என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் அரிசிபாளையம் ஸ்ரீபலப்பட்டறை காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா
- அரிசிபாளையம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பலப்பட்டறை காளியம்மன், ஸ்ரீ வீரபத்திரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
- அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மாலையில் தாய்வீட்டு சீர் அழைத்தல், இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
சேலம்:
சேலம் அரிசிபாளையம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பலப்பட்டறை காளியம்மன், ஸ்ரீ வீரபத்திரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று அம்மனுக்கு பால் குட ஊர்வலமும், மதியம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மாலையில் தாய்வீட்டு சீர் அழைத்தல், இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று காலை முனியப்பனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை 5 மணிக்கு தெப்பகுளம் விநாயகர் கோவிலில் இருந்து சக்திகரகம், பூங்கரகம், காளிவேடம், அலகு குத்துதல், அக்னிசட்டி திருவீதி உலா நடைபெறுகிறது.
நாளை (வியாழக்கிழமை) பகல் 12 தணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்தல், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனையும், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு கும்ப பூஜையும் நடக்கிறது.
5-ந்தேதி காலை 10 மணிக்கு 108 வாசனை திரவியங்களுடன் அம்மனுக்கு சிறப்பு மஹா அபிசேகமும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ சிறப்பு அலங்காரமும், ஸ்ரீ பலப்பட்டறை காளியம்மன் இறையருள் நண்பர்கள் குழு, சாமி தூக்கும் நண்பர்கள் குழு சார்பில் அன்னதானமும் நடைபெறுகிறது.






