என் மலர்
ராமநாதபுரம்
- மரத்தடியில் மாணவர்கள் கல்வி கற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமநாதபுரம், மண்ட பம், திருவாடானை, கமுதி, ராமேசுவரம் உள்பட பல்வேறு தாலுகாவில் உள்ள 25-க்கும் அதிகமான அரசு மேல்நிலைப்பள்ளி கள் உள்ளன. இங்கு ஆயிரக் கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகி றார்கள். ஆனால் பள்ளி களில் 100-க்கும் அதிகமான வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் படித்து வருகின்றனர்.
இங்குள்ள மாணவர்கள் வகுப்பறை வசதி இல்லா ததால் வெயில், மழையில் மரத்தடியிலும், பள்ளிகளின் வராண்டாக்களிலும் அமர்ந்து பாடம் படிக்கும் பரிதாப நிலை உள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரி கூறுகையில், வகுப்பறைகள் இல்லாத மேல்நிலைபள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டி டங்கள் கட்ட அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரவு கிடைத்ததும் கூடுதல் வகுப்பறை கட்டி டங்கள் கட்டும் பணி தொடங்கப்படும் என்றார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொண்டி
தொண்டி அருகே அன்ன பூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தின் போது நந்திக்கு பால், பழம் பன்னீர், சந்தனம், இளநீர், விபூதி, தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
மேலும் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன் தெட்சிணா முர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. வாசு, கருப்பசாமி ஆகியோர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதே போல் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், தளிர் மருங்கூர் உலகநாதர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
- நரிக்குறவர் இன மக்களின் சார்பாக உதவி ஆட்சியருக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, நாராயணபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஜாதி பிரிவில் இருந்து வருகின்றனர். கல்வி மற்றும் அரசு உதவிகளை பெறுவதற்காக பழங்குடியினர் (எஸ்.டி) பிரிவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக கமுதி நாராயணபுரத்தை சேர்த்த 61 பேருக்கு சாதி சான்றிதழ்களை பரமக்குடி உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல் வழங்கினார்.
அப்போது நரிக்குறவர் இன மக்களின் சார்பாக உதவி ஆட்சியருக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கமுதி வட்டாட்சியர் சேதுராமன், உதவி ஆட்சியர் நேர்முக உதவியாளர் வரதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- கிராம மக்கள் தங்களின் தேவைகள் குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டரும், வருவாய் தீர்வாய அலுவலரமான விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 52 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கி னார். பின்னர் அவர் பேசியதாவது:-
கடலாடி வட்டத்தில் 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சியில் 43 கிரா மங்களை சேர்ந்த வர்களிடம் இருந்து 301 மனுக்கள் பெறப்பட் டுள்ளது.
இதில் 52 மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிடும் வகையில் பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, புலப்படம் நான்குமால், பட்டா மாறுதல் உட்பிரிவு, இலவச வீட்டு மனை பட்டா தொடர்பான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
197 மனுக்கள் வருவாய்த் துறையின் மேல் நடவடிக்கை யில் உள்ளது. 52 மனுக்கள் பிற துறை தொடர்பான கோரிக்கைகள் என்பதால் அந்தந்த துறைகளுக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பொதுமக்களிட மிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வு வழங்கப்படும்.
பொதுவாக ஆண்டுதோறும் நடைபெறும் ஜமாபந்தி அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாய அலுவலர் தலைமையில் நடைபெறுவதால், அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்களின் தேவைகள் குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் அலுவலக மேலாளர் ஜெயமணி, கடலாடி வட்டாட்சியர் ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 வரை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.
பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு, ஜவஹர் அலிகான் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் திருநாவுக்கரசு, வார்டு உறுப்பினர்கள் சல்மா பீவி, மஹ்ஜபின் சல்மா பீவி முன்னிலை வகித்தனர்.
பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ஜெயந்தன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பழைய மாணவர்கள் கல்வியின் முக்கியத்த்துவம் குறித்த வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஊர்வலம் வந்தனர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா நன்றி கூறினார்.
- ராமநாதபுரம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது.
- முடிவில் சின்னக்கடை கான்சாகிப் அறக்கட்டளை சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கர்ணன், வட்டார கல்வி அலுவலர் ராமநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆசிரியர் பயிற்றுனர் முருகவேல் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.தலைமையாசிரியர் ஜெயந்தி வரவேற்றார்.
புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேனி சை.அக்கீம் (ராமநாதபுரம் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர்),காளீஸ்வரி மாலை அணிவித்து இனிப்பு மற்றும் பேனா, பென்சில் வழங்கி வரவேற்றனர்.
ஆசிரியர்கள் மாதவி, பழனியம்மாள், உமா மகேஸ்வரி, குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சின்னக்கடை கான்சாகிப் அறக்கட்டளை சார்பில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கினர்.
- கடலாடி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் இயங்கி வந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை தனிச்சியம் கிராமத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டது.
இதை கண்டித்து டி.கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் வாலிநோக்கம் விலக்கு அருகே இன்று காலை சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகதாசன் மற்றும் வாலிநோக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் பொதுமக்கள் கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாக வந்து டி கிருஷ்ணாபுரம் கிராமத்திலேயே ஊராட்சி அலுவலக கட்டிடம் இயங்கும் என தெரிவித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பரமக்குடி அருகே புதிய பேவர் பிளாக் சாலையை முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பரமக்குடி
பரமக்குடி அருகே உள்ள வேந்தோனி ஊராட்சிக்குட்பட்ட முத்துச்செல்லாபுரம் கிராமத்தில் சர்ச் முன்பகுதியில் தண்ணீர் தேங்குவதால் வழிபாடு செய்வதற்கும், தேர் செல்லும் சாலை மேடு பள்ளமாக இருப்பதால் விழா காலங்களில் தேர் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.
ஆகையால் சர்ச் முன் பகுதி மற்றும் தேர் செல்லும் பாதையில் சாலைகள் அமைத்துத் தருமாறு முத்துச்செல்லா புரம் கிராம மக்கள் முருகேசன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து முருகேசன் எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைத்து அதனை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி முன்னாள் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், கிளை செயலாளர் சவரிமுத்து, இளைஞ ரணி அந்தோனிதாஸ், கிளை நிர்வாகிகள் உலகநாதன், மாரிமுத்து, மகளிர் அணி அல்போன்ஸ்சா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் தேக்கி வைத்த வைகை தண்ணீரால் 2-ம் போக நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது.
- 2-ம் போக நெல் சாகுபடிக்காக பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
ராமநாதபுரம்
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் தற்போது வரை ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான பகுதியாகவே இருந்து வருகிறது. வட கிழக்கு பருவமழை காலத்தில் தான் நெல் விவசாயத்தை விவசாயிகள் எதிர்பார்ப்புடன் தொடங்குகின்றனர்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை இல்லாததால் நெல் விவசாயம் அதிக பாதிப்பை சந்தித்தது. மழை பெய்யாத தால் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகியது. பெரும்பாலான ஊர்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டிருந்தாலும் வைகை அணையில் இருந்து வந்த வைகை தண்ணீரால் ஒரு சில கிராமங்களில் நெல் விவசாயம் காப்பாற்றப்பட்டது.
திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, களக்குடி, சத்திரக்குடி, நல்லாங்குடி, ஆர்.காவனூர் உள்ளிட்ட கிராமங்களில் வைகை தண்ணீர் வரத்தால் முதல் போக நெல் சாகுபடி நன்றாக இருந்தது.
இந்த நிலையில் வைகை அணையில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய், களக்குடி கண்மாய், நல்லாங்குடி, மேலச்சீத்தை உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள கண்மாய்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி இந்த கிராமங்களில் விவசாயிகள் இந்த ஆண்டு 2-ம் போக நெல் விவசாய பணிகளை தொடங்கி ஆர்வமுடன் ஈடுபட்டனர்.
இதில் களக்குடி, மேலச்சீத்தை, நல்லாங்குடி, சத்திரக்குடி உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளன.
இதுபற்றி களக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், இதுவரை களக்குடி கிராமத்தில் முதல் போக நெல் விவசாய பணிகளை மட்டுமே செய்துள்ளோம். முதல் முறையாக இந்த ஆண்டுதான் 2-ம் போக நெல் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிேறாம். வைகை தண்ணீரால் தான் இந்த ஆண்டு முதல் போக நெல் சாகுபடி விளைச்சல் அமோகமாக இருந்ததுடன் 2-ம் போக நெல் சாகுபடி விவசா யத்திலும் ஈடுபட்டு வருகிேறாம்.
இன்னும் ஒரு மாதத்தில் 2-ம் போக நெல் சாகுபடிக்காக பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- இதனை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் எக்ககுடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 1 பயனாளி களுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பீட்டிலும், விதவை உதவித்தொகை 4 பயனாளி களுக்கு ரூ.48 ஆயிரம் மதிப்பீட்டிலும், உட்பிரிவு பட்டா மாறுதல் 6 பயனாளி களுக்கு, முழப்புலம் பட்டா மாறுதல் 5 பயனாளிகளுக்கும், இலவச வீட்டு மனைப்பட்டா 27 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலும், இலவச வீட்டுமனைப்பட்டா 4 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டிலும், இலவச தையல் எந்திரம் 6 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரத்து 952 மதிப்பீட்டிலும், ஊரணி தூர்வாரும் திட்டப்பணிக்கு ரூ.22 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலும், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்று வழங்குதல் 5 பயனாளிகளுக்கு ரூ.600 மதிப்பீட்டிலும் வழங்கினார். இந்த திட்டங்கள் உள்பட மொத்தம் 102 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 17 ஆயிரத்து 713 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாரிசெல்வி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் புல்லாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தடைகாலங்களில் படகு, மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
- 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பாம்பன் இறங்குபிடி தளம் இன்று மீனவர்களின் வருகையால் களைகட்டியது.
ராமேசுவரம்:
தமிழகத்தில் வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்க மத்திய-மாநில அரசுகள் தடை விதித்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கியது. இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.
தடை காலங்களில் படகு, மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். சிலர் குடும்ப சூழ்நிலை கருதி வேறு வேலைகளுக்கும் சென்றனர்.
இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நேற்று இரவுடன் முடிவடைந்தது. இதையடுத்து பாம்பன் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பாம்பன் இறங்குபிடி தளம் இன்று மீனவர்களின் வருகையால் களைகட்டியது.
தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்வதால் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என பாம்பன் மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக ராமேசுவரத்தை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும், இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. எனவே மீன் பிடிப்பதற்கு உகந்த சூழ்நிலை இல்லை என்பதால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதன் காரணமாக தடைகாலம் முடிந்த நிலையிலும் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் ராமேசுவரம் மீனவர்களுக்கு இன்று வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எனினும் கடல் காற்று குறைந்து 17-ந்தேதி இயல்புநிலை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினத்தில் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல உள்ளனர். அதற்கான முன்னேற்பாடு பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- 1½ லட்சம் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
- திருகோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.
சிவகங்கை
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே உள்ள திருகோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகள் தரமான கல்வி பெற பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு சீருடை, காலணி, புத்த கப்பை, பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில், வண்ணக்கிரையான்கள், சதுரங்கப்பலகை, கணித உபகரணப்பெட்டி, மிதிவண்டி மற்றும் மடிக்கணினி போன்ற பல்வேறு வகையான நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 1,117 அரசுப்பள்ளிகள் மற்றும் 234 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 1,351 பள்ளிகள் உள்ளன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 1லட்சத்து 49 ஆயிரத்து 681 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநான், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி, திருக்கோஷ்டியூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






