பாலமலையில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

பால மலை ஊராட்சியில் மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான முத்துராமன் தலைமை வகித்தார்.
முகாமில் கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துராமன் வழங்கிய போது எடுத்த படம்.
முகாமில் கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துராமன் வழங்கிய போது எடுத்த படம்.
Published on

மேட்டூர்:

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பால மலை ஊராட்சியில் மேட்டூர் வட்ட சட்டப்பணி கள் குழு சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான முத்துராமன் தலைமை வகித்தார். மேட்டூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் பத்மபிரியா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவர் மணிவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகா மில் குழந்தை திருமணத்தை தடுப்பது மற்றும் அனைவரும் கல்வி கற்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் 16 பேருக்கு வீட்டு மனை பட்டா, 10 பேருக்கு முதியோர் உத வித்தொகை வழங்கப்பட்டது.

இதில் வருவாய்த்துறை அதி காரிகள் மற்றும் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com