என் மலர்
நீங்கள் தேடியது "ஆண் பிணம் மீட்பு"
- 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- இதை பார்த்த பொதுமக்கள் ஆத்தூர் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் தங்கும் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் ஆத்தூர் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில், பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்தபோது, இறந்தவருடன் 2 பேர் வந்துள்ளனர். 3 பேரும் மது போதையில் சிறுவாச்சூர் செல்லும் பஸ்சில் ஏற முயன்றபோது, நடத்துனர் அவர்களை பஸ்சில் ஏற்ற மறுப்பது பதிவாகி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கொலை செய்து வீசப்பட்டாரா? விசாரணை
- வலது கையில் பூமாலை, பெண்ணின் போட்டோ பச்சை குத்தப்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வரக்கூடிய பழைய பாலாற்று பாலத்துக்கு அடியில் வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட ஆண் பிணம் சிக்கி இருந்தது.
இதனை கண்ட பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
முதலில் வேலூர் தீயணைப்பு துறையினரை வரவழைத்து பிணத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டவருக்கு சுமார் 40 முதல் 50 வரை வயது வரை இருக்கும். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. பேண்ட் சட்டை அணிந்திருந்தார். வலது கையில் பூமாலை போட்டது போலவும் ஒரு பெண்ணின் போட்டோவும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் போலீசார் பிணமாக கிடந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது உடல் சிதைந்திருந்தது. வேலூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள தொலைவிலிருந்து உடல் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது கொலை செய்து வீசப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விரிஞ்சிபுரம் மற்றும் வேலூர் பகுதியில் ஆண்கள் யாராவது மாயமாகி உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யார்? என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் கோட்டை பின்புறம் அகழியில் இன்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக மிதந்தவர் யார் என்பது தெரியவில்லை. வெள்ளை நிற சட்டை நீல நிற பேண்ட் அணிந்திருந்தார். அவரது உடலில் எந்தவிதமான அடையாளங்களும் இல்லை.
அவர் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கி உள்ளனர்.
வேலூரில் யாராவது மாயமாகி உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் இன்று காலை கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- யார்? என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் புதிய பஸ் நிலையம் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒரு வர் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து சப் - இன்ஸ்பெக்டர் தினேஷ் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்றும், விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்.
- யார்? என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள காழியூர் கிராமத்தில் அத்தி செல்லும் சாலையில் சிறிய பாலம் உள்ளது.
இந்த பாலத்திற்கு அடியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
தகவல் அறிந்து காழியூரில் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் சம்பவ இடம் சென்று பார்த்தார்.
இதுகுறித்து செய்யாறு போலீசில் புகார் செய்தார்.
செய்யாறு போலீசார் உடலை மீட்டு இறந்தவர் என்ன காரணத்துக்காக இறந்து கிடந்தார்.
எந்த ஊரை சேர்ந்தவர் காணாமல் போனவர் பட்டியலில் இறந்த நபர் இருக்கின்றாரா என்ற பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
- மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே மழைநீர் வடிகால் ஓடை உள்ளது.
- ஓடையில் சுமார் 35 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் மிதந்தது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம், மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே மழைநீர் வடிகால் ஓடை உள்ளது. இந்த ஓடையில் சுமார் 35 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் மிதந்தது.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர், கரு மலைகூடல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், உயிரிழந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்த வர் என்று விவரம் தெரியவில்லை. அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த, குடியானகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு சொந்தமான நிலத்தில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது.
அந்த வீட்டில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக குடியானகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் அனுமந்தனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அனுமந்தன் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தெப்பகுளம் ஆழம் அதிகம் என்பதால் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
- போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். இதனால் சமயபுரம் கோவில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.
இந்த கோவிலுக்கு உரிய தெப்பக்குளம், கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. இந்த தெப்ப குளத்தில் இருந்துதான் பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்தி, பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று அம்மனை தரிசிப்பார்கள்.
இந்த தெப்ப குளத்தில்தான் தெப்ப உற்சவம் நடைபெறும். கோவிலில இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள இந்த தெப்பகுளம் ஆழம் அதிகம் என்பதால் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
பக்தர்கள் குளத்தில் இறங்கி குளிக்க வேண்டாம் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு எச்சரிக்கை பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தெப்பக்குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது அங்கு சென்ற போலீசார் காக்கி சட்டை, பனியன் அணிந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதை கண்டனர்.

இதனை தொடர்ந்து அங்கு விசாரணையை தொடங்கிய போலீசார், தெப்பகுளத்தை சுற்றி சோதனை மே ற்கொண்டனர். அப்போது அங்கு உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் மேலும் ஒரு ஆண் சடலம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த சடலத்தையும் மீட்டனர். இரண்டு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்கள் யார்? இது விபத்தா? தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து சமயபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் 2 ஆண் சடலங்கள் மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாணாவரம் ரெயில் நிலையம் அருகே மீட்பு
- போலீசார் விசாரணை
நெமிலி:
பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி ரெயில் நிலையம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் அந்தப் பகுதியில் இறந்து கிடந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






