என் மலர்
சேலம்
- ரெயில்களில் பயண சீட்டு பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் டிக்கெட் பரி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் மேற்கொள்ளும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
சேலம்:
சேலம் ேகாட்டம் வழியாக செல்லும் ரெயில்க ளில் பயண சீட்டு பரிசோ தகர்கள், ரெயில்வே பாது காப்பு படையினர் அடங்கிய குழுவினர் டிக்கெட் பரி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் மேற்கொள்ளும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
அதுபோல் பொது பெட்டி டிக்கெட்டை வைத்து முன்பதிவு பெட்டி களில் பயணம் செய்த வர்கள், அதிக பார்சல் கொண்டு வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படு கிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 ஆயிரத்து 176 பேர் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது ரெயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.1.04 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ரெயில்வே கோட்ட அதி காரி தெரி வித்தார். மேலும் அவர் கூறுகையில், ரெயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தண்ட னைக்குரியது, ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
- ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
- அதன்படி நடப்பாண்டிற்கான கலந்தாய்வு வருகிற 8-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான கலந்தாய்வு வருகிற 8-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எமிஸில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
ெதாடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் உபரி பணியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் தமிழ்-12, ஆங்கிலம்-3, கணிதம்-13, அறிவியல் -17, மறறும் சமூக அறிவியல் -4 பணியிடங்கள் என 49 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் 5, தருமபுரி மாவட்டத்தில் 45, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 179 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதுபோல் உபரியாக கண்டறி யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகிற 17-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலியாக உள்ள பணியிடங்களுக்கும், கூடுதல் தேவையுள்ள இடங்க ளுக்கும் பணிமூப்பு அடிப்ப டையில் கலந்தாய்வு நடத்தப்ப டும். மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு வருகிற 20-ந்தேதி நடைபெ றும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சேலம் மாவட்ட தொழி லாளர் துறை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
- இதில் 5 நிறுவனங்களில் முரண்பா டுகள் கண்டறியப்பட்டது.
சேலம்:
சென்னை முதன்மை செயலாளர் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி, சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அறிவு ரைபடியும் சேலம், தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தலைமையில் சேலம் மாவட்ட தொழி லாளர் துறை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
சேலம் மாவட்ட எல்லைக்குட்பட்ட 28 நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009-ன் கீழ் எடைகள் மற்றும் அள வைகளின் கீழ் தயாரிப்பாளர்கள், விற்ப னையாளர்கள் மற்றும் பழுதுபார்ப்பவர்கள் (உரிமம் புதுப்பிக்கப்படா மல் செயல்படுதல் உட்பட) நிறுவனங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதில் 5 நிறுவனங்களில் முரண்பா டுகள் கண்டறியப்பட்டது.
மேலும் 29 மீன் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 12 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. மேலும் சட்டமுறை எடையளவுகள் விதிகள் 2011-ன் கீழ் பாட்டில்கள் மற்றும் சிகரெட் லைட்டர் கடைகள் உள்ளிட்ட 20 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எடை அளவுகள் மற்றும் எலக்ட்ரானிக் தராசுகள் முத்திரையின்றி பயன்ப டுத்து வதும், சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும், உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்ப டுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆய்வின் போது முரண்பாடுகள் கண்டறி யப்பட்டால் அப ராதம் உள்ளிட்ட நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்று தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தெரிவித்தார்.
- 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு, இதுவரை எந்த நிறுவனமும் செல்போன் சேவை வழங்கவில்லை.
- பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவ னத்திற்கும் கடந்த 10 ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் அரு நுாற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சியிலுள்ள பெலாப்பாடி, பெரியகுட்டி மடுவு , சின்னகுட்டிமடுவு, சந்துமலை மற்றும் பெத்தநா யக்கன்பாளையம் ஒன்றியம் மண்ணுார், கெங்கவல்லி வட்டம் கொல்லிமலை பகுதி யிலுள்ள சேரடிமூலை, பச்சமலையிலுள்ள மண்மலை, வேங்கமுடி, ஆத்துார் ஒன்றியம் பைத்துார் பகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு, இதுவரை எந்த நிறுவனமும் செல்போன் சேவை வழங்கவில்லை.
இந்த நவீன காலத்திலும் செல்போன் வசதியை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. எனவே, அதிநவீன கோபுரங்களை அமைத்து செல்போன் சேவை வழங்க வேண்டும் என மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மத்திய மாநில அரசு களுக்கும், பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவ னத்திற்கும் கடந்த 10 ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து, மத்திய அரசின், மலை கிராமங்க ளுக்கு நவீன வசதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆத்துார் தொலை தொடர்பு கோட்டத்தில் பெலாப்பாடி, பெரியகுட்டிமடுவு, சின்ன குட்டிமடுவு, சந்துமலை, மண்ணுார், சேரடிமூலை, மண்மலை, வேங்கமுடி ஆகிய 8 இடங்களில், கண்ணாடியிழை கேபிள் இணைப்புடன் அதிநவீன 4 ஜி செல்லிடப்பேசி கோபு ரங்கள் அமைக்கும் திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடங்கியுள்ளது.
இத்திட்டப்பணிகள் நிறைவடைந்ததும், இதுவரை செல்லிடப்பேசி சேவை வசதியில்லாத அனைத்து மலை கிராம மக்களுக்கும் அதிநவீன செல்லிடப்பேசி வசதி கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஏற்காட்டில் அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு நேற்று மாலை குப்பனூர் வழியாக சேலத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
- வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலம் பகுதியில் வந்தபோது, ஒரு வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா. இவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்தி டியூஷன் எடுத்து வருகிறார்.
சுற்றுலா
இந்த நிலையில் நேற்று காலை தன்னிடம் டியூஷன் படிக்கும் 20 மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் உட்பட 30 பேருடன் ஒரு வேனில் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றார். அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு நேற்று மாலை குப்ப னூர் வழியாக சேலத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
மரத்தில் மோதி...
வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலம் பகுதியில் வந்தபோது, ஒரு வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனுக்குள் இருந்த மாணவ, மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பயத்தில் கூச்சலிட்டனர்.
இந்த சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்றவர்க ளும், அருகில் இருந்தவர்க ளும் ஏற்காடு போலீசா ருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, வேனுக்குள் சிக்கிய மாணவ, மாணவி களை மீட்க தொடங்கினார்.
படுகாயம்
சிராய்ப்பு காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவ, மாணவிகளை 108 ஆம்பு லன்ஸ் மூலம் வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த னர். படுகாயம் அடைந்த 3 பேர் சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதுகுறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடரும் விபத்துகள்
மே தினமான கடந்த 1-ந் தேதி, வேலூரில் இருந்து 12 வாலிபர்கள் ஒரு வேனில் ஏற்காட்டிற்கு வந்தனர். அவர்கள் இயற்கையை ரசித்து விட்டு ஊர் திரும்பும்போது கொட்டச்சேடு அருகே வேன் விபத்தில் சிக்கி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் 11 பேர் படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் ஏற்காடு வெள்ளக்கடை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு மைக்செட் போடுவதற்காக ஈரோடு மாவட்டம் பள்ளிப்பா ளையத்தில் இருந்து ஏற்காட்டிற்கு 6 பேர் லாரியில் வந்தனர்.
அவர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று அதிகாலை குப்பனூர் வழியாக ஊர் திரும்பிய போது, ஆத்துப்பாலம் பகுதியில் லாரி மரத்தில் மோதிய விபத்தில், ஓமலூர் கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 3 நாட்களில் நடந்துள்ள, இந்தத் தொடர் விபத்துக்களால் பொதுமக்க ளும், சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குண்டும் குழியுமாக..
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், சேலம் அடிவாரம் வழியாக ஏற்காடு செல்லும் பாதை யில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடுப்புச் சுவர் மற்றும் சாலை பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சேலத்தில் இருந்து குப்பனூர் வழியாக வாகனங்கள் ஏற்காட்டிற்கு சென்று வருகிறது.
தற்போது விடுமுறை சீசன் தொடங்கி விட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குப்பனூர் பாதை குண்டும் குழியுமாக இருக்கிறது. மேலும் அவ்வப்போது ஏற்காட்டில் மழை பெய்வ தால், ஈரப்பதத்தில் வாக னத்தில் உள்ள பிரேக்கு களும் சரியாக பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்துக்கள் நடக்கின்றன. மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் ஆகியோர் விபத்து நடந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.
- கடந்த மாதம் 19-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டி ருந்தார்.
- அந்த மாணவியிடம் ரவிக்குமார் ஆசை வார்த்தை கூறி பேசி உள்ளார். பின்னர் பப்ஸ் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 40), கூலித்தொழி லாளி. இவர் 15 வயதுடைய 9-ம் வகுப்பு மாண வியை பள்ளிக்கு செல்லும் போதும், வரும் போதும் கேலி கிண்டல் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டி ருந்தார். வழியில் அந்த மாணவியிடம் ரவிக்குமார் ஆசை வார்த்தை கூறி பேசி உள்ளார். பின்னர் பப்ஸ் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து வீட்டுக்கு சென்ற அந்த மாணவி, நடந்த சம்பவங் களை அவரது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்து பள்ளி மாணவி யின் தாயார் தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், ரவிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ரவிக்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைதான ரவிக்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்த பப்ட்டு சேலம் சிரையில் அடைக்கபப்ட்டார்.
- மேட்டூர் அருகே உள்ள மாதையன்கொட்டாய் மேல்வாய்க்கால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட் டனர்.
- பஸ் கண்ணாடிகளை உடைக்க லாம் என சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் போலீசார் நேற்று மாலை மேட்டூர் அருகே உள்ள மாதையன்கொட்டாய் மேல்வாய்க்கால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட் டனர். அப்போது மேட்டூர் பொன்நகரை சேர்ந்த அர்ஜூனன் மகன் மாதேஷ் (வயது 29), எடப்பாடி கலர்காட்டை சேர்ந்த கோபி மகன் தீபக்குமார் (22) ஆகியோர் பொதுமக்கள் தங்களை பார்த்து அச்சப்பட வேண்டும் என்பதற்காக பஸ் கண்ணாடிகளை உடைக்க லாம் என சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார், அவர்களால் பொது சொத்துக்கு பங்கம் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரை யும் போலீசார் கைது செய்தனர்.
- விநாடிக்கு 1075 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3980 கன அடியாக உயர்ந்தது.
- நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 6700 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 1075 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3980 கன அடியாக உயர்ந்தது.
தொடர்ந்து இன்று நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 6700 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
நேற்று 101.16 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 101.62 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
- விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய 2 படங்கள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள 5 தியேட்டர்களில், உரிய அனுமதியின்றி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
- 5 திரையரங்குகளையும் 3 நாட்களுக்கு மூட மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்தார்.
ஆத்தூர்:
கடந்த பொங்கல் பண்டிகையை யொட்டி, ஜனவரி மாதம் 11-ம் தேதி விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய 2 படங்கள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள 5 தியேட்டர்களில், உரிய அனுமதியின்றி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
இந்த சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்ட ஆத்தூரில் உள்ள கேசவன், என்.எஸ், பத்மாலயா, பிரியாலயா, விஸ்வநாத் ஆகிய 5 திரை யரங்கு உரிமையாளர்க ளிடம் விளக்கம் கேட்டப் பட்டது. ஆனால் திரைய ரங்கு உரிமை யாளர்கள் முறையாக பதில் அளிக்காததால், இந்த 5 திரையரங்குகளையும் 3 நாட்களுக்கு மூட மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் இன்று வழக்கம்போல் 5 திரையரங்குகளிலும் காலை காட்சிக்கு ரசிகர்களுக்கு டிக்கெட் கொடுத்து திரை யரங்கில் அனுமதிக்கப் பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் தாசில்தார் தலைமைலான அதிகாரிகள், உடனடியாக படத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டு, திரையரங்கில் இருந்த ரசிகர்களை வெளி யேற்றினர். இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியே சென்றனர்.
- 7500 -க்கும் மேற்பட்ட குரூப்- பி மற்றும் குரூப்- சி ஆகிய பதவி களுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
- தேர்வுக் கட்டணமாக ரூ. 10/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து ள்ளதாவது:-
மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்.எஸ்.சி) 7500 -க்கும் மேற்பட்ட குரூப்- பி மற்றும் குரூப்- சி ஆகிய பதவி களுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 ஆகும்.
இத்தேர்விற்கான கல்வித்தகுதி, குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன் 01.08.2023 அன்றைய நிலையில் எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறைவிதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணமாக ரூ. 10/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதி லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 04.05.2023 அன்று சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. வகுப்புகள் தொடர்பான விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பித்து, இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.
- நெத்திமேடு ஜெ.ஜெ.நகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விபசாரம் நடப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேடு ஜெ.ஜெ.நகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விபசாரம் நடப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சிலர் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக, அதே பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஷாலினி (வயது 28) என்பவரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 24 வயது இளம்பெண்ணை மீட்டனர்.
- வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு
- 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன.
சேலம்:
தமிழக தொடக்கக் கல்வித்துறையில் வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன.
அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பதவி உயர்வு மூலமாக வட்டார கல்வி அதிகாரி ஆகின்றனர். நேரடி நியமனத்துக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்துகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் பட்டப்படிப்பு, பி.எட் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம்.
நேரடியாக இப்பணிக்கு வருபவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளில் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுகின்றனர். அதன் பிறகு மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.
இந்த நிலையில் வட்டார கல்வி அதிகாரி நியமனத்தில் 23 காலியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பு 2023 பிப்ரவரியில் வெளியிடப்பட்டு, மே மாதம் போட்டித் தேர்வு நடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் பிப்ரவரி கடந்து 2 மாதங்கள் ஆகியும் தேர்வுக்கான அறிவிப்பை வாரியம் வெளியிடவில்லை. கடந்த 2020 பிப்ரவரியில் நடத்தப்பட்ட வட்டார கல்வி அதிகாரி தேர்வின் முடிவுகள் கடந்த 2022 பிப்ரவரியில் வெளியிடப்பட்டன.
அத்தேர்வில் நூலிழையில் வாய்ப்பை இழந்தவர்களும், கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களும் புதிய தேர்வை எதிர்நோக்கி தயாராகி வரும் நிலையில், தேர்வு அறிவப்பை வெளியிடாமல் வாரியம் தாமதம் செய்வது பி.எட். பட்டதாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பதவி உயர்வு மூலம் 40 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார்.






