என் மலர்tooltip icon

    சேலம்

    • 2022-ம் ஆண்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், பணம் செலுத்திய 130 விவசாயி களுக்கு 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்ப டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • ஆனால் இதுவரை அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம், தென்னங்குடி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2022-ம் ஆண்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், பணம் செலுத்திய 130 விவசாயி களுக்கு 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்ப டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இன்று ஆத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களுக்கு அரசு வழங்கிய ஆணையுடன் நேரில் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், முதல்-அமைச்சர் அறிவித்த விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தியும், கடந்த ஒரு ஆண்டுகளாக எங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதிகாரிகள், உத்தரவு வரவில்லை என கூறி வருகின்றனர்.

    உடனடியாக எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். கடந்த ஒரு வருட காலமாக இதற்காக அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். மாடுகளுக்கு கூட குடிதண்ணீர் இல்லா மல் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.  

    • சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோவில் சித்தி ரைத் தேர் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது.
    • மாலை சிறிய தேரில் ஆஞ்சநேய சாமியை, முக்கிய வீதி வழியாக பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சென்று பெரிய தேர் அருகில் கொண்டு சென்று நிறுத்தினர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககி ரியில் உள்ள சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோவில் சித்தி ரைத் தேர் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது.

    தினசரி இரவு சாமி அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், அன்னபக்ஷி, சிங்கம், அனுமந்தம், கருடம், சேஷம், யானை ஆகிய வாகனங்களில் வீதி உலா நடந்தது.

    7-ம் நாள் சாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 8-ம் நாள் குதிரை வாகனத்தில் வீதி உலா, 9-ம் நாளான நேற்று காலை சாமியை தேருக்கு கொண்டு சென்று அபிஷேக ஆராதனை செய்தனர். மாலை சிறிய தேரில் ஆஞ்சநேய சாமியை, முக்கிய வீதி வழியாக பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சென்று பெரிய தேர் அருகில் கொண்டு சென்று நிறுத்தினர்.

    தொடர்ந்து பெரிய தேரில் சென்னகேசவ பெருமாள் சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். இதில் முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான டி.எம்.செல்வகணபதி தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தேர்வீதி, மலையடிவாரம், முஸ்லீம்தெரு வழியாக இழுத்து சென்று, நிலை நிறுத்தினர். திருத்தேர் உற்சவத்தில், ஸ்ரீதேவி, பூதேவி உடன் சென்னகேசவப் பெருமாள் அருள்பாலித்தார்.

    விழாவில் சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, ஆர்.டி.ஓ(பொ) தணிக்காசலம், டி.எஸ்.பி ஆரோக்கியராஜ், தாசில்தார் அறிவுடைநம்பி, சங்ககிரி பேரூராட்சி மன்றத் தலைவர் மணிமொழி, துணைத்தலைவர் அருண்பிரபு, செயல்அ லுவலர் சுலைமான்சேட், அறநிலையத்துறை செயல் அலுவலர் சங்கரன், திருவிழா ஆலோசனை குழுவினர் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சுந்தரம், சங்ககிரி லாரி உரிமையா ளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி, சங்ககிரி பேரூர் தி.மு.க செயலாளர் முருகன், பக்காளியூர் சரவணன், சண்முகசுந்தரம் சுந்தரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைந்தது. இதனை அடுத்து பாலம் சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • பல இடங்களில் தடுப்பு களில் இரும்பு கம்பிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் காவிரி பாலம் மிகவும் பழமையான பாலம் ஆகும். இந்த பாலத்தின் வழியாக தான் ஆரம்ப காலத்தில் பஸ் போக்கு வரத்து மற்றும் கனரக போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த பாலம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைந்தது. இதனை அடுத்து பாலம் சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    கனரக வாகனங்கள், பஸ் உள்ளிட்டவை மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள புது பாலம் வழியாக சென்று, வருகிறது.

    இந்தப் பாலத்தின் இருபுறத்திலும் கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு சுற்றுலா வருப வர்கள் மற்றும் அந்த வழி யாக செல்பவர்கள், இந்த பாலத்தின் மீது நின்று காவிரி ஆற்றின் அழகினை ரசித்து செல்வர். இந்த நிலையில், பாலத்தின் தடுப்புகளில் உள்ள இரும்பு கம்பிகள் தற்போது சேதம் அடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் தடுப்பு களில் இரும்பு கம்பிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.

    எனவே சிறுவர்கள், பாலத்தின் மீது நின்றி ருக்கும்போது தவறி ஆற்றில் விழ வாய்ப்புகள் உள்ளது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் இதில் தவறி விழ வாய்ப்புள்ளது.

    நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இந்த பாலத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்களின் பாது காப்பினை உறுதி செய்ய வேண்டும் என, அந்த பகு தியைச் சேர்ந்தபொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாழப்பாடி பேரூராட்சியில், ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் நவீன ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
    • சேலம் மண்டல பேருராட்சி உதவி இயக்குநர் கணேஷ்ராம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில், ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் நவீன ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

    இதேபோல் ச.வாழப்பாடி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இத்திட்டப் பணிகளை, சேலம் மண்டல பேருராட்சி உதவி இயக்குநர் கணேஷ்ராம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இரு பணிகளையும் விரைந்து முடித்து, மக்கள் பயன் பட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது, வாழப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், உதவி பொறியாளர் தினேஷ்குமார், பேரூராட்சி தலைவர் கவிதா சக்கர வர்த்தி, துணைத்தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி மற்றும் பேரூராட்சி உறுப்பி னர்கள் உடனிருந்தனர்.

    • கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 3980 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6,700 கன அடியாக உயர்ந்தது.

    தொடர்ந்து இன்று காலையில் நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 6,712 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீருக்காக 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர் வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 101.62 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 101.94 அடியாக உயர்ந்தது.

    • மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்.எஸ்.சி.). மத்திய அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்து வருகிறது.
    • இதில் கடந்த தேர்வுகளின்ேபாது ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட இரு மொழிகளில் கணினி வழியாக தேர்வு நடத்த ப்பட்டது.

    சேலம்:

    மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்.எஸ்.சி.). மத்திய அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்து வருகிறது. இதில் கடந்த தேர்வுகளின்ேபாது ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட இரு மொழிகளில் கணினி வழியாக தேர்வு நடத்த ப்பட்டது.

    இந்த நிலையில் இந்திய அரசு, இனிமேல் தேர்வு களை மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என உத்த ரவிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான நட வடிக்கைகள் எடுத்துள்ளது.

    அதன்படி மல்டி-டாஸ்கிங் அல்லாத டெக்னிக்கல் அலுவலர் மற்றும் ஹவில்தார் பணியிடங்களுக்கான தேர்வு -2022 அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த தேர்வுக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர்.

    தற்போது இது ெதாடர்பாக ஒரு அறிக்கை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேர்வர் தங்களது பிராந்திய மொழியைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பிராந்திய மொழியில் கேள்விகளைப் கணினியில் பார்ப்பார். அதாவது தேர்வர் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றால் அவர் இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக தமிழ் மொழியில் கேள்விகளைப் பார்க்க முடியும் என்பது ஆகும்.

    ஒரு வேளை தேர்வர் எந்த பிராந்திய மொழியும் தேர்ந்தெடுக்க வில்லை என்றால், அவர்களுக்கு கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • கஞ்சமலை சித்தர் கோவில் சிறப்பு திருவிழா நடந்து வருகிறது.
    • இதை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி விநாயகர் ஊர்வலம் நடந்தது.

    காகாபாளையம்:

    இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர் கோவில் சிறப்பு திருவிழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி விநாயகர் ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் பொங்கல் வைப வம், ராகிகளி படையல் மற்றும் உருளுதண்டம் நடந்தது.

    நேற்று மதியம் காளியம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.மாலையில் தீ மிதித்தல் நடந்தது. பக்தர்கள் அதில் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து அன்னதானம், நீர் மோர் வழங்குதல் நடந்தது. பின்னர் நல்லணம்பட்டியை சேர்ந்த ஒருவருக்கு சித்தர்போல் அலங்காரம் செய்தனர். பின் அவரை ஒருவர் மாட்டுகயிறால் மூன்று முறை அடித்தார்.

    பின் அவரிடம் குருக்கள் எப்போது மழை வரும் என்று கேட்டதற்கு இன்னும் 3 நாட்களில் மழை வரும் என கூறினார். ஆண்டு தோறும் இவ்வாறு அருள்வாக்கு கேட்பதும், அவர் கூறியது போல் சுற்று வட்டாரத்தில் மழை பெய்வது வழக்கமான ஒன்றாகும்.

    • குள்ளம்பட்டி வாய்க்கால் பாலம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மினி ஆட்டோ மோதியதில் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்து தலையில் படுகாயம் அடைந்த முருகன் உயிரிழந்தார்.
    • காயம் அடைந்த நிர்மலா, மற்றும் 2 வயது குழந்தை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள மோட்டூர் காட்டுவளவு ஆவணியூரை சேர்ந்தவர் முருகன் (வயது 35). தறிதொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி காலை தனது மொபட்டில் மனைவி நிர்மலா (23) மற்றும் 2 வயது மகளுடன் வட்ராம்பாளையத்தில் இருந்து ஆவணியூரில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    குள்ளம்பட்டி வாய்க்கால் பாலம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மினி ஆட்டோ மோதியதில் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்து தலையில் படுகாயம் அடைந்த முருகன் உயிரிழந்தார். காயம் அடைந்த நிர்மலா, மற்றும் 2 வயது குழந்தை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த விபத்து குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய காவேரிப்பட்டி கிராமம் ஒக்கிலிப்பட்டி கீழ்மோட்டூ ரை சேர்ந்த அருணாசலம் (58) என்பவரை ைகது செய்தனர்.

    இது குறித்து சங்ககிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விபத்தை ஏற்படுத்திய மினி ஆட்டோ டிரைவர் அருணாசலத்திற்கு 3 ஆண்டு ெஜயில் தண்டனையும், ரூ.2500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

    • சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது.
    • நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்

    பட்டுள்ளது. அதே சமயத்தில் நேற்று 35 பேர் குணமடைந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டனர்.

    மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ள வர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் மருத்துவமனை களிலும், மற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    • தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பின்புறம் அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக மண் கடத்தல் நடைபெற்றது.
    • நேற்று பொதுமக்கள் அங்கு சென்று மண் கடத்திய டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை ஆகியவற்றை சிறைபிடித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள சின்னகவுண்டாபுரம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பின்புறம் அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக மண் கடத்தல் நடைபெற்றது. இதையடுத்து நேற்று பொதுமக்கள் அங்கு சென்று மண் கடத்திய டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை ஆகியவற்றை சிறைபிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி, காரிப்பட்டி வருவாய் இன்ஸ்பெக்டர் அன்பு மற்றும் போலீசார் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில் அரசு நிலத்தில் மண்ணை வெட்டி எடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய 4 டிப்பர் லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி மிக சிறப்பு வாய்ந்தது ஆகும்.
    • இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) சித்ரா பவுர்ணமி வருகிறது.

    சேலம்:

    சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி மிக சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) சித்ரா பவுர்ணமி வருகிறது. இதை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து திரு வண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. சேலம் புதிய பஸ் நிலையம், ஆத்தூர் பஸ் நிலையங்களில் திரு வண்ணாமலைக்கு மொத்தம் 100 பஸ்கள் இயக்கப்படு கின்றன. இதேபோல் கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் தர்மபுரியில் இருந்து மொத்தம் 100 பஸ்கள் இயக்கப்படுகிறன. இன்று காலை முதலே பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகு றித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும் போது, சித்ரா பவுணர்மியை முன்னிட்டு சேலம் கோட்டத்துக்குட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    இன்று முதல் வருகிற 6-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. கூட்ட நெரிசலை பொறுத்து கூடுதல் பஸ்க ளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கூட்ட நெரிசலை தவிர்த்து பக்தர்கள் பஸ்களில் பயணம் செய்யலாம் என்றனர்.

    • பவளத்தானுர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.
    • அவர்களிடம் 14 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலம் இருப்ப தும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள பவளத்தானுர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.

    அவர்க பாப்பம்பாடி பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கார்த்திக் ராஜா (23), பாரகல்லூர் பகுதியை சேர்ந்த மணி மகன் மணிகண்டன் (22) என தெரியவந்தது. அவர்களிடம் 14 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலம் இருப்ப தும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2 பேரை யும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கைப்பற்றினர்.

    ×