என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் பலா சீசன் களை கட்டியது
- கோடை காலம் தொடங்கியதுமே பலாப்பழம் வரத்து அதிகமாக இருக்கும்.
- ஏற்காடு மலைப்பகுதியில் நாகலூர், பட்டிப்பாடி, வேலூர், முழுவி, குண்டூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன.
சேலம்:
கோடை காலம் தொடங்கியதுமே பலாப்பழம் வரத்து அதிகமாக இருக்கும். ஏற்காடு மலைப்பகுதியில் நாகலூர், பட்டிப்பாடி, வேலூர், முழுவி, குண்டூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் ஆண்டுக்கு ஒரு முறை கோடை காலத்தில் காய்க்கும் தன்மை கொண்டவை. தற்ேபாது சீசன் தொடங்கியதை அடுத்து பலா பழங்கள் காய்த்து தொங்குகிறது.
ஏற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காய்க்கும் மலை பலாக்கள் அதிக சுவை கொண்டதால், பலா பழங்களை பறித்து விற்பனைக்காக ஏற்காட்டில் சாலையோரம் குவித்து விற்பனை செய்து வருகின்றனர்.
அதேபோல் வெளியூர்க ளுக்கும், பலாப்பழங்களை விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் என பலரும் பலாப்பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ ரூ. 25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
Next Story






