என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரத்தில் 16-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
- இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவ னத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்து கொள்ளலாம். அதே போல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப் படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக் கேற்ப தனியார்துறை நிறுவ னங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற 16-ந்தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறு வதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படுமெனவும், மேலும் தனியார்துறை நிறுவனங்கள்மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளை ஞர்களும் பயன் பெறலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- தொண்டி அருகே சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
- 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டி
தொண்டி அருகே வட்டாணம் சமுதாயக் கூடத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினம் திட்ட மேலாளர் சந்திர எபினேசர் தலை மையில் கொண்டா டப்பட்டது. வட்டாணம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுந்தாயி முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் குந்தப்பன் வரவேற்று பேசினார். பஞ்சாயத்து தலைவர்கள் ராமநாதன் மற்றும் மோகன் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
- முதுகுளத்தூரில் 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- அரசு வேலை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
முதுகுளத்தூர்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முதுகுளத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குழுத்தலைவர் சண்முகையா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் கே.கணேசன், மாவட்டத் தலைவர் என்.கலையரசன், தாலுகா செயலாளர் பி.அங்குதான், தாலுகா பொருளாளர் வி.முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு செயலாளர் வி.முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர் பேரூராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வேலையின்றி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர். அடிப்படை வசதிக்கே கஷ்டப்படும் அவர்களுக்கு அரசு 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் அரசு வேலை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாநில செயலாளர் சங்கர் தலைமையில் துணை வட்டாட்சியரிடமும், பேரூராட்சி அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
- அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- இத்தகையை நடவடிக்கைகள் மூலம் பா.ஜனதாவின் கனவு நனவாகாது என்றார்.
ராமநாதபுரம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறியதாவது:-
அரசியல் எதிரிகள் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை ஏவி விடுவது ஒன்றிய பா.ஜனதா அரசின் வழக்கமாக இருந்து வருகிறது. அரசியல் சட்டத்தையும் மாநில உரிமைகளையும் மத்திய அரசு காலில்போட்டு மிதித்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் உள்ளது. இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். இது அமலாக்கத்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். ஒன்றிய அரசின் அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடாகவே இச்செயல் அமைந்துள்ளது. தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனையும் எதேச்சதிகாரத்தின் உச்சமாக உள்ளது. இத்தகையை நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் வலிமையடையலாம் என்ற பா.ஜனதாவின் கனவு நனவாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பனைக்குளம், உச்சிப்புளி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை ராமநாதபுரம் (பொறுப்பு) உதவி செயற்பொறியாளர்/ ஊரகம் சோம சுந்தரம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் உள்ள பனைக்குளம் உயர் மின்பாதையில் நாளை (15-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே ஆற்றாங்கரை, அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, தேர்போகி மற்றும் அத்தியூத்து ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
இதே போல் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் உள்ள கீழ நாகாச்சி உயர் மின்பாதையில் நாளை (15-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ். கே. வலசை, ஆகிய மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
இந்த தகவலை ராமநாதபுரம் (பொறுப்பு) உதவி செயற்பொறியாளர்/ ஊரகம் சோம சுந்தரம் தெரிவித்துள்ளார்.
- ராமநாதபுரத்தில் பருத்தி பஞ்சு விலை சரிவால் கிலோ ரூ.50க்கு விற்பனை விற்பனையானது.
- போதிய மழை இல்லாததால் சீசனில் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் கண்மாய், ஊருணி பாசனத்தில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. திருஉத்தர கோசமங்கை, சத்திரக்குடி, பரமக்குடி, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் பகுதிகளில் அதிகளவில் இந்த ஆண்டு மாவட்டத்தில் பருத்தி சாகுபடி நடக்கிறது. போதிய மழை இல்லாததால் சீசனில் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் வெடித்த பருத்தி தரம் குறைந்துள்ளதால் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மாவட்டத்தில் போதிய மழையின்றி பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் பருத்தி தரமின்றி உள்ளதுடன் பஞ்சு விலை சரிவடைந்துள்ளது. கடந்தாண்டு கிலோ ரூ.100-க்கு விற்ற பஞ்சு தற்போது ரூ.50க்கு விலை போகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ராமநாதபுரம் கமிஷன் மண்டியில் விற்கப் படும் பஞ்சு மொத்த வியா பாரிகள் மூலம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் அனுப்பி வைக்கப்படுகிறது. போதிய தண்ணீரின்றி பூக்கள் உதிர்ந்தும், காய்களின் பருமன் குறைந்தும் உள்ளது.
இதனால் கடந்தாண்டு கிலோ ரூ.100-க்கு விற்ற பஞ்சு தற்போது ரூ.47 முதல் 50-க்கு விலை போகிறது. இந்த ஆண்டு பருத்தி சாகுபடியில் மகசூல் குறைந்து எதிர்பார்த்த விலையும் கிடைக்காமல் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.
- கீழக்கரையில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
- பஷீர் அகமது தலைமை தாங்குகிறார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கமுதி பால்கடை அருகில் மாவட்ட செய லாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆலோசனையின் படி தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெரு முனை பிரசார கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. நகர் செயலாளர் எஸ்.ஏ.ஹெச்.பஷீர் அகமது தலைமை தாங்குகிறார்.
இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் இன்பா ரகு,மதுரை ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.நகர் இளைஞரணி அமைப்பாளர், கீழக்கரை நகர் மன்ற துணைத்தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளருமான வக்கீல் ஹமீது சுல்தான், நகர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எபன், சுபியான், அல்லாபக்ஸ், பயாஸ்தீன், நயீம் உள்ளிட்டோர் வரவேற்று பேசுகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசின் 2 ஆண்டு சாதனை குறித்து பேசுகின்றனர்.இதில் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் முகம்மது ஹனிபா, தொழி லாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அப்துல் காதர், அவைத் தலைவர் ஜமால் பாரூக்,நகர் துணைச் செயலாளர்கள் ஜெய்னுதீன், முனீஸ்வரன், பாண்டியம்மாள்,நகர் பொருளாளர் சித்திக், மாவட்ட பிரதிநிதிகள் தவ்பீக் ராஜா, லதா கென்னடி, நகர் மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், முன்னாள் இளை ஞரணி துணை அமைப்பாளர் கெஜி (எ) கஜேந்திரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி மரைக்கா யர் உள்ளிட்ட நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள்,வார்டு இளைஞரணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
முடிவில் நகர் இளைஞரணி துணை அமைப்பாளர் 17-வது வார்டு கவுன்சிலர் செய்யது முகம்மது பயாஸ்தீன் நன்றி கூறுகிறார். இதில் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு நகர் இளைஞரணி அமைப்பா ளர் வக்கீல் ஹமீது சுல்தான் அழைப்பு விடுத்துள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு சிகிச்சை முகாம் 25-ந் தேதி வரை நடக்கிறது.
- திட்டத்தினை சிறப்புற நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ம் ஆண்டின் நோக்கம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2016-ல் 39 ஆக இருந்ததை 2025-ம் ஆண்டில் 23 ஆக குறைப்ப தாகும். 2023-ம் ஆண்டிற்குள் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 10 ஆக குறைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் இலக்கு ஆகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறறுப்போக்கு, 5 வயதிற்குட்பட்ட குழந்தை களின் இறப்பிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது. நம் நாட்டில் ஆண்டிற்கு சுமார் 1 இலட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து போகிறார்கள்.
ஏழை, எளிய மக்களின் குழந்தைகளே பெரும்பாலும் வயிற்றுப்போக்கினால் இறக்க நேரிடுகிறது. இவ்வாறு ஏற்படுகின்ற 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பினைத் தடுக்கும் விதமாக நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 25-ந் தேதி வரை இருவார காலத்திற்கு தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
பொது சுகாதாரத்துறையு டன் இணைந்து தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் நீரகற்று வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல்வாழ்வு, கிராம பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பள்ளிக்கல்வி ஆகிய துறைகள் இணைந்து இத்திட்டத்தினை சிறப்புற நடத்திட திட்டமிடப் பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 13 ஆயிரத்து 577 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஓ.ஆர்.எஸ் பொட்டலம் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் இத்திட்டம் நடைபெறும். இருவார காலங்களில் வழங்கப்படவுள்ளது.
அனைத்து ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கைகழுவுதல் மூலம் கை சுத்தம் பேணுவது பற்றிய செயல்முறை விளக்கம் வழங்கப்பட உள்ளது. ஓ.ஆர்.எஸ் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வயிற்றுப்போக்கிற்கு மிகவும் சரியான சிகிச்சை முறையாகும். ஆகவே பொதுமக்கள், இத்திட்டதில் பயணியாற்றும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பினை வழங்கி, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்திடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமேசுவரம் கோவிலின் உள்பிரகாரங்களில் கம்பி வேலி அமைப்பதை நிறுத்த வேண்டும்.
- அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம்:
தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறியும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கோவில் இணை ஆணையர் மாரியப்பனை கண்டித்தும், அவரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டி வலியுறுத்தியும் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் இன்று கோவில் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
இதில் மக்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் போஸ், அ.தி.மு.க. நகர் செயலாளர் அர்ச்சுனன், நாம் தமிழர் கட்சி மாவட்ட பொறுப்பாளர் இளங்கோ, இந்திய தேசிய காங்கிரஸ் நகர் தலைவர் ராஜீவ் காந்தி, பாரதிய ஜனதா கட்சி நகர் தலைவர் ஸ்ரீதர், இந்து மக்கள் கட்சி நகர் தலைவர் பிரபாகரன், விசுவ இந்து பரிசத் பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம் கோவிலின் உள்பிரகாரங்களில் கம்பி வேலி அமைப்பதை நிறுத்த வேண்டும். உள்ளூரை சேர்ந்த சீர் பாத ஊழியர்களை வெளியேற்றக் கூடாது. வெயில் காலங்களில் பக்தர்களுக்கு வசதியாக நிழல் கூரை அமைக்க வேண்டும். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தரிசன பாதை அமைக்க வேண்டும். 22 தீர்த்த கிணறுகளுக்கு செல்லும் பாதைகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.
- 19-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அல் குத்பு சுல்த்தான் செய்யது பாதுஷா நாயகம் ஷஹீது ஒலியுல்லாஹ் (ரலி) அவர்களின் தர்காவில் கடந்த மாதம் மே 21-ந்தேதி மவுலுது (புகழ்மாலை) ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா தொடங்கியது. நேற்று மாலை யானை, 21 குதிரை ஊர்வலத்துடன் சென்று தர்காவில் போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதிகாலை ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு தர்கா வந்தடைந்தது. தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையை மாவட்ட காஜி சலாஹுத்தீன் ஓதினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான், நவாஸ் கனி எம்.பி., மாவட்ட பா.ஜனதா தலைவர் தரணி முருகேசன் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஏர்வாடி சந்தனக்கூடு உருவாக்குவதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்பதால் ஆண்டுதோறும் மத நல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர். காலை 6 மணிக்கு மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்கா வளாகத்தை வந்தடைந்தது.
தற்போது தர்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர். முன்ன தாக தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி, போர்வையை போர்த்தினர். அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.
மதுரை, கோவை, திருச்சி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருகிற 19-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.
- துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
- இப்பகுதியில் இடியும் நிலையில் உள்ள அங்கன் வாடி மையத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
சாயல்குடி
சாயல்குடி பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பின ரும், பேரூராட்சி துணை சேர்மனுமான மணி மேகலை பாக்கியராஜ் கூறியதாவது:-
வி.வி.ஆர். நகர் 13-வது வார்டு பகுதியில் காமராஜர் சிலைக்கு பின்புறம், வி.வி.ஆர்.நகர் லால்பகதூர் சாஸ்திரி மேற்கு தெரு, சாயல்குடி-செவல்பட்டி சாலையில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் சாலை, சுயம்புலிங்கம் கோவில் பகுதியில் இருந்து செல்லும் சாலையில் பேவர் பிளாக் சாலையாக அமைக்கப் பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் பகுதிக்கு செல்லும் சாலை தார்சாலை யாக அமைக்கப்பட்டுள்ளது.
வி.வி.ஆர்.நகர், ராஜீவ் நகர், லால்பகதூர் சாஸ்திரி தெரு பகுதியில் ரூ.1.5லட்சத்தில் 3 சூரிய ஒளி மின்சார விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
வி.வி.ஆர்.நகர், லால்பகதூர் சாஸ்திரி கிழக்கு மற்றும் மேற்கு தெருவில் 15 வீடுகளுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர், பேரூராட்சி களின் உதவி இயக்குனர், பேரூராட்சி தலைவர் மாரியப்பன், செயல் அலுவலர் சேகர் ஆகியோர் நிதி ஒதுக்கி தரும் பட் சத்தில் வி.வி.ஆர்.நகர், லால்பகதூர் சாஸ்திரி தெருவில் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்ய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும்.
வி.வி.ஆர்.நகர், ஆரோக்கியபுரம், சுயம்புலிங்கம் கோவில் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையை நீக்க ஆரோக்கியபுரம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கவேண்டும். தெரு விளக்குகள், பழுதான மின் கம்பிகள், வயர்கள் சரி செய்யப்படும். வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு முழுமையாக பைப் லைன் அமைத்து தண்ணீர் வழங்கப்படும். இப்பகுதியில் இடியும் நிலையில் உள்ள அங்கன் வாடி மையத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
குடிநீர் இணைப்பு பெறுவதற்கான தொகை ரூ.9ஆயிரமாக உள்ளது. எனவே டெபாசிட் தொகையை பாதியாக குறைத்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.வி.ஆர்.நகர் பத்திரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஊரணியை தூர்வாரி முள்வேலி அமைத்து, பேவர்பிளாக் சாலையும், வி.வி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் கிழக்கு கடற்ரை சாலை பகுதியில் வேகத்தடையும் அமைக்க வேண்டும். வி.வி.ஆர்.நகர் பகுதி தெருக்களுக்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி, பட்டிவீரன்பட்டி சவுந்தர பாண்டியன் நாடார் ஆகியோர் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வி.வி.ஆர்.நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும். செவல்பட்டி சாலையில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் சாலைகளை பேவர்பிளாக் சாலையாக அமைக்க வேண்டும்.
வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை தேவைகளை சரி செய்ய ராமதாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மூலம் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று நட வடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமநாதபுரத்தில் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு குவிந்தது.
- 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சியை பெற்றனர்.
ராமநாதபுரம்
சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமயநாதபுரம் மாவட்டத் தலைவரும்,ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசனுக்கு சிறந்த இயக்க வாதிக்கான விருதை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். மேலும் அவர் பணியாற்றும் ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2022-2023-ம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சியை பெற்றனர். பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முருகேசனை பாராட்டி பொறுப்பு தலைமையாசிரியர் காஜாசெரீப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.






