சேலம் அருகேகிணற்றில் பிணமாக மிதந்த மூதாட்டி

சாயம்மாள் (வயது 70). இவர் கடந்த சில மாதங்களாக தீராத இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். அருகில் உள்ள மூங்கப்பாடி முனியப்பன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார்.
சேலம் அருகேகிணற்றில் பிணமாக மிதந்த மூதாட்டி
Published on

சேலம்:

சேலம் கருப்பூரை அடுத்த மூங்கப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சாயம்மாள் (வயது 70). இவர் கடந்த சில மாதங்களாக தீராத இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை வெளியில் சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்ப வில்லை. இதனால் உறவி னர்கள் அந்த பகுதியில் தேடினர். அப்போது அருகில் உள்ள மூங்கப்பாடி முனியப்பன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற கருப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com