என் மலர்
சேலம்
- அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு அருகில் உள்ள காத்திருப்போர் அறையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் மயங்கி கிடந்தார்.
- டாக்டர்கள் அந்த பெண்ணை பரிசோதித்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு அருகில் உள்ள காத்திருப்போர் அறையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் மயங்கி கிடந்தார். அங்கு வந்த தூய்மை பணியாளர் சிவா என்பவர் அந்த பெண்ணை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். டாக்டர்கள் அந்த பெண்ணை பரிசோதித்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதுபற்றி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் விரந்து வந்து அந்த பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தமிழகத்தில் அரசு பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்ப டுவது வழக்கம்.
- நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் 17-ந் தேதி தொடங்கியது.
சேலம்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்ப டுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் 17-ந் தேதி தொடங்கியது.
இதையடுத்து சேர்க்கை பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, அரசுப் பள்ளிகளில் சேருவதால் கிடைக்கும் பலன்கள், நலத்திட்டங்களை முன்வைத்து ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன் பலனாக அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
1-ம் வகுப்பு சேர்க்கைக்கு மட்டும் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் விண்ண ப்பங்களை பெற்றுள்ளனர். இதனால் நடப்பு ஆண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- மகுடஞ்சாவடி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 19-ந்தேதி பூச்சாட்டுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- 10-ந்தேதி ஊர் மெரவனையும் நடைபெற உள்ளது.
மகுடஞ்சாவடி:
சேலம் அருகே மகுடஞ்சாவடி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 19-ந்தேதி பூச்சாட்டுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மகுடஞ்சாவடி மளிகை கடைக்காரர்கள் சங்கம் சார்பில் மெரவணை நடைபெற்றது.
இன்று பருத்தி வியாபாரிகள் சங்கம் சார்பிலும், நாளை (வியாழக்கிழமை) சிம்ம வாகனத்தில் அம்மனுக்கு மெரவணை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் அம்மனுக்கு திருக்கல்யாணமும், மாலை பொங்கல் பண்டிகை, ரத உற்சவம் நடைபெற உள்ளது. 7-ந்தேதி வெற்றிலை வியாபாரிகள் சங்கம் சார்பிலும், 8-ந்தேதி அகரம் வெள்ளம் செட்டியார் சங்கம் மற்றும் அரிசி வியாபாரிகள் சங்கம் சார்பிலும், 10-ந்தேதி ஊர் மெரவனையும் நடைபெற உள்ளது. 11-ந்தேதி மஞ்சள் நீராட்டமும் அம்மன் குடிபுகுதலும் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பட்டினை தர்மகர்த்தாக்கள், அறங்காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
- கோடை காலம் தொடங்கியதுமே பலாப்பழம் வரத்து அதிகமாக இருக்கும்.
- ஏற்காடு மலைப்பகுதியில் நாகலூர், பட்டிப்பாடி, வேலூர், முழுவி, குண்டூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன.
சேலம்:
கோடை காலம் தொடங்கியதுமே பலாப்பழம் வரத்து அதிகமாக இருக்கும். ஏற்காடு மலைப்பகுதியில் நாகலூர், பட்டிப்பாடி, வேலூர், முழுவி, குண்டூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் ஆண்டுக்கு ஒரு முறை கோடை காலத்தில் காய்க்கும் தன்மை கொண்டவை. தற்ேபாது சீசன் தொடங்கியதை அடுத்து பலா பழங்கள் காய்த்து தொங்குகிறது.
ஏற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காய்க்கும் மலை பலாக்கள் அதிக சுவை கொண்டதால், பலா பழங்களை பறித்து விற்பனைக்காக ஏற்காட்டில் சாலையோரம் குவித்து விற்பனை செய்து வருகின்றனர்.
அதேபோல் வெளியூர்க ளுக்கும், பலாப்பழங்களை விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் என பலரும் பலாப்பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ ரூ. 25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- அரிசிபாளையம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பலப்பட்டறை காளியம்மன், ஸ்ரீ வீரபத்திரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
- அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மாலையில் தாய்வீட்டு சீர் அழைத்தல், இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
சேலம்:
சேலம் அரிசிபாளையம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பலப்பட்டறை காளியம்மன், ஸ்ரீ வீரபத்திரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று அம்மனுக்கு பால் குட ஊர்வலமும், மதியம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மாலையில் தாய்வீட்டு சீர் அழைத்தல், இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று காலை முனியப்பனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை 5 மணிக்கு தெப்பகுளம் விநாயகர் கோவிலில் இருந்து சக்திகரகம், பூங்கரகம், காளிவேடம், அலகு குத்துதல், அக்னிசட்டி திருவீதி உலா நடைபெறுகிறது.
நாளை (வியாழக்கிழமை) பகல் 12 தணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்தல், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனையும், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு கும்ப பூஜையும் நடக்கிறது.
5-ந்தேதி காலை 10 மணிக்கு 108 வாசனை திரவியங்களுடன் அம்மனுக்கு சிறப்பு மஹா அபிசேகமும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ சிறப்பு அலங்காரமும், ஸ்ரீ பலப்பட்டறை காளியம்மன் இறையருள் நண்பர்கள் குழு, சாமி தூக்கும் நண்பர்கள் குழு சார்பில் அன்னதானமும் நடைபெறுகிறது.
- சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது.
- நேற்று மட்டும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. நேற்று மட்டும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்
பட்டுள்ளது. அதே சமயத்தில் நேற்று 38 பேர் குணமடைந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ள வர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் மருத்துவமனை களிலும், மற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முககவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- சதுரங்க சேம்பியன்ஷிப் போட்டிகள் சேலம் மகேந்திரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
- 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 350-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கணைகள் கலந்துக்கொண்டனர்.
சேலம்:
73 -வது மாநில அளவிலான சதுரங்க சேம்பியன்ஷிப் போட்டிகள் சேலம் மகேந்திரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 350-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கணைகள் கலந்துக்கொண்டனர்.
இறுதிப்போட்டியில் திருச்சியைச் சேர்ந்த அனூப் சங்கர் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சென்னையைச்சேர்ந்த தினேஷ்குமார் ஜெகநாதன் 2-வது இடத்தையும், மிதிலேஷ் 3-வது இடத்தையும், ஆதர்ஷ் 4-வது இடத்தையும் பிடித்தனர்.
இவர்கள் 4 பேரும் ஆகஸ்ட் மாதம் மகாராஷ்ட்டிராவில் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு தமிழகம் சார்பாக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மகேந்திரா கல்லூரி தாளாளர் மோகனசுந்தரம், மற்றும் சேலம் சௌத் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கினர்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தேசிய நடுவர் அதுலன் சேலம் மாவட்ட சதுரங்க கழக தலைவர் பாலகிருஷ்ணன், செயளாளர் அருண்,தேசிய நடுவர்கள் பழனியப்பன்,சக்திவேல் மற்றும் சிவசுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
- சேலம் சூரமங்கலம் பகுதியில் மீன் சந்தை உள்ளது.
- ஏராளமான மீன் கடைகள் உள்ளன. கடல்மீன், ஆற்று மீன்கள் உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
சேலம்:
சேலம் சூரமங்கலம் பகுதியில் மீன் சந்தை உள்ளது. இங்கு ஏராளமான மீன் கடைகள் உள்ளன. கடல்மீன், ஆற்று மீன்கள் உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இங்கு ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பார்மாலின் ரசாயனம் கலக்கப்பட்ட மீன் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பார்மாலின் ரசாயனம் என்பது ஆய்வகத்தில் இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு பயன்படுத்துவதாகும். மீன்களில் இதை உபயோ கித்தால் அந்த மீன்களை சாப்பிடு வோருக்கு பல்வேறு நோய்கள் ஏற் படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து பார்பாலின் ரசாயனம் கலக்கப்பட்ட 130 கிலோ மீன்கள் பறிமுதல்.
- லட்சுமி (50) கணவர் இறந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக தனது ஒரே மகன் விஜய் என்பவருடன் தனது அண்ணன் சுப்ரமணியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
- இந்நிலையில் கடந்த கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் விஜய் இறந்துள்ளார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி லுள்ள சிக்கம்பட்டி கிராமம்.சின்னகாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (50) கணவர் இறந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக தனது ஒரே மகன் விஜய் என்பவருடன் தனது அண்ணன் சுப்ரமணியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் விஜய் இறந்துள்ளார். மகன் இறந்த வேதனையில் இருந்து மீளாத நிலையில் வேதனை யில் இருந்து வந்த லட்சுமி எலி மருந்தை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்த லட்சுமியை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸபத் திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுபற்றி சுப்ரமணி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும்.
- இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவ, மாணவியர்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி ஈ.கே.ஒய்.சி. (விரல் ரேகை) மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்குமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
- ஆச்சாங்குட்டப்பட்டி ஊராட்சி, மஞ்சவாடி கணவாய் பகுதியில் சேலம் - அரூர் சாலையில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
- குப்பனூரில் இருந்து 5 கி.மீ தொலைவில் ரூ.1.70 கோடி செலவில் தடுப்புச்சுவர் மற்றும் சிறு மேம்பாலம் கட்டும் பணியினை நேரில் பார்வையிட்ட்டார்.
சேலம்:
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆச்சாங்குட்டப்பட்டி ஊராட்சி, மஞ்சவாடி கணவாய் பகுதியில் சேலம் - அரூர் சாலையில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது தொடர் விபத்துக்களை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட துறை அலுவலர்களு ஆலோசனை வழங்கினார்.
தொடந்து, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் குப்பனூர் – கொட்டச்சேடு – வாழவந்தி சாலையில் குப்பனூரில் இருந்து 5 கி.மீ தொலைவில் ரூ.1.70 கோடி செலவில் தடுப்புச்சுவர் மற்றும் சிறு மேம்பாலம் கட்டும் பணியினை நேரில் பார்வையிட்ட்டார். இந்தபணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
நேற்று சாலை விபத்து ஏற்பட்ட கொட்டச்சேடு - பெலாத்தூர் செல்லும் சாலையினையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு விபத்துக்கான காரணங்கள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர், சேலம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.
சாலை சந்திப்புகள், வளைவுகள், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெறிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியானது சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்லும் பகுதியாகும். குறிப்பாக, கோடை காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வந்துசெல்லும் சுற்றுலாப் பயணிகள் விபத்தில்லாப் பயணம் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தாமல் இருப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் போன்ற சாலை பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டப் பொறியாளர் துரை, மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா, டி.எஸ்.பி.தையல்நாயகி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணக்குமார், ஏற்காடு தாசில்தார் தாமோதரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- சாதனை படைத்த மாணவ–மாணவியருக்கு பாராட்டு விழா மற்றும் 8-ம் வகுப்பு முடித்த மாணவ–மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, பள்ளி வளா கத்தில் நடைபெற்றது.
- இவ்விழாவிற்கு, பள்ளி தலைமை யாசிரியர் கதிர்வேல் தலைமை வகித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கல்வராயன் மலை மண்ணுார் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கல்வி, கலைத்திறன் மற்றும் தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ–மாணவியருக்கு பாராட்டு விழா மற்றும் 8-ம் வகுப்பு முடித்த மாணவ–மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, பள்ளி வளா கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, பள்ளி தலைமை யாசிரியர் கதிர்வேல் தலைமை வகித்தார். ஆசிரியர் சக்திவேல் வரவேற்றார். தேசிய திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் சி.அனிசியா, ஜோ. ஹாசினி ஆகியோருக்கு, பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கனவு மாணவர் விருது பெற்ற மாணவர்கள் மற்றும் கல்வி அடைவுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் மற்றும் அழகிய கையெழுத்து பயிற்சி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளியில்இந்த ஆண்டு 8-ம் வகுப்பு முடித்து வேறு பள்ளிகளில் 9-ம் வகுப்பு சேரவுள்ள மாணவ–மாணவிகளுக்கு கல்வி வழி காட்டு நிகழ்ச்சி நடை பெற்றது. இவ்விழாவில், பள்ளி மாணவ–மாணவியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.






