராமச்சந்திரன், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், உதயநிதி மன்ற மாநில செலலாளர் பாபு, மாவட்ட தலைவர் ராஜ்குமார், செயலாளர் தர்மராஜ், பொருளாளர் நடராஜ், தொழில்நுட்ப அணி டாக்டர் தருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.
    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 462 கனஅடியாக சரிந்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 101.21 அடியாக இருந்தது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    • 5- ம் வகுப்பு படித்து வருகிறாள்.
    • அதே பள்ளியில் 8- ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவியை அடித்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள பாரகல்லூர் பகுதியை சேர்ந்த மாதையன்- பிரேமா தம்பதியின் மகள் அரசு நடுநிலை பள்ளியில் 5- ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பள்ளியில் 8- ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவியை அடித்துள்ளார்.

    இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறியதால் மாதையன்-பிரேமா இருவரும் மாணவனின் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டனர். இதில் 2 குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பை சேர்ந்த மணிகண்டன், சேகர், சத்யராஜ், ஜெகதாம்பால், மாலா, கோவிந்தன், மாதையன், பிரேமா, விஜயா, கமலக்கண்ணன் உட்பட 10 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கோரிமேடு அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று காலை அதிக பாரம் மரங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று குரும்பப்பட்டியை நோக்கி சென்றுக்கொண்டி ருந்தது.
    • வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கோரிமேடு அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று காலை அதிக பாரம் மரங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று குரும்பப்பட்டியை நோக்கி சென்றுக்கொண்டி ருந்தது.

    அப்போது சாலையில் உள்ள மின்சார கம்பிகள் மீது மோதியதில் மின்கம்பிகள் அறுந்து சாலையிலேயே விழுந்தது. அப்போது சாலையில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த விபத்து காரணமாக சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, செட்டி சாவடி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    • அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து அந்த நபரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பிச் சென்றுவிட்டார்.
    • விட்டுச் சென்ற தடயங்களையும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளையும் வைத்து, வலைவீசி தேடி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி செல்லியம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சின்னசாமி (வயது 63). வாழப்பாடி உள்பட பல்வேறு பகுதியில் வட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அவரது மனைவி விஜயலட்சுமியை திருப்பத்தூரிலுள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இன்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவரது வீட்டு கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்றபோது இவரது வீட்டுக்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடிச்சென்றார். அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து அந்த நபரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பிச் சென்றுவிட்டார்.

    சின்னுசாமி தனது வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ. 1 லட்சம் ஆகியவற்றை அந்த மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றதும், பட்டுப்புடவை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பேக்கிங் செய்து கொள்ளையடித்து செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து, வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் வீட்டில் தங்க நகை மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை, அவர் விட்டுச் சென்ற தடயங்களையும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளையும் வைத்து, வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான ஆடியோவுக்கு இதுவரைக்கும் முதலமைச்சர் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?
    • ஏழை, எளிய மாணவ-மாணவிகள் மருத்துவராக வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றிய அரசு அ.தி.மு.க. அரசு.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது அவர் தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் இன்றைக்கு முடங்கி கிடக்கிறது. முதியோர் உதவி தொகை கூட பல இடங்களில் நிறுத்திவிட்டார்கள். தி.மு.க.பொறுப்பேற்ற பிறகு நம்முடைய எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிறு பணிகளை கூட செயல்படுத்தப்படவில்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு புறக்கணிக்கிறது.

    திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதி அளித்த உத்தரவை கடும் கண்டனம் தெரிவித்தபின் அரசு வாபஸ் பெற்றது. மக்களை பற்றி சிந்திக்காத முதலமைச்சர் இன்றைக்கு நாட்டை ஆளுகிறார்.

    தி.முக. அரசு கும்ப கர்ண தூக்கத்தில் இருந்து எழுந்து போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டும்.

    ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான ஆடியோவுக்கு இதுவரைக்கும் முதலமைச்சர் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?,

    அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ-மாணவிகள் 41 சதவீதம் ஆகும். நான் ஆட்சி பொறுப்பேற்றபோது அரசு பள்ளியில் படித்த 9 பேர் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்தனர். அரசு பள்ளி மாணவர்களின் நலனை சிந்தித்து நான் நீட் தேர்வு இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன்.

    ஏழை, எளிய மாணவ-மாணவிகள் மருத்துவராக வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றிய அரசு அ.தி.மு.க. அரசு. ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த 564 பேர் இன்றைக்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிக்கிறார்கள். மருத்துவ கல்வி கட்டணம் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கமே கல்வி கட்டணம் செலுத்தும் என்று அறிவித்தேன் அதன்படி மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

    எடப்பாடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. என்னை முதலமைச்சராக உருவாக்கியதும் எடப்பாடி சட்டமன்ற மக்களாகிய நீங்கள் தான். பொதுச் செயலாளரானதும் உங்களுடைய ஆதரவால் தான். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

    ×