search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகுடஞ்சாவடியில் மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா
    X

    மளிகை கடைக்காரர்கள் சங்கம் சார்பில் அம்மனுக்கு மெரவனை நடைபெற்ற போது எடுத்த படம்.

    மகுடஞ்சாவடியில் மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா

    • மகுடஞ்சாவடி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 19-ந்தேதி பூச்சாட்டுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 10-ந்தேதி ஊர் மெரவனையும் நடைபெற உள்ளது.

    மகுடஞ்சாவடி:

    சேலம் அருகே மகுடஞ்சாவடி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 19-ந்தேதி பூச்சாட்டுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மகுடஞ்சாவடி மளிகை கடைக்காரர்கள் சங்கம் சார்பில் மெரவணை நடைபெற்றது.

    இன்று பருத்தி வியாபாரிகள் சங்கம் சார்பிலும், நாளை (வியாழக்கிழமை) சிம்ம வாகனத்தில் அம்மனுக்கு மெரவணை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் அம்மனுக்கு திருக்கல்யாணமும், மாலை பொங்கல் பண்டிகை, ரத உற்சவம் நடைபெற உள்ளது. 7-ந்தேதி வெற்றிலை வியாபாரிகள் சங்கம் சார்பிலும், 8-ந்தேதி அகரம் வெள்ளம் செட்டியார் சங்கம் மற்றும் அரிசி வியாபாரிகள் சங்கம் சார்பிலும், 10-ந்தேதி ஊர் மெரவனையும் நடைபெற உள்ளது. 11-ந்தேதி மஞ்சள் நீராட்டமும் அம்மன் குடிபுகுதலும் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பட்டினை தர்மகர்த்தாக்கள், அறங்காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×