என் மலர்tooltip icon

    சேலம்

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
    • கடந்த சில மாதங்களாக நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக இருந்தது.

    மேட்டூர்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று காலை விநாடிக்கு 1075 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3980 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து நேற்று காலை நீர்மட்டம் 101.16 அடி ஆனது.

    இந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து இன்று காலை 8 மணிக்கு நீர்மட்டம் 101.30 அடியாக உயர்ந்தது.

    • சாயம்மாள் (வயது 70). இவர் கடந்த சில மாதங்களாக தீராத இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • அருகில் உள்ள மூங்கப்பாடி முனியப்பன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார்.

    சேலம்:

    சேலம் கருப்பூரை அடுத்த மூங்கப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சாயம்மாள் (வயது 70). இவர் கடந்த சில மாதங்களாக தீராத இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை வெளியில் சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்ப வில்லை. இதனால் உறவி னர்கள் அந்த பகுதியில் தேடினர். அப்போது அருகில் உள்ள மூங்கப்பாடி முனியப்பன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற கருப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கார்த்தி (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
    • அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கார்த்தியின் தாய் அவரை கண்டித்தார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி அடுத்த காட்டூர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கார்த்தியின் தாய் அவரை கண்டித்தார். இதனால் மனமுடைந்த கார்த்தி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    அதனை பார்த்த உறவினர்கள் கதறினர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சமலை சித்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை சிறப்பு திருவிழா நடைபெற்று வருகிறது.
    • திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகர் புறப்பாடு நடந்தது.

    காக்காபாளையம்:

    இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை சிறப்பு திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகர் புறப்பாடு நடந்தது . அப்போது சிவ நர்த்தனம் என்ற பக்தி நடன நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சுமார் 1 மணி அளவில் காலாங்கி சித்தருக்கு சந்தனத்தால் ஆன சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது .

    இன்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், ராகி களி கிண்டியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பல்வேறு வருடங்களாக பக்தர்கள் நம்பி வருகின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கானோருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    பல்வேறு குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிறப்பு அன்னதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக உருளுதண்டம் நடந்தது.

    நாளை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் மற்றும் சித்தர் வேடமிட்ட ஒருவரை மாட்டுக் கயிறால் அடிக்கும் சித்தர் திருவிளையாடல் எனும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    • பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் லோகேஷ் நிலைதடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆத்தூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜி என்பவரின் மகன் லோகேஷ் (வயது 26). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு மதுமிதா என்ற மனைவியும் தர்ஷன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    இவர் 3 நாட்கள் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான திருச்செங்கோட்டிற்கு சென்னையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்நிலையில் நேற்று இரவு விடுமுறை முடிந்ததால் இன்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு உள்ளார்.

    ஆத்தூர் அருகே ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு ரெயில்வே மேம்ப லம் பணி நடை பெறுகிறது. மேம்பாலம் அமைப்பதற்காக அங்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் லோகேஷ் நிலைதடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • லோகேஷ் (வயது 26). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
    • 3 நாட்கள் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான திருச்செங்கோட்டிற்கு சென்னையில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் வந்தார்.

    ஆத்தூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜி என்பவரின் மகன் லோகேஷ் (வயது 26). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு மதுமிதா என்ற மனைவியும் தர்ஷன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    இவர் 3 நாட்கள் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான திருச்செங்கோட்டிற்கு சென்னையில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு விடுமுறை முடிந்த தால் இன்று அதிகாலை தனது மோட்டார்சைக்கிளில் திருச்செங்கோட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு உள்ளார்.

    ஆத்தூர் அருகே ராசிபுரம் -ஆத்தூர் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு ெரயில்வே மேம்பாலம் பணி நடை பெறுகிறது. மேம்பாலம் அமைப்பதற்காக அங்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் லோகேஷ் நிலைதடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஐ.என்.டி.யு.சி இயக்கத்தின் இணைப்பு சங்கமான நீலமலை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மே தின ஊர்வலம் நடை பெற்றது.
    • 1000-த்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், பச்சை, வெள்ளை சீருடை அணிந்து கலந்து கொண்டனர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் ஐ.என்.டி.யு.சி இயக்கத்தின் இணைப்பு சங்கமான நீலமலை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மே தின ஊர்வலம் நடை பெற்றது. இதில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், பச்சை, வெள்ளை சீருடை அணிந்து கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தை மாநில செயலாளர் நல்லமுத்து தொடங்கி வைத்தார். இதில், தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகள் நமது நாட்டில் நசுக்கப்படுகின்றன. முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்கள் திருத்தப்படு கின்றன. இந்த அநீதி முறியடிக்கப்பட வேண்டும். தொழிலாளர்க ளுக்கு பாதுகாப்பு வேண்டும். போராடி பெற்ற 8 மணி நேரம் வேலை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் தொடங்கிய ஊர்வலம், பஸ் நிலையம் வழியாக தனியார் தங்கும் விடுதி வரை நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாநில மூத்த பொதுச் செயலாளர் நல்லமுத்து, மாநில செயலாளர் தேவராஜூ, மேக்னசைட் தலைவர்கள் சரவணன், மாதேஸ்வரன், மகாலிங்கம், தலேமா தேசிய தொழிலாளர் சங்கம் அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    அனைத்து தொழிலாளர்க ளுக்கும் மே தின நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

    • 12 வயது சிறுமிக்கு பூங்காவனம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது.
    • பயந்த போன சிறுமி, வீட்டிற்கு ஓடி வந்து தாயிடம் அழுது கொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த பூங்காவனம் (வயது 50), கூலி தொழிலாளி. இவர் 12 வயது சிறுமிக்கு பூங்காவனம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. இதனால் பயந்த போன சிறுமி, வீட்டிற்கு ஓடி வந்து தாயிடம் அழுது கொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா (பொறுப்பு), எஸ்.ஐ சாரதா ஆகியோர் பூங்காவனத்தின் மீது போக்சோ வழக்கு பதிந்து, தலைமறைவான அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பூங்காவனம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 101.16 அடியாக இருந்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீப காலமாக மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் குறைந்த அளவே வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

    நேற்று காலை அணைக்கு விநாடிக்கு 462 கன அடியாக இருந்த நீர்வரத்து இந்த மழையினால் இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1075 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 101.16 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    • கடந்த மாதம் 15-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர், மயங்கி கிடந்தார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில், கடந்த மாதம் 15-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர், மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள், முதியவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரி வித்தனர். உயிரிழந்த முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரி யவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று நள்ளிரவு அந்த வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர்.
    • 2 பேர் தனது வீட்டில் திருடியதாக கூறி இருந்தார்

    சேலம்:

    ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை ஊராட்சி சின்னவடகம்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 39). கட்டிட மேஸ்திரி. அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு ஒன்று உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு அந்த வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அவர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 2¼ பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து சேகர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அதில் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தனது வீட்டில் திருடியதாக கூறி இருந்தார்.இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பால மலை ஊராட்சியில் மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான முத்துராமன் தலைமை வகித்தார்.

    மேட்டூர்:

    கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பால மலை ஊராட்சியில் மேட்டூர் வட்ட சட்டப்பணி கள் குழு சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான முத்துராமன் தலைமை வகித்தார். மேட்டூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் பத்மபிரியா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவர் மணிவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகா மில் குழந்தை திருமணத்தை தடுப்பது மற்றும் அனைவரும் கல்வி கற்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் 16 பேருக்கு வீட்டு மனை பட்டா, 10 பேருக்கு முதியோர் உத வித்தொகை வழங்கப்பட்டது.

    இதில் வருவாய்த்துறை அதி காரிகள் மற்றும் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×