search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

    • கோடை விடுமுறை மற்றும், சனி, ஞாயிறு, மே தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
    • சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், ஏற்காடு களை கட்டியுள்ளது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும், சனி, ஞாயிறு, மே தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

    தொடர் விடுமுறையின் கடைசி நாள் என்பதால், இன்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஏற்காட்டிற்கு வர தொடங்கினர். ஏற்காட்டின் ரம்மியமான சூழலையும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையும், சிலு சிலு காற்றையும் அவர்கள் அனுபவித்து மகிழந்தனர். மேலும் இங்குள்ள பூங்காக்களை கண்டுகளித்தும், ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து குதூகலித்தனர்.

    வெயிலின் தாக்கமில்லாமல் நிலவும் அருமையான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ரோஜா தோட்டத்தில் பூத்துள்ள வண்ண மலர்களையும், அண்ணா பூங்காவில் உள்ள வண்ணமயமான மலர்களையும், லேடிசீட், பக்கோடா பாயின்ட் போன்ற காட்சி முனைகளுக்கும் சென்று இயற்கையின் அழகை ரசித்தனர். சேர்வராயன் கோவில், ஐந்திணை பூங்கா, பீக்கு பார்க் போன்ற இடங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    அதிகமான சுற்றுலா பயணிகளிள் வருகையால், ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தது. சிலர் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல், இரவு முழுவதும் காரில் தங்கும் நிலையும் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், ஏற்காடு களை கட்டியுள்ளது.

    Next Story
    ×