என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் மாநில அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள்
    X

    போட்டியில் வெற்றிபெற்றவர்களை படத்தில் காணலாம்.

    சேலத்தில் மாநில அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள்

    • சதுரங்க சேம்பியன்ஷிப் போட்டிகள் சேலம் மகேந்திரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
    • 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 350-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கணைகள் கலந்துக்கொண்டனர்.

    சேலம்:

    73 -வது மாநில அளவிலான சதுரங்க சேம்பியன்ஷிப் போட்டிகள் சேலம் மகேந்திரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 350-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கணைகள் கலந்துக்கொண்டனர்.

    இறுதிப்போட்டியில் திருச்சியைச் சேர்ந்த அனூப் சங்கர் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சென்னையைச்சேர்ந்த தினேஷ்குமார் ஜெகநாதன் 2-வது இடத்தையும், மிதிலேஷ் 3-வது இடத்தையும், ஆதர்ஷ் 4-வது இடத்தையும் பிடித்தனர்.

    இவர்கள் 4 பேரும் ஆகஸ்ட் மாதம் மகாராஷ்ட்டிராவில் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு தமிழகம் சார்பாக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மகேந்திரா கல்லூரி தாளாளர் மோகனசுந்தரம், மற்றும் சேலம் சௌத் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கினர்.

    போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தேசிய நடுவர் அதுலன் சேலம் மாவட்ட சதுரங்க கழக தலைவர் பாலகிருஷ்ணன், செயளாளர் அருண்,தேசிய நடுவர்கள் பழனியப்பன்,சக்திவேல் மற்றும் சிவசுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×