search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு சிகிச்சை முகாம்
    X

    குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு சிகிச்சை முகாம்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு சிகிச்சை முகாம் 25-ந் தேதி வரை நடக்கிறது.
    • திட்டத்தினை சிறப்புற நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ம் ஆண்டின் நோக்கம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2016-ல் 39 ஆக இருந்ததை 2025-ம் ஆண்டில் 23 ஆக குறைப்ப தாகும். 2023-ம் ஆண்டிற்குள் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 10 ஆக குறைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் இலக்கு ஆகும்.

    குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறறுப்போக்கு, 5 வயதிற்குட்பட்ட குழந்தை களின் இறப்பிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது. நம் நாட்டில் ஆண்டிற்கு சுமார் 1 இலட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து போகிறார்கள்.

    ஏழை, எளிய மக்களின் குழந்தைகளே பெரும்பாலும் வயிற்றுப்போக்கினால் இறக்க நேரிடுகிறது. இவ்வாறு ஏற்படுகின்ற 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பினைத் தடுக்கும் விதமாக நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 25-ந் தேதி வரை இருவார காலத்திற்கு தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    பொது சுகாதாரத்துறையு டன் இணைந்து தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் நீரகற்று வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல்வாழ்வு, கிராம பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பள்ளிக்கல்வி ஆகிய துறைகள் இணைந்து இத்திட்டத்தினை சிறப்புற நடத்திட திட்டமிடப் பட்டுள்ளது.

    நமது மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 13 ஆயிரத்து 577 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஓ.ஆர்.எஸ் பொட்டலம் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் இத்திட்டம் நடைபெறும். இருவார காலங்களில் வழங்கப்படவுள்ளது.

    அனைத்து ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கைகழுவுதல் மூலம் கை சுத்தம் பேணுவது பற்றிய செயல்முறை விளக்கம் வழங்கப்பட உள்ளது. ஓ.ஆர்.எஸ் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வயிற்றுப்போக்கிற்கு மிகவும் சரியான சிகிச்சை முறையாகும். ஆகவே பொதுமக்கள், இத்திட்டதில் பயணியாற்றும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பினை வழங்கி, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்திடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×