என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு திரு விழா"

    • கஞ்சமலை சித்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை சிறப்பு திருவிழா நடைபெற்று வருகிறது.
    • திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகர் புறப்பாடு நடந்தது.

    காக்காபாளையம்:

    இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை சிறப்பு திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகர் புறப்பாடு நடந்தது . அப்போது சிவ நர்த்தனம் என்ற பக்தி நடன நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சுமார் 1 மணி அளவில் காலாங்கி சித்தருக்கு சந்தனத்தால் ஆன சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது .

    இன்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், ராகி களி கிண்டியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பல்வேறு வருடங்களாக பக்தர்கள் நம்பி வருகின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கானோருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    பல்வேறு குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிறப்பு அன்னதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக உருளுதண்டம் நடந்தது.

    நாளை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் மற்றும் சித்தர் வேடமிட்ட ஒருவரை மாட்டுக் கயிறால் அடிக்கும் சித்தர் திருவிளையாடல் எனும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    ×