search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "convenience"

    • பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
    • நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வார்டுபாய் (ஆண் மற்றும் பெண் உதவியாளர்), உதவி குழாய் பழுது பார்ப்பவர் (பொது), இலரக மோட்டார் வாகன ஓட்டுநர், வீட்டு வேலை செய்பவர் (பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளர் மற்றும் வாடிக்கையாளர் பாரமரிப்பு நிர்வாகி (அழைப்பு மையம்) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தனியார் நிறுவனத்தின் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தெரிந்தவர்களுக்கு வீட்டு வேலை செய்பவர் (பொது), 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இலரக மோட்டார் வாகன ஓட்டுநர்ராகவும் மற்றும் உதவி குழாய் பழுது பார்ப்பவர்(பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளராகவும், 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டுபாய் ஆண் மற்றும் பெண் உதவியாளராகவும், 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வாடிக்கையாளர் பாரமரிப்பு நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

    18 முதல் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 14 நாட்கள் ஆகும். மேலும் சென்னை, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படும் இந்நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் செய்து தரப்படும். மேலும் இப்பயிற்சி யினை பெற்றவர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். பயிற்சி யினை பெற தாட்கோ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ மூலம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுக்கோட்டை மாவட்ட அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் விண்ணப்பிக்கும் வசதி தொடக்கபட்டுள்ளது
    • 26ந்தேதி முதல் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை,

    2023-2024ம் நிதியாண்டிற்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது, பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில், 26ந்தேதி முதல் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்து, அரசிதழ் பெற்றிட கட்டணத்தினை இ-செலான் மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இல்லை. இதனை புதுக்கோட்டை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு, இதுவரை எந்த நிறுவனமும் செல்போன் சேவை வழங்கவில்லை.
    • பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவ னத்திற்கும் கடந்த 10 ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் அரு நுாற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சியிலுள்ள பெலாப்பாடி, பெரியகுட்டி மடுவு , சின்னகுட்டிமடுவு, சந்துமலை மற்றும் பெத்தநா யக்கன்பாளையம் ஒன்றியம் மண்ணுார், கெங்கவல்லி வட்டம் கொல்லிமலை பகுதி யிலுள்ள சேரடிமூலை, பச்சமலையிலுள்ள மண்மலை, வேங்கமுடி, ஆத்துார் ஒன்றியம் பைத்துார் பகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு, இதுவரை எந்த நிறுவனமும் செல்போன் சேவை வழங்கவில்லை.

    இந்த நவீன காலத்திலும் செல்போன் வசதியை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. எனவே, அதிநவீன கோபுரங்களை அமைத்து செல்போன் சேவை வழங்க வேண்டும் என மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மத்திய மாநில அரசு களுக்கும், பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவ னத்திற்கும் கடந்த 10 ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து, மத்திய அரசின், மலை கிராமங்க ளுக்கு நவீன வசதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆத்துார் தொலை தொடர்பு கோட்டத்தில் பெலாப்பாடி, பெரியகுட்டிமடுவு, சின்ன குட்டிமடுவு, சந்துமலை, மண்ணுார், சேரடிமூலை, மண்மலை, வேங்கமுடி ஆகிய 8 இடங்களில், கண்ணாடியிழை கேபிள் இணைப்புடன் அதிநவீன 4 ஜி செல்லிடப்பேசி கோபு ரங்கள் அமைக்கும் திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடங்கியுள்ளது.

    இத்திட்டப்பணிகள் நிறைவடைந்ததும், இதுவரை செல்லிடப்பேசி சேவை வசதியில்லாத அனைத்து மலை கிராம மக்களுக்கும் அதிநவீன செல்லிடப்பேசி வசதி கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×