search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்-துணை சேர்மன் கோரிக்கை
    X

    துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ்

    கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்-துணை சேர்மன் கோரிக்கை

    • துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • இப்பகுதியில் இடியும் நிலையில் உள்ள அங்கன் வாடி மையத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    சாயல்குடி

    சாயல்குடி பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பின ரும், பேரூராட்சி துணை சேர்மனுமான மணி மேகலை பாக்கியராஜ் கூறியதாவது:-

    வி.வி.ஆர். நகர் 13-வது வார்டு பகுதியில் காமராஜர் சிலைக்கு பின்புறம், வி.வி.ஆர்.நகர் லால்பகதூர் சாஸ்திரி மேற்கு தெரு, சாயல்குடி-செவல்பட்டி சாலையில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் சாலை, சுயம்புலிங்கம் கோவில் பகுதியில் இருந்து செல்லும் சாலையில் பேவர் பிளாக் சாலையாக அமைக்கப் பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் பகுதிக்கு செல்லும் சாலை தார்சாலை யாக அமைக்கப்பட்டுள்ளது.

    வி.வி.ஆர்.நகர், ராஜீவ் நகர், லால்பகதூர் சாஸ்திரி தெரு பகுதியில் ரூ.1.5லட்சத்தில் 3 சூரிய ஒளி மின்சார விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

    வி.வி.ஆர்.நகர், லால்பகதூர் சாஸ்திரி கிழக்கு மற்றும் மேற்கு தெருவில் 15 வீடுகளுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர், பேரூராட்சி களின் உதவி இயக்குனர், பேரூராட்சி தலைவர் மாரியப்பன், செயல் அலுவலர் சேகர் ஆகியோர் நிதி ஒதுக்கி தரும் பட் சத்தில் வி.வி.ஆர்.நகர், லால்பகதூர் சாஸ்திரி தெருவில் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்ய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும்.

    வி.வி.ஆர்.நகர், ஆரோக்கியபுரம், சுயம்புலிங்கம் கோவில் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையை நீக்க ஆரோக்கியபுரம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கவேண்டும். தெரு விளக்குகள், பழுதான மின் கம்பிகள், வயர்கள் சரி செய்யப்படும். வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு முழுமையாக பைப் லைன் அமைத்து தண்ணீர் வழங்கப்படும். இப்பகுதியில் இடியும் நிலையில் உள்ள அங்கன் வாடி மையத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    குடிநீர் இணைப்பு பெறுவதற்கான தொகை ரூ.9ஆயிரமாக உள்ளது. எனவே டெபாசிட் தொகையை பாதியாக குறைத்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.வி.ஆர்.நகர் பத்திரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஊரணியை தூர்வாரி முள்வேலி அமைத்து, பேவர்பிளாக் சாலையும், வி.வி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் கிழக்கு கடற்ரை சாலை பகுதியில் வேகத்தடையும் அமைக்க வேண்டும். வி.வி.ஆர்.நகர் பகுதி தெருக்களுக்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி, பட்டிவீரன்பட்டி சவுந்தர பாண்டியன் நாடார் ஆகியோர் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வி.வி.ஆர்.நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும். செவல்பட்டி சாலையில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் சாலைகளை பேவர்பிளாக் சாலையாக அமைக்க வேண்டும்.

    வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை தேவைகளை சரி செய்ய ராமதாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மூலம் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று நட வடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×